ராபமோயோஸாரோமா (ஸ்பிண்டில் அணுப்புற்று) என்றால் என்ன?
ராபமோயோஸாரோமா (ஆர்.எம்.எஸ்) என்பது தசை அணுக்களில் ஏற்படக்கூடிய ஆரம்ப கட்ட புற்றுநோயாகும், இவை பொதுவாக உடல் உறுப்புகளின் இயக்கங்களை கட்டுப்படுத்தும் எலும்பு தசைகளில் (தன்னிச்சையாக) உண்டாகின்றன. இவை உடலில் எந்த இடத்திலும் ஏற்படக்கூடியதாய் இருப்பினும் (எலும்புத் தசைகள் இல்லாத இடங்களில் கூட) தலை மற்றும் கழுத்து பகுதி, சிறுநீர் மற்றும் இனப்பெருக்க உறுப்புக்கள், கைகள், கால்கள் மற்றும் உடற்பகுதி போன்றவைகளில் முக்கியமாக காணப்படுகிறது.
இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?
ராபமோயோஸாரோமா (ஆர்.எம்.எஸ்) வின் அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள், அதன் அளவு, பரப்பளவு மற்றும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் இடம் ஆகியவைகளை பொறுத்து ஒவ்வொருவருக்கும் வேறுபடுகின்றது.இந்நிலையில் ஏற்படும் சில அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் பின்வருமாறு:
- புடைப்பு அல்லது வீக்கம்.
- பாதிக்கப்பட்ட பகுதியில் வலி மற்றும் / அல்லது உணர்வின்மை அல்லது கூச்ச உணர்வு ஏற்படுதல்.
- சிவந்திருத்தல்.
- எடை இழப்பு.
- தொடர்ந்து ஏற்படும் இருமல்.
- பலவீனம்.
- வாந்தி.
- கண்களில் ஏற்பட்டிருக்கும் புடைப்பு, இது சிலநேரங்களில் பார்வையை சேதப்படுத்தக்கூடும்.
- தலைவலியுடன் கூடிய காதுவலி.
- இந்நிலை நாசிகளில் ஏற்படும் பட்சத்தில் மூக்கில் இரத்தக்கசிவு, அல்லது சைனஸ் அடைப்பு ஏற்படுதல்.
- சிறுநீரில் இரத்தப்போக்கு.
- வெஜினல் இரத்தப்போக்கு.
- சிறுநீர் கழித்தல் மற்றும் குடல் இயக்கங்கள் அல்லது மலச்சிக்கல் போன்றவை மிகுந்த வலியுடன் ஏற்படுதல்.
- அரிதாக, மஞ்சள் காமாலை ஏற்படுதல்.
- எலும்பு வலி.
இதன் முக்கிய காரணங்கள் என்ன?
ராபமோயோஸாரோமாவின் முக்கிய காரணம் இன்னும் அறியப்படவில்லை என்றாலும், இது மரபணு பிறழ்வுகளை சார்ந்ததாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?
மருத்துவர் அறிகுறிகளுக்கான முழு வரலாற்றை தொடர்ந்து, ஏதேனும் கட்டிகள் இருக்கிறதா என்பதை அறிய முழுமையான உடல் பரிசோதனையை மேற்கொள்ளலாம்.மேலும், மருத்துவர் பின்வரும் சோதனைகளை செய்யுமாறு அறிவுறுத்தலாம்:
- இரத்த பரிசோதனைகளுள் அடங்குபவை:
- முழுமையான இரத்த எண்ணிக்கை (சிபிசி).
- இரத்த வேதியியல்.
- கட்டிகள் இருந்தால் அவற்றின் பரப்பளவினை கண்டறியவும், சிகிச்சையின் திறனை கண்காணிக்கவும் இமேஜிங் சோதனைகள் மேற்கொள்ளப்படும். இந்த சோதனைகளுல் அடங்குபவை:
- எக்ஸ்-கதிர்கள்.
- அல்ட்ராசவுண்ட்.
- கம்ப்யூட்டேட் டோமோகிராபி (சிடி) ஸ்கேன்.
- காந்த அதிர்வு விம்பங்கள் (எம் ஆர் ஐ).
- எண்டோஸ்கோபிக் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் (ஈயூஎஸ்).
- பிஇடி (பாஸிட்ரான் எமிஷன் டோமோகிராபி) ஸ்கேன்.
- ஹிஸ்டோபாத்தாலஜி, என்பது பல்வேறு வகையான திசுப்பரிசோதனைகளை கொண்டது, அவை பின்வருமாறு:
- கோர் நீடில் பயாப்ஸி.
- ஃபைன் நீடில் ஆஸ்பிரேஷன் பயாப்ஸி (எஃப்என்.ஏ).
- எலும்பு மஜ்ஜை பரிசோதனை மற்றும் திசுப்பரிசோதனை.
- முதுகுத் தண்டுவட துளையிடுதல் (முள்ளந்தண்டு தட்டு).
ராபமோயோஸாரோமா சிகிச்சையானது கட்டியின் அளவு, அது அமைந்திருக்கும் இடம் மற்றும் நோயாளியின் வயது போன்ற பல காரணிகளை சார்ந்துள்ளது. பல்வேறு சிகிச்சை முறைமைகள் பின்வருமாறு:
- பல்வேறு தெரப்பிடிக் ஏஜென்ட்களை பயன்படுத்தி கீமோதெரபி சிகிச்சை.
- கட்டியோ அல்லது பாதிக்கப்பட்ட பகுதியை அகற்றவோ அறுவை சிகிச்சை மேற்கொள்தல்.
- ரேடியேஷன் தெரபி அல்லது புரோட்டான் பீம் தெரபி.