குறட்டை - Snoring in Tamil

Dr. Nadheer K M (AIIMS)MBBS

May 13, 2019

March 06, 2020

குறட்டை
குறட்டை

குறட்டை என்றால் என்ன?

தூக்கத்தில் நாம் சுவாசிக்கும் போது காற்றுப்பாதையில் எங்கேனும் தடை ஏற்படும் போது இந்த குறட்டை வருகிறது. அடிக்கடி குறட்டை விடுபவர்களுக்கு அதிகமாக தொண்டை மற்றும் நாசி திசு அல்லது நெகிழ் திசு போன்ற திசுக்களில் ஏற்படும் அதிர்வு குறட்டை ஏற்பட தூண்டுவதால் தனித்துவமான இந்த குறட்டை ஒலி ஏற்பட வழிவகுக்கிறது.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

தூக்கமின்மை, பகல்நேர தூக்கக் கலக்கம், செறிவு குறைதல் மற்றும் வீரிய குறைவு போன்ற காரணங்களால் குறட்டை ஏற்படுகிறது.இது உளவியல் சார்ந்த பிரச்சனைகளை ஏற்படுத்தி மாரடைப்பு ஏற்படுவதற்கான ஆபத்தினை அதிகரிக்கிறது.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

குறட்டை என்பது மிகவும் பொதுவாக ஏற்படும் ஒரு நோய் என்பதால் இதனால் எந்தவொரு தீவிரமும் ஏற்படாது. நங்கள் தூங்கும்  போது சுவாசிக்கும் காற்றானது உங்கள் நாக்கு, தொண்டை, வாய்,காற்று பாதை வழியாக நுரையீரலுக்கு செல்லும் போது காற்று தசைகள் தளர்வடைந்து ஓய்வெடுக்கின்றன, அப்பொழுது மூச்சு பாதையின் அளவு குறுகுகிறது.நீங்கள் மூச்சு விடும் போது மேலே குறிப்பிட்ட பாகங்கள் அதிர்வுக்குள்ளாகும்போது அது குறட்டையை ஏற்படுத்துகிறது.குறட்டை ஏற்படுவதற்கான சில பொதுவான காரணங்கள் பின்வருமாறு:

  • ஒவ்வாமை அல்லது சைனஸ் தொற்று.
  • நாசி ஊனம் போன்ற விலகிய மூக்குச்சுவர் அல்லது நாசி விழுது போன்ற மூக்கு சார்ந்த குறைபாடுகள்.
  • உடற் பருமன்.
  • தடித்த நாக்கு.
  • கர்ப்பம்.
  • மரபணு காரணிகள்.
  • மது பழக்கம்  மற்றும் புகை பிடித்தல்.
  • விரிவடைந்த தொண்டைச்சதை மற்றும் அடினாயிடுகள்.
  • குறிப்பிட்ட மருந்துகள்.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

உங்கள் மூக்கு,வாய் போன்ற பகுதிகளை குறட்டை ஏற்படுவதற்கான காரணத்தை அறிய உங்கள் மருத்துவர் பரிசோதிப்பார். உங்களது இந்த குறட்டை விடும் பாங்கினை விவரிக்க சிறந்த நபர் உங்களது துணையே ஆவர். குறட்டை ஏற்படுவதற்கான காரணம் தெளிவாக இல்லை எனில், இந்நோய் சம்பந்தமான ஒரு மருத்துவ நிபுணரிடம் செல்ல உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கலாம், வீட்டில் தூங்கும் போது செய்யப்படும் தூக்க சோதனை அல்லது நோய் முற்றிய நிலையில் ஆய்வகங்களில் செய்யப்படும் தூக்க சோதனை போன்றவற்றை உங்கள் மருத்துவர் எடுக்க சொல்லலாம்.

குறட்டை சம்பந்தமாக செய்யப்படும் தூக்க ஆய்வில், மூளை, இதய துடிப்பு மற்றும் மூச்சுவிடுதல் செயல்பாடு போன்றவற்றிலிருந்து வரும் சமிக்ஞைகளை பதிவு செய்யஉடலின் பல பாகங்களில் சென்சார்கள் இணைக்கப்படுகின்றன.சில நேரம் அறவே சத்தம் இல்லாமல் போவது "அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் ஏப்னீயா (தடைப்பட்ட தூக்க மூச்சுத்திணறல்)" போன்ற பிரச்சனை பாலிோசோம்னோகிராபி எனப்படும் வீட்டு தூக்க சோதனை உதவியுடன் கண்டறியப்படுகிறது."அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் ஏப்னீயா" அல்லாத மற்ற குறைபாடுகள் ஆய்வக மையத்தில் உள்ள ஆய்வக தூக்க ஆய்வில் கண்டறியப்படுகின்றன.

குறட்டை சம்பந்தமாக செய்யப்பட்ட  தூக்க ஆய்வில் இந்நோய் ஏற்படுவதற்கான காரணம் அறியப்படவில்லை எனில், இந்நோய் ஏற்படுவதற்கான சரியான காரணத்தை கண்டறிய மார்பக எக்ஸ் கதிர் சோதனை ,சி டி  மற்றும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் போன்ற மற்ற பரிசோதனைகள் பரிந்துரைக்கப்படலாம்.

குறட்டை பிரச்னையை ஒரு பிரத்யேகமான சிகிச்சையின் மூலம்  முழுவதுமாக குணப்படுத்த இயலாது ஆனால் குறிப்பிட்ட சில சிகிச்சைகள் காற்று பாதையில் ஏற்படும் அடைப்பினை நீக்கி சுவாசித்தலின் போது ஏற்படும் உபாதையை குறைக்கிறது.

வாழ்க்கை முறை மாற்றங்களான, புகை பிடிப்பதை நிறுத்துதல், மது பழக்கத்தை தவிர்த்தல்,படுக்கைக்கு செல்வதற்கு முன் எடுத்துக்கொள்ளப்படும் மயக்க மருந்துகளை தவிர்த்தல் போன்றவை இந்த குறட்டை விடும் பிரச்னையை குறைக்க உதவும்.நாசி ஸ்ப்ரேக்கள், பட்டைகள் அல்லது கிளிப்புகள், வாய்வழி உபகரணங்கள், சிறப்பு மசகு எண்ணெய் ஸ்ப்ரேக்கள், மற்றும் எதிர்ப்பு சுவாச தலையணைகள் மற்றும் உடுத்தும்  ஆடைகள் கூட இந்த குறட்டை விடும் பிரச்சனையை குறைக்க உதவும்.

இந்த குறட்டை பிரச்சனையிலிருந்து விடுபட பின்வரும் ஆலோசனைகளை மருத்துவர் வழங்கலாம்:

  • தொடர்ச்சியான நேர்மறை காற்றுப்பாதை அழுத்தம் (சி பி எ பி).
  • லேசர் உதவியுடனான யுவுலோபாலாட்டோபிளாஸ்ட்டி (எல் எ யு பி )
  • மேல்வாய் உட்பொருத்திகள்.
  • சோம்னோபிளாஸ்டி - தேவைற்ற திசுக்களை அகற்ற குறைந்த அளவிலான கதிர்வீச்சு அதிர்வெண்ணை பயன்படுத்துதல்.
  • விரும்பி பொருத்தப்பட்ட பல் சாதனங்கள் அல்லது கீழ் தாடை-அமைப்புகள்.
  • உள்நாக்கு இடை தொண்டை அறுவைசிகிச்சை / யுவுலோபாலாட்டோ  தொண்டையின் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை (யு பி பி பி ) போன்ற அறுவைசிகிசிச்சைகளான, வெப்ப நீக்கம் பாலாட்டோபிளாஸ்ட்டி (டி எ பி), உள்நாக்கு அறுவை சிகிச்சை மற்றும் அடினோடெக்டோமி போன்ற அறுவை சிகிச்சைகள்.
  • மல்லாந்து படுக்காமல் ஒருக்களித்து படுத்தல், தலையணையை  பயன்படுத்தி தலையை சற்று உயரமாக வைத்தல் மற்றும்குறட்டை எதிர்ப்பு உபகரணங்கள் பயன்படுத்தல் போன்றவை மூலம் நீங்கள் குறட்டை விடுவதை தவிர்க்கலாம்.



மேற்கோள்கள்

  1. National Health Service [Internet]. UK; Snoring.
  2. American Academy of Sleep Medicine [Internet] Illinois, United States Home Sleep Apnea Testing - Overview
  3. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Snoring
  4. Better health channel. Department of Health and Human Services [internet]. State government of Victoria; Snoring
  5. B Kotecha, J M Shneerson. Treatment options for snoring and sleep apnoea . J R Soc Med. 2003 Jul; 96(7): 343–344. PMID: 12835447
  6. Simranjeet Kaur et al. Snoring: An Annoyance or a Serious Health Problem (Obstructive Sleep Apnea)? Indian J Community Med. 2015 Apr-Jun; 40(2): 143–144. PMID: 25861179
  7. healthdirect Australia. How to stop snoring. Australian government: Department of Health

குறட்டை க்கான மருந்துகள்

Medicines listed below are available for குறட்டை. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.

Lab Tests recommended for குறட்டை

Number of tests are available for குறட்டை. We have listed commonly prescribed tests below: