தசைநார் காயம் (டெண்டினோபதி) என்றால் என்ன?
எலும்புகள் மற்றும் தசைகள் ஆகியவற்றை இணைக்கும் இணைப்பு தசைநாண்கள் எனப்படுகிறது. அவை கடுமையான நரம்பு திசுக்களால் உருவாக்கப்படுகின்றன. தசைநாண் அழற்சி, டெண்டினோபதி என்று அழைக்கப்படுகிறது. டெண்டினோபதி பொதுவாக மூட்டு பகுதிக்கு (அதாவது, தோள்கள், முழங்கால்கள், முழங்கைகள், மற்றும் கணுக்கால்) அருகில் இருக்கும் தசைநாண்களை பாதிக்கின்றன.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
டெண்டினோபதியின் அறிகுறிகள் காயத்தின் அளவு மற்றும் பாதிக்கப்பட்ட தசைநாண் ஆகியவற்றை சார்ந்துள்ளது. டெண்டினோபதி நோயின் தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:
- பாதிக்கப்பட்ட தசைநாணை சுற்றி வலி, அதற்கு வேலை கொடுக்கும் போது இன்னும் மோசமாகிறது.
- பாதிக்கப்பட்ட தசைநாண் அல்லது அதற்கு அருகில் உள்ள மூட்டின் விரைப்பு, காலையில் அல்லது ஓய்வு நேரங்களில் மோசமாக இருக்கும்.
- பாதிக்கப்பட்ட தசைநாண்களின் வலிமை இழப்பு.
- தசைநாணை சுற்றியுள்ள பகுதியில் சிவத்தல், அழற்சி மற்றும் வீக்கம்.
- பாதிக்கப்பட்ட தசைநாண் இயங்கும்போது சொடுக்கு ஒலி ('கிளிக்' போன்ற ஒலி ) கேட்கும்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
டெண்டினோபதியின் முக்கிய காரணம் தசைநாணை அளவுக்கு அதிகமாக உபயோகித்தல் அல்லது காயம் ஆகும். காயம் கடுமையானதாகவோ அல்லது நாள்பட்டதாகவோ இருக்கலாம். வழக்கமாக, வயது முதிர்தல், நீண்டகால களைப்பு அல்லது தசைநாணின் தொடர் பயன்பாடு ஆகியவை டெண்டினோபதிஸ் நோய்க்கு வழிவகுக்கலாம். சில சமயங்களில் தசைக்குறைபாடு தசைநாணின் தசைகளை பாதிக்கும் மற்றும் டெண்டினோபதிஸ் நோய் ஏற்பட காரணமாகும். அதிகப்படியாக அந்த தசைநாண்களுக்கு வேலை கொடுப்பது அல்லது காயம் காரணமாக கடுமையான உடல்ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்பவர்கள், எ.கா., உடல் வருத்தி வேலை செய்யும் உழைப்பாளிகள், விளையாட்டு வீரர்கள், உடற்பயிற்சி பயிற்றுனர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு டெண்டினோபதிஸ் ஏற்பட வாய்ப்புள்ளது.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
வழக்கமாக, டெண்டினோபதி நோயைக் கண்டறிய ஒரு முழுமையான மருத்துவ பரிசோதனையும் அதனோடு மருத்துவ விளக்கமும் போதுமானதாக இருக்கிறது மற்றும் இது பாதிக்கப்பட்ட தசைநாரை தீர்மானிக்க உதவுகிறது. ஆனால் சிகிச்சை முறைகளை தீர்மானிக்க சில கண்டுபிடிப்புகள் முக்கியம். அவை பின்வருமாறு:
- இரத்தப் பரிசோதனை - வைட்டமின் டி3, கால்சியம் மற்றும் யூரிக் அமில அளவு.
- எக்ஸ்-கதிர்கள் சோதனை - தசைநாரை சுற்றிலுமுள்ள எலும்புகளிள் முறிவு மற்றும் இடப்பெயர்வு ஏற்பட்டிருக்கிறதா என்பதை சரிபார்க்க செய்யப்படுகிறது.
- அல்ட்ராசவுண்ட் - தசைநார் வீக்கம் மற்றும் காயம் ஏற்பட்டிருக்கிறதா என்பதை பரிசோதிக்க செய்யப்படுகிறது.
- காந்த அதிர்வு இமேஜிங் (எம்.ஆர்.ஐ) ஸ்கேன் - காயத்தின் அளவை மிகவும் துல்லியமாக பரிசோதிக்க செய்யப்படுகிறது.
டெண்டினோபதிக்கு மல்டிமாடலிட்டி சிகிச்சை தேவைப்படுகிறது. பொதுவாக, வாய்வழி மருந்துகள், குளிர்ந்த அழுத்தங்கள், ஓய்வு மற்றும் படிப்படியான உடல் சிகிச்சை ஆகியவை டெண்டினோபதி நிலையில் இருந்து மீட்க உதவுகிறது.
- வாய்வழி மருந்துகள் - பொதுவாக, பாதிக்கப்பட்ட தசைநாரின் வீக்கம் மற்றும் வலியை குறைப்பதில் அஸிக்ளோஃபினக் மற்றும் டைக்ளோஃபினக் போன்ற அழற்சி எதிர்ப்பு மருந்துகள் உதவும்.
- குளிர்ந்த அழுத்தம் - தசைநாரை சுற்றி வலி மற்றும் வீக்கத்தை குறைக்க உதவும்.
- ஓய்வு - காயத்தின் ஆரம்பகாலங்களில் ஓய்வு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
- உடல் சிகிச்சை - ஆரம்ப காலத்தின் ஓய்விற்குப்பிறகு, மென்மையான வரம்பில் இயக்கம் (ஆர்.ஓ.எம்) செயல்திறன் மிக்க சிகிச்சையை மேம்படுத்துகிறது, இதனை தொடர்ந்து வலுவான மற்றும் தசைத்தன்மையை மேம்படுத்துவதற்காக ரோம் பயிற்சிகள் செயல்படுகின்றன.