அசௌகரியமான குரல் நாண்கள் என்றால் என்ன?
குரல் நாண்கள் என்பது குரல் பெட்டியில் (லாரின்க்ஸ்) உள்ள இரண்டு தசைத்திசு பட்டைகள் ஆகும். இந்த இரண்டு தசைத்திசு பட்டைகள் ஒருமிக்க நீண்டு சுருங்கும் போது பேச்சு உருவாகிறது. சத்தமிடும் போதோ, கத்தும் போதோ அல்லது கடினமான இசை சுருதியை பாடும்போதோ குரல் நாண்களில் அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் அசௌகரியமான குரல் நாண்கள் நிலை ஏற்படுகிறது. வீட்டு வைத்தியம் மற்றும் குரல் ஓய்வு ஆகியவை விரைவாக குணமடைய உதவுகின்றன.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
அசௌகரியமான குரல் நாண்கள் மருத்துவரீதியாக லாரன்கிடிஸ் என்று அழைக்கப்படுகின்றது. இது பொதுவாக குரலைப் பாதித்து கரகரப்பான குரலாக்குகிறது. குரல் சப்தம் குறைவாகவும் கம்மியும் இருப்பதால் பேச்சை புரிந்துகொள்வதில் சிரமம் இருக்கும். சில சமயங்களில், அசௌகரியமான குரல் நாண்கள் வலியை ஏற்படுத்தும். ஒரு சில நாட்களுக்கு முழுமையான குரல் இழப்பும் ஏற்படலாம். அதே சமயத்தில் விழுங்குவதில் சிரமம் மற்றும் காது சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
நோய்தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
அதிகமாகப் பாடுவது, தொடர்ந்து விரிவுரையாற்றுவது அல்லது கத்துவது ஆகியவை அசௌகரியமான குரல் நாண்களுக்கான பொதுவான காரணங்கள் ஆகும். ஸ்ப்ரேக்களைப் போன்ற சில காட்டமான வாசனைப்பொருட்களை சுவாசிப்பதாலும் குரல் நாண்கள் பாதிக்கப்படுகின்றன. குரல் நாளங்களின் மீது நாட்யூல்ஸ் அல்லது பாலிப்ஸ் (புற்றுநோய் அல்லாத திசு வளர்ச்சிகள்) இருந்தால் இந்நிலை நாள்பட்ட லாரன்ஜிடிஸ் எனப்படுகிறது. இதன் பிற காரணங்கள் பார்கின்சன் நோய், பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்று, ஒவ்வாமை மற்றும் பக்கவாதம் ஆகியவை ஆகும்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
முழுமையான உடல் பரிசோதனை மற்றும் விரிவான மருத்துவ வரலாறு மூலம் அசௌகரியமான குரல் நாண்கள் உறுதிசெய்யப்படுகிறது. தொண்டையின் பின் பகுதியை பரிசோதிப்பதற்காக ஒரு சிறிய கண்ணாடியைக் கொண்ட லாரிஞ்ஜாஸ்கோப் முறை பயன்படுத்தப்படலாம்.
இந்த நிலை பொதுவாக ஆபத்தானது இல்லை. மேலும் குரல் ஓய்வு, இந்நிலையிலிருந்து விடுபட உதவுகிறது. அழற்சி எதிர்ப்பு மருந்துகள், ஆன்டி-பயாட்டிக் மருந்துகள் மற்றும் அரிதாக, ஸ்டெராய்டுகள் இந்நிலையை குணமாக்க பயன்படுத்தப்படுகின்றன. சூடான நீரை கொப்புளித்தல் வீக்கம் மற்றும் வலியை போக்க உதவுகிறது. போதுமான நீர்ச்சேர்க்கை பரிந்துரைக்கப்படுகிறது. குளிர் பானங்கள் மற்றும் மது எல்லா நேரங்களிலும் தவிர்க்கப்பட வேண்டும். தொண்டை மிட்டாய்கள் (த்ரோட்- லோஸெஞ்சஸ்கள்) இந்நிலையால் ஏற்படும் அசௌகரியத்தை நீக்க உதவும். தேன், தொண்டை புண்ணை ஆற்ற உதவுகிறது. சூடான நீரில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடிப்பது, குரல் நாளங்களைச் சுற்றியுள்ள சளியை அகற்ற உதவுகிறது.