சிரைப் புண் - Venous Ulcer in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

May 21, 2019

March 06, 2020

சிரைப் புண்
சிரைப் புண்

சிரைப் புண் என்றால் என்ன?

சிரைப் புண் என்பது மேம்போக்காகவோ அல்லது ஆழமான இரத்த நாளங்களிலோ ஏற்படும் திறந்த காயங்கள் ஆகும், இது பொதுவாக கீழ் முனைப்புள்ளிகளில் ஏற்படக்கூடியது. இவை இதயத்தை நோக்கி செலுத்த வேண்டிய இரத்தம் செலுத்தப்படாமல் இரத்த நாளங்களிலேயே தேங்கியிருப்பதனால் ஏற்படுகின்றது. இந்நிலைக்கான சிகிச்சை அளிக்கப்படாமல் விட்டுவிட்டால், பாதிக்கப்பட்ட இடத்தில் அழுத்தம் அதிகரித்து திரவம் குவிந்துவிடுவதன் விளைவால் திறந்த காயம் ஏற்படுகின்றது. இந்த புண்கள் குணமாக தாமதமாவதோடு இது பொதுவாக கணுக்காலுக்கு மேலே காணப்படுகின்றது.

தன் முக்கிய அடையாளங்கள் மாற்று அறிகுறிகள் யாவை?

சிரைப் புண்ணின் மிகவும் பொதுவான அடையாளங்கள் மற்றும் அறிகுறிகளாவன:

  • அரிப்பு,மெல்லிய தோல் மற்றும் நிறமாற்றம், அது அடர் சிவப்பு, ஊதா பழுப்பு நிறத்தில் இருக்கும்.
  • கடினமான தோல்.
  • காய்ச்சல் அல்லது குளிர்தல்.
  • கால்களில் வீக்கம்.
  • கால் வலி, கனமாக இருத்தல் மற்றும் தசைப்பிடிப்பு.
  • உடல் சிலிர்ப்பு.
  • புண்கள் தோன்றுவது:
  • இது சீரற்ற விளிம்புகளை கொண்ட ஒரு ஆழமற்ற புண் ஆகும்; மஞ்சள் திசுக்களால் மூடப்பட்ட சிவப்புத் தளம்; மற்றும் நிறமாற்றம், பளபளப்பான, தோல் இறுக்கமாக மற்றும் வெதுவெதுப்பாக இருக்கும் அல்லது தொடுவதற்கு சூடாக இருக்கும். தொற்றிய புண்கள் முடைமநாற்றத்துடன் மற்றும்  சீழ் அல்லது இரத்தம் கசிந்தும் காணப்படும்.

இதன் முக்கிய காரணங்கள் என்ன?

சிரைப் புண்களின் காரணங்களாக அடங்குவன:

  • நாளங்களில் உள்ள வால்வுகளை பலவீனப்படுத்துவது.
  • கீழ் முனையின் நரம்புகளில் அழுத்தம் அதிகரித்தல்.
  • தழும்பு மற்றும் தடைபட்ட நாளங்கள்.
  • இந்த நிலை சிரை சுவர் மற்றும் /அல்லது கால் நாளங்களில் உள்ள வால்வுகள் திறம்பட வேலை செய்யாத நிலையை ஏற்படுத்தும்.

இது எப்படி நோய் அறியப்படுகிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படுகிறது?

காயமடைந்த இடத்தின் பின்னணி மற்றும் உடல் பரிசோதனையை நடத்திய பின்னர், சி.ஈ.ஏ.பி (மருத்துவ, காரணவியல், உடற்கூறியல் மற்றும் நோய்க்குறியியல்) அடிப்படையிலான மருத்துவ தீவிரத்தன்மை மதிப்பானது, நாள்பட்ட சிரைக் குறைபாடுகளை மதிப்பீடு செய்ய உதவுகிறது.

ஒரு சிரைப் புண் முக்கியமாக காயம் மற்றும் கவனத்துடன் சிகிச்சையளிக்கப்படுகிறது, இதில் உள்ளடங்குபவைகள்:

  • மருத்துவர் அறிவுறுத்தியதன் படி காயத்தை சுத்தப்படுத்தி அதை கட்டுத்துணியால் (பேண்டேஜ்) கட்டவேண்டும் (தொற்றினை தடுக்க), தேவைப்படும் போது மாற்றவேண்டும்.
  • துணியை கட்டுவதற்கு முன்னர் காயத்தை முழுமையாக சுத்தம் செய்யவேண்டும் மற்றும் கட்டிய துணி மற்றும் அதனை சுற்றிய தோலினை உலர்வாகவும் தூய்மையாகவும் வைக்க வேண்டும்.
  • காயத்தின் மீது கட்டிய துணியை ஸ்டாக்கிங் அல்லது பேண்டேஜ் கொண்டு மூடவேண்டும்.
  • கால் சிரைகளில் உள்ள அதிக அழுத்தத்தை குறைக்க வேண்டும் ஏனென்றால் இது இரத்தம் சேர்வதை தடுக்கவும், வலி மற்றும் வீக்கத்தை குறைக்க மற்றும் குணப்படுத்த அவசியமானதாகும்.
  • உங்களால் முடிந்தால் மார்பு மட்டத்திற்கு மேல் கால்களை வைக்கவும் (தலையணைகளில் மீது கால்களை வைக்கவும்).
  • உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உடல் செயல்பாடுகளை அதிகரிக்கவும்.
  • மருத்துவர் கூறியதன் படி மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

ஆறாத புண்களுக்கு, நாளத்தில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த சில மருத்துவ சிகிச்சை முறைகள் அல்லது அறுவை சிகிச்சைமுறை அறிவுறுத்தப்படலாம்.



மேற்கோள்கள்

  1. Lauren Collins et al. Diagnosis and Treatment of Venous Ulcers. Am Fam Physician. 2010 Apr 15;81(8):989-996. American Academy of Family Physicians.
  2. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Venous ulcers - self-care
  3. Biju Vasudevan. Venous leg ulcers: Pathophysiology and Classification . Indian Dermatol Online J. 2014 Jul-Sep; 5(3): 366–370. PMID: 25165676
  4. J.A. Caprini et al. Venous Ulcers . J Am Coll Clin Wound Spec. 2012 Sep; 4(3): 54–60. PMID: 26236636
  5. National Health Service [Internet]. UK; Venous leg ulcer.