கக்குவான் இருமல் (பெர்டுஸிஸ்) என்றால் என்ன?
பெர்டுஸிஸ் என்றும் அழைக்கப்படும் கக்குவான் இருமல் என்பது தீவிரமாகத் தொற்றும் தன்மையடைய பாக்டீரியா (நுண்ணுயிர்) நோய்த் தொற்றாகும். இது பெர்டெடெல்லா பெர்டுஸிஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இது அனைத்து வயதினரையும் பாதிக்கக்கூடியதாகும். ஆனால் தடுப்பூசி போடப்படாத கைக்குழந்தைகள், இந்த நோய்த் தொற்றால் பொதுவாக பாதிக்கப்படக்கூடியவர்களில் அடங்குவர்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
இதன் அறிகுறிகள் ஆறு முதல் இருபது நாட்களுக்கு இடைப்பட்ட காலத்திற்குள் தோன்றும். இது நோய்த்தொற்றை பெறக்கூடிய நோயரும்பு காலமாக அறியப்படுகிறது. இது பின்வரும் மூன்று நிலை அறிகுறிகளைக் கொண்டுள்ளன:
- நீர்க்கோவை கட்டம் கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு நீடிக்கும். மூக்கு ஒழுகுதல், நீர்கசிகிற கண்கள், விழி வெண்படல அழற்சி, தொண்டை புண், தும்மல், மற்றும் சற்று அதிகமான உடல் வெப்பம் போன்ற அறிகுறிகளுடன் தோன்றுகிறது.
- எதிர் பாரா கட்டம் ஒரு வாரத்திற்கு நீடிக்கும். கடுமையான இருமலுடன் கூடிய வலிப்புதாக்கங்கள், இருமலுடன் கூடிய சளிநீக்கம், வாந்தி, சருமம் நீலநிறமாக மாறுதல் போன்ற அறிகுறிககளுடன் தோன்றுகிறது.
- நோய் ஆறுகின்ற கட்டம் 3 மாதங்கள் வரை நீடிக்கும்.இந்நிலையில் அறிகுறிகளின் தீவிரம் மற்றும் நிகழ்வெண் படிப்படியாக குறைகிறது.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
கக்குவான் இருமல் என்பது பெர்டெடெல்லா பெர்டுஸிஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு பாக்டீரியா நோய்த்தொற்றாகும். இந்த பாக்டீரியா நுரையீரலில் நுழைகிறது. இது வீக்கம், சுவாசப் பாதை குறிப்பாக மூச்சுக்குழாய், மூச்சுக்குழற்கவரில் எரிச்சல் ஏற்படுத்துகிறது. இது பல்வேறு சுவாச சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. இது மிகத் தீவிரமாக தொற்றும் நோயாகும். மூக்கு, வாய் அல்லது கண்கள் வழியாக நோய்த்தொற்றுடைய நபரிடம் இருந்து இருமும் போது அல்லது தும்மும் போது அல்லது ஒரு ஆரோக்கியமான நபருடனான நேரடி தொடர்பின் மூலம் மற்றவருக்கு பரவுகிறது.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
கக்குவான் இருமலுக்கான நோய் கண்டறிதலில் பின்வருவன அடங்கும்:
- நோயாளியின் நோய் சார்ந்த வரலாறு எடுத்தல்.
- மருத்துவ பரிசோதனை.
- பாலிமரேசு தொடர் வினை (பி.சி.ஆர்) சோதனைக்கு மூச்சொலி அல்லது மூக்கு துடைப்பு.
- நுண்ணுயிர் வளர்ப்பு சோதனை.
- பெர்டுஸிஸ் தெளியவியல் சோதனைகள்.
கக்குவான் இருமலுக்கான சிகிச்சையில் மருத்துவரின் மருத்துவ முடிவுகளை அடிப்படையாகக் கொண்ட நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் ஆரம்ப கால பயன்பாடு அடங்கும்.
தேசிய நோய்த்தடுப்புத் திட்டத்தின் படி குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான பெர்டுஸிஸ் தடுப்பூசி போட்டுக்கொள்வது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு தொண்டை அழற்சி நோய் (திஃப்தீரியா), இசிவு நோய், மற்றும் பெர்டுஸிஸ் தடுப்பூசி முழு அளவில் (டோஸ்) வழங்கப்படுகின்றன. முதன்மை தடுப்பூசி அட்டவணை நிறைவு செய்த பெரியவர்களுக்கு, ஒரு கூடுதல் தடுப்பூசியூட்டம் (பூஸ்டர் டோஸ்) அளிக்கப்படுகிறது.