வாத காய்ச்சல் (ருமாட்டிக் காய்ச்சல்) என்றால் என்ன?
தொண்டையில் ஏற்படும் ஸ்ட்ரெப்டோகாக்கால் தொற்றிற்கு போதிய சிகிச்சையின்மையாலோ அல்லது முற்றிலும் சிகிச்சை அளிக்கப்படாத காரணத்தினாலோ ருமாட்டிக் காய்ச்சல் எனும் பிரச்சனை வளர்ச்சியடைகின்றது. இது தோல், இதயம், மூட்டுகள் மற்றும் மூளையில் கடுமையான நோய் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.இந்த தொற்று முக்கியமாக 5 முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பாதிப்பேற்படுத்துகிறது.ஸ்ட்ரெப்டோகோகால் தொண்டை தொற்று துவங்கி 14 முதல் 28 நாட்களுக்குப் பிறகே ருமாட்டிக் காய்ச்சல் ஏற்படுகின்றது.
இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?
வாத காய்ச்சலுக்கான அறிகுறிகள் மற்றும் அடையாளங்களுள் அடங்குபவை:
பொதுப்படையான அறிகுறிகள்.
- காய்ச்சல்.
- மூச்சு திணறல்.
- வயிறு அல்லது மார்பில் ஏற்படும் வலி.
- அறிகுறியில்லாமல் ஏற்படும் இதய பிரச்சனைகள்.
- மூக்கில் ஏற்படும் இரத்தக் கசிவு.
- உணர்ச்சி கட்டுப்பாட்டின் இழப்பைக் குறிக்கும் வகையில் அசாதாரணமான அழுகை அல்லது அதீத சிரிப்பு ஏற்படுதல்.
மூட்டுகளை சார்ந்த மாற்றங்கள்:
- சிவத்தல், சூடான உணர்ச்சி, வலியுடன் கூடிய வீங்கிய மூட்டுகள் (குறிப்பாக மணிகட்டு, கணுக்கால்கள், முழங்கால்கள் மற்றும் முழங்கைகள்).
தோல்-சார்ந்த மாற்றங்கள்:
- தோல் மீது ஏற்படும் கட்டிகள் அல்லது நொதில்கள்.
- தடிப்பு, குறிப்பாக உடற்பகுதியிலோ, கைகளின் மேல் பகுதியிலோ அல்லது கால்களிலோ ஏற்படும் வளைய-வடிவம் அல்லது பாம்பு போன்ற வடிவம் உடைய தடிப்பு ஏற்படுதல்.
- சிடான்ஹாம் கொரியா எனும் நரம்பியல் நிலை கைகள், பாதங்கள், மற்றும் முகத்தை பாதிக்கும் விரைவான, ஜெர்க்கி இயக்கங்களால் வகைப்படுத்தப்படுகிறது.
இதன் முக்கிய காரணங்கள் என்ன?
ருமாட்டிக் காய்ச்சலுக்கான முக்கிய காரணம் குழு A ஸ்ட்ரெப்டோகோகி தொற்று ஆகும்(ஸ்ட்ரெப்டோகோகஸ் பியோஜெனெஸ்). இந்த தொற்றுநோய் மரபுரீதியாக பாதிக்கப்பட்டவர்களில் அசாதாரண ஆட்டோ இம்யூன் எதிர்வினை(ஸ்ட்ரெப்டோகோகஸ் தொண்டை தொற்று அல்லது ஸ்கார்லெட் காய்ச்சலுக்கு) ஏற்படக் காரணமாக இருக்கிறது.
இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?
அறிகுறிகளின் வரலாற்றை அறிந்துகொண்ட பிறகு, மருத்துவர் தோல் மற்றும் மூட்டுகளை முழுமையாக பரிசோதிப்பார்.மேலும் இதயத் துடிப்பையும் பரிசோதனை செய்வதைத் தொடர்ந்து பின்வரும் சோதனைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துவார்:
- முழுமையான இரத்த எண்ணிக்கை (சிபிசி).
- எரித்ரோசைட் வண்டல் விகிதம் (அழற்சியை பரிசோதனை செய்வதற்கு-ESR).
- தொடர்ந்து ஏற்படும் தொற்றுநோயைத் பரிசோதிக்க எதிர்ப்பு. ஸ்ட்ரெப்டோலிசின் ஓ (ASO) இரத்த சோதனை மேற்கொள்ளப்படலாம்.
- எலக்ட்ரோ கார்டியோகிராம் (ஈசிஜி).
- நிலையான பெரிய மற்றும் சிறிய அளவுகோல்களை மதிப்பீடு செய்தல்(ஜோன்ஸ் அளவுகோல்).
ருமாட்டிக் காய்ச்சலை பராமரிக்கும் முறைகள் பின்வருமாறு:
- நோய்த்தொற்றுக்களுக்கு, நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பரிந்துரைக்கப்படுகின்றன, இந்நிலை மீண்டும் ஏற்படுவதை தடுப்பதற்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகளை நீண்ட காலம் உபயோகப்படுத்துமாறு அறிவுறுத்தலாம். (குழந்தைகளுக்கு 21 வயது வரை, சில நேரங்களில் வாழ்நாள் முழுவதும் கூட பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது).
- ஆஸ்பிரின் அல்லது கார்டிகோஸ்டீராய்டுகள் போன்ற மருந்துகள் வீக்கம் மற்றும் அழற்சி போன்ற அறிகுறிகளிலிருந்து நிவாரணம் பெற பயன்படுத்தப்படுகின்றன.
- ஒருவரிடமிருந்து அசாதாரண இயக்கங்கள் அல்லது நடவடிக்கைகள் வெளிப்படும் போது வலிப்புத்தாக்கங்களுக்கான மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன.