பிரிக்கப்பட்ட தோள்பட்டை என்றால் என்ன?

பிரிக்கப்பட்ட தோள்பட்டை என்பது பூணாரவெலும்பு (காறை எலும்பு) மற்றும் பகுதியளவு தோள்பட்டை எலும்பின் (அக்ரோமியன்) இடையே உள்ள கிழிந்த அல்லது காயமடைந்த தசைநார்களைக் குறிக்கிறது.இதன் நிகழ்வு தசைநார்களின் லேசான நீட்சியிலிருந்து தசைநார்களின் கிழிவு வரையில் இருக்கலாம்.தோள்பட்டை எலும்பு மற்றும் பூணாரவெலும்பு ஆகியவை நகர்தல் அல்லது பிரிக்கப்படுதல் போன்றவற்றை பெரும்பாலும் விளைவிக்கிறது.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

பிரிக்கப்பட்ட தோள்பட்டையின் தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:

  • காயம் ஏற்படும் தருணத்தில் வலி இருத்தல், இது மூட்டுப் பகுதிகளில் நீடிக்கக்கூடும்.
  • பாதிக்கப்பட்ட பக்கத்தில் கையை நகர்த்துவதில் சிரமம்.
  • மூட்டு பகுதியில் வீக்கம் மற்றும் சிராய்ப்பு.
  • தொடு வலிவுணர்வு.
  • பூணாரவெலும்பின் வெளிப்புற முனை இடத்திலிருந்து வெளியே தோன்றக்கூடும்.
  • பாதிக்கப்பட்ட பகுதி புடைத்திருத்தல் அல்லது உருகுலைதல்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

பிரிக்கப்பட்ட தோள்பட்டைக்கான முக்கிய காரணங்கள் கடுமையான காயம், நேரடியாக தோள்பட்டைக்கு ஏற்ப்பட்ட அடி அல்லது தோள்பட்டை அடிப்படும் விதமாக கீழே விழுதல், கார் விபத்துகள் அல்லது விளையாடுவதினால் ஏற்படும் காயங்கள் போன்றவை ஆகும்.

இதன் ஆபத்து காரணிகள் கால்பந்து, ஹாக்கி, பனிச்சறுக்கு, கைப்பந்து மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸ் போன்ற விளையாட்டுகளை உள்ளடக்குகிறது.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

பிரிக்கப்பட்ட தோள்பட்டையை கண்டறிவதில் மருத்துவ பின்புலம் மற்றும் உடல் பரிசோதனை உதவி புரிகின்றன; எவ்வாறாயினும், மிதமான நிகழ்வுகளில் எக்ஸ் கதிர்கள் மூலம் மட்டுமே இதனை கண்டறிய முடியும்.

ஆய்வுகளில் அடங்குவன:

  • எக்ஸ்-கதிர்கள் (எக்ஸ் - ரே) சோதனை.
  • காந்த அதிர்வு விம்பங்கள் (எம்.ஆர்.ஐ).
  • அல்ட்ராசோனோகிராபி.

பாதிக்கப்பட்ட பக்கத்திலுள்ள கைகளில் எடையை வைத்திருத்தல் உருகுலைவை வெளிப்படையாகத் தெரியச் செய்யும். இது நோய் கண்டறிதலை உறுதிப்படுத்துவதில் உதவுகிறது.

பிரிக்கப்பட்ட தோள்பட்டைக்கான சிகிச்சை காயத்தின் தீவிரத்தையே சார்ந்தே அமைகிறது.

அறிகுறிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக உங்கள் மருத்துவர் வலி நிவாரணி மருந்துகளை பரிந்துரைக்கலாம்.மூட்டுகளின் அசைவை கட்டுப்படுத்தவும், இயற்கையாக இது குணமடையவும் காயம்பட்ட கையைத் தாங்கும் தூக்கி பயன்படுத்தப்படுகிறது.சேதங்களின் அளவைப் பொறுத்து ஒரு சில வாரங்களுக்கு அசைவுகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

இயக்கத்தின் அளவை மேம்படுத்தவும், விறைப்பை குறைக்கவும் இதனைத் தொடர்ந்து உடலியல் மருத்துவம் மேற்கொள்ளப்படுகிறது.

குணமடைந்த 8 முதல் 12 வாரங்களுக்கு எந்தவொரு கனமான பொருளையும் தூக்குவது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

கடுமையான சந்தர்ப்பங்களில் அறுவைசிகிச்சை தேவைப்படலாம், இதில் எலும்புகள் இடம்பெயர்ச்சி அடங்கும்.

சுய பாதுகாப்பு முறைகள் பின்வருமாறு:

  • கடுமையான உடல் செயல்பாட்டில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.
  • உங்கள் தோள்பட்டைக்கு முடிந்த அளவுக்கு ஒய்வு அளிப்பது அவசியம்.
  • குளிர் ஒத்தடம் வீக்கத்தை கட்டுப்படுத்தவும் வலியில் இருந்து நிவாரணம் பெறவும் உதவுகிறது.
Read more...
Read on app