சுருக்கம்
டைபாய்டு என்பது ஒரு தொற்று பாக்டீரியா நோயாகும், இது சால்மோனெல்லா டைபீ என்னும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இந்த நோய் கொண்டவர்களுக்கு காய்ச்சல், வயிற்று வலி , தலைவலி, பசியின்மை, ரோஜா வண்ணப் புள்ளிகள் போன்ற நோய் அறிகுறிகள் இருக்கும். பொதுவாக பருவ மழைக்கு முன், பருவ மழையின் போது மற்றும் பருவ காலத்திற்குப் பிந்தைய பருவங்கள் ஆகியவற்றின் போது இந்த நோய் பரவுகிறது. இந்த நோய் பரிமாற்றம் மலம்-வாய் வழியே ஏற்படுகிறது. எனவே, மலக்குடல், பாக்டீரியாக்களால் பாதிக்கப்பட்டுள்ளதா அல்லது இல்லையா என்பதை ஸ்டூல்(மல) சோதனை உறுதிப்படுத்துகிறது. டைபாய்டுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகளைப்(antibiotics) பயன்படுத்தி முழுமையான சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அது உட்புற இரத்தப்போக்கு, சீழ்ப்பிடிப்பு (செப்சிஸ்) போன்ற கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும். அல்லது அரிதான நிகழ்வுகளில், மரணம் கூட ஏற்படலாம்.