சிவந்த கண்கள் என்றால் என்ன?
சிவந்த கண் என்பது கண்களில் பெரும்பாலும் ஏற்படும் சிறிய பிரச்சனைக்கான றிகுறியை குறிக்கின்றது. இருப்பினும், இது எப்போதாவது வலியுடனும், முக்கிய பிரச்சனையை குறிப்பதற்காகவும் தோன்றலாம். இது கான்ஜுன்க்டிவிடிஸ் என அழைக்கப்படும் தொற்றுநோயைத் தொடர்ந்து கண்ணில் ஏற்படும் வீக்கம் / அழற்சியின் காரணமாகவும், துணைக்குழாய்க்குரிய இரத்தப்போக்கு என்றழைக்கப்படும் கண்ணின் உள்ளே ஏற்படும் இரத்தக்கசிவின் காரணமாகவும் ஏற்படக்கூடும்.
இதை சார்ந்த முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?
சிவந்த கண்களைச் சார்ந்த முக்கிய அடையாளங்கள் மற்றும் அறிகுறிகளுள் அடங்குபவை பின்வருமாறு:
- வலி.
- வீக்கமடைந்திருக்கும் கண்கள்.
- அரிக்கும் கண்கள், சில நேரங்களில் நீர் நிறைந்து இருத்தல்.
- கடுமையான தலைவலி.
- வெளிச்சத்திற்கான உணர்திறன்.
- கடுமையான வழக்குகளில், பார்வைத்திறன் மாற்றம் போன்ற புகாரும் ஏற்படலாம்.
இதன் முக்கிய காரணங்கள் யாவை?
சிவந்த கண்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் பின்வருமாறு:
- வெளிப்புற தூசு கண்களுக்குள் செல்தல், ஒவ்வாமை அல்லது இம்ம்யுனாலஜி எதிர்வினைகள் போன்ற காரணத்தினாலும் ஏற்படலாம்.
- காயம், கண்களினுள் ஊடுருவி சென்றோ அல்லது வெளிப்படையாகவோ ஏற்படலாம்.
- இரசாயனத்தினால் ஏற்படும் கண் எரிச்சல்.
- கண்களில் இருக்கும் இரத்த நாளங்கள் வெடிப்பதினாலும் சிவந்த கண்கள் ஏற்படலாம்.
- வைரல் அல்லது பாக்டீரியா நோய்த்தொற்றுகள்.
- கான்ஜுன்க்டிவிடிஸ், சலாசியன் மற்றும் கெராடிடிஸ் போன்ற நிலைகள் காரணிகளாக இருக்கலாம்.
- கிளௌகோமா, யூவிடிஸ் மற்றும் கார்னியல்- புண்களுடன் சிவந்த கண்கள் வலி மிகுந்து காணப்படலாம்.
- ஆஸ்பிரின் அல்லது வார்ஃபரின் போன்ற மருந்துகள்.
- துணைக்குழாய்க்குரிய இரத்தப்போக்கு போன்ற இரத்த கசிவு, இது மருத்துவ அவசர சிகிச்சைக்கான நிலையாகும்.
இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?
மருத்துவர், கண்கள் சிவந்து தோன்ற ஆரம்பித்த காலம், சிவப்புத்தன்மை பரவியிருக்கும் அளவு மற்றும் அதை சார்ந்து ஏதேனும் வலி ஏற்பட்டால் அதன் தீவிரம் போன்ற அறிகுறிகளின் முழு வரலாற்றையும் எடுக்க நேரிடும். அதன் பிறகு மருத்துவர் முழுமையான பரிசோதனையை மேற்கொண்டு பின்வருபவற்றை மதிப்பீடு செய்வார்:
- பார்வை.
- வெளிப்புற கண் தசைகளின் இயக்கங்கள்.
- உள்விழியில் ஏற்படும் அழுத்தம்.
- ஸ்லிட்-லாம்ப் சோதனை.
- கீறல், சிராய்ப்பு அல்லது எடிமா / காரீனியாவின் வீக்கம்.
- கண்ணிமை மற்றும் கண்ணீர் உட்பை அமைவுக்கான பரிசோதனை.
சிவந்த கண்களுக்கான பராமரிப்பு முற்றிலும் அதன் காரணத்தை சார்ந்தது, அவற்றுள் அடங்குபவை பின்வருமாறு:
- வீட்டில் எடுத்துக் கொள்ளவேண்டிய பராமரிப்பு, அதாவது:
- ஒரு நாளுக்கு இரண்டு முறை என மூடிய கண்களில் குளிர்ந்த ஒத்தடங்களோ அல்லது ஈர துணியைப் பயன்படுத்தி ஒத்தடம் கொடுத்தல்.
- கைகளின் ஆரோக்கியத்தை பராமரித்தப்பின் கண்களைத் தொடுதல் மற்றும் தினசரி சுத்திகரிக்கப்பட்ட புதிய படுக்கைவிரிப்பு மற்றும் துண்டுகளை பயன்படுத்துதல்.
- ஒவ்வாமை-ஏற்படுத்தும் தூண்டுதல் காரணிகள் அல்லது எரிச்சலூட்டிகள்.
- கண்ணில் ஏதேனும் வெளிப்புற தூசி இருந்தால் அவற்றை நீக்குதல்.
- மருந்துகளைக் கொண்டு பராமரிக்கும் முறை பின்வருமாறு:
- தொற்று நோயாளிகள் வழக்குகளில், கண்சிகிச்சை நுண்ணுயிர் எதிர்ப்பிகள்.
- ஒவ்வாமைக்கு ஆன்டிஹைஸ்டமைன் / வெசோகன்ஸ்டுக்டிக்டர் மாத்திரைகள் பயன்படுத்துதல்.
- வறண்ட கண்களுக்கு எதிர்ப்பு அழற்சி மருந்துகள், செயற்கை கண்ணீர்கள் மற்றும் லூப்ரிகண்ட் களிம்புகள் போன்றவைகளை பயன்படுத்தலாம்.
- கிளௌகோமா வழக்குகளில் இரத்த அழுத்தத்தை குறைப்பதற்கான மருந்துகள் உபயோகித்தல்.
- கடுமையான வழக்குகளில் அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படலாம்.