சுருக்கம்
சயாடிக்கா (அடிமுதுகு நரம்புவலி) என்பது, உடலிலுள்ள சயாடிக் நரம்பில் உண்டாகும் ஒரு காயம் காரணமாக ஏற்படுகிற, ஒரு வலிமிகுந்த பிரச்சினையாகும். அறிகுறிகள், கீழே ஒரு காலுக்குப் பரவக்கூடிய, மரத்துப் போதலுடன் இணைந்த அடி முதுகு வலியை உள்ளடக்கியது. இது முக்கியமாக இரண்டு வகைப்படுகிறது – நரம்பாற்றல் சார்ந்தது மற்றும் சுட்டிக் காட்டுவது. அறிகுறிகள், திடீரென்று தோன்றுகின்ற மற்றும் விரும்பத்தகாததாக இருக்கின்றன. சயாடிக்கா (அடிமுதுகு நரம்புவலி)க்கு காரணமாக பல்வேறு காரணிகள் இருக்கக் கூடும். பெரும்பாலான நிலைகளில், சயாடிக்கா (அடிமுதுகு நரம்புவலி), ஒரு முதுகு காயத்துடன் அல்லது நீண்ட கால செயலிழப்புடன் இணைந்திருக்கிறது. மற்ற காரணங்களில் அடங்கியவை, சரியான நிலையில் இல்லாமை, உடல் பருமன், நரம்புரீதியான குறைபாடுகள், முதுகெலும்பு அழற்சி, வழுக்கி வட்டுக்கள், தசைப்பிடிப்புகள் ஆகியனவாகும். சயாடிக்கா (அடிமுதுகு நரம்புவலி), 4-6 வாரங்களில் தானாகவே சரியாகிறது. ஆனால் ஒருவேளை அறிகுறிகள் தொடர்ந்தால், மருத்துவத் தலையீடு அவசியமாக மாறுகிறது. சயாடிக்கா (அடிமுதுகு நரம்புவலி)க்கு, வலி-நிவாரண மருந்துகள், பிசியோதெரபி, மஸாஜ் போன்றவற்றால், மற்றும் தீவிரமான நிலைகளில், அறுவை சிகிச்சையால், சிகிச்சையளிக்க முடியும். சயாடிக்கா (அடிமுதுகு நரம்புவலி)யின் அறிகுறிகளை, பல்வேறு வாழ்க்கைமுறை மாற்றங்களை இணைத்துக் கொள்வதன் மூலம், திறம்படக் கையாள முடியும். இருப்பினும், அறிகுறிகள் மறுபடி தோன்றினால், ஒரு மருத்துவ ஆலோசனையைப் பெறுவது அவசியமாக இருக்கிறது. அது மட்டுமின்றி, சயாடிக்கா (அடிமுதுகு நரம்புவலி), சிகிச்சையளிக்காமல் விடப்பட்டால், அதிகரித்த வலி மற்றும் நிரந்தர நரம்பு சேதம் போன்ற சிக்கல்களுக்கு காரணமாகக் கூடும்.