நுரையீரல் அடைப்பு (பல்மனரி எம்பொலிசம்) என்றால் என்ன?
நுரையீரல் அடைப்பு (பல்மனரி எம்பொலிசம்) என்பது நுரையீரலின் இரத்த நாளங்களில் இரத்த அடைப்பு ஏற்பட்டு அதனால் உண்டாகும் ஒரு குறைபாட்டு நிலை ஆகும். இரத்த அடைப்பு அல்லது இரத்த உறைவானது இரத்த நாளத்தின் வழியாக நுரையீரலை அடைந்து அங்கு அடைப்பை ஏற்படுத்துவதால் இந்நோய் உண்டாகிறது. இந்த அடைப்பு பெரிதாகவோ பல அடைப்புகளாகவோ இருந்தால் அந்நிலை உயிருக்கு ஆபத்தாக அமையும். இது நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தி அதனால் இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்து உடலின் மற்ற பாகங்களுக்கு வழங்கப்படும் ஆக்சிஜனில் தட்டுப்பாடு ஏற்பட்டு உடலின் மற்ற உறுப்புகளுக்கும் பெரும் பாதிப்பை உண்டாக்கலாம்.
இதன் முக்கிய அறிகுறிகள் என்னென்ன?
நுரையீரல் அடைப்பு இருப்பவரில் ஏறக்குறைய பாதி பேருக்கு எந்த வித அறிகுறியும் தென்படுவதில்லை. ஆனால் சிலருக்கு பின்வரும் அறிகுறிகள் தென்படுகிறது:
- மூச்சு விடுவதில் சிரமம்.
- இருமலில் இரத்தம் வருதல்.
- மார்பக வலி.
- முழங்கால் அல்லது தொடைகளில் வீக்கம்.
- கால்களில் வலி, பலமின்மை அல்லது சிவத்தல்.
இதன் முக்கியக் காரணங்கள் என்னென்ன?
இது பொதுவாக மிகவும் ஆழமான நரம்புகலில் இரத்தம் உறைதல் என்றழைக்கப்படும் ஒரு நிலையால் ஏற்படுகிறது. அதாவது கால்களின் நாளங்களில் உண்டாகும் இரத்தம்உறைதலினால் ஏற்படும் குறைபாடாகும். உறைந்த இரத்தம் மெலிந்து, நுரையீரல் நோக்கி பாய்கையில் நுரையீரல் அடைப்பை ஏற்படுத்துகிறது.
நுரையீரல் அடைப்பு ஏற்படுவதற்கான மற்ற காரணங்களில் பின்வருவன அடங்கும்:
- அறுவைச்சிகிச்சை, உதாரணமாக மூட்டு மாற்று அறுவைச்சிகிச்சை.
- ஹார்மோன் மாற்று சிகிச்சை.
- குடும்ப கட்டுப்பாடு மாத்திரை.
- இதயம் அல்லது நுரையீரல் நோய்கள்.
- கர்ப்பகாலம் அல்லது பிள்ளைப்பேறு.
- மரபுவழி பாதிப்பு.
- உடல் பருமன்.
இது எவ்வாறு கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது?
நுரையீரல் அடைப்பு கண்டறிவதற்கு கடினமாக இருந்தாலும் பின்வரும் முறைகள் மருத்துவர் இந்நிலையைச் சரியாகக் கண்டறிவதற்கு உதவுகின்றன:
- நோயாளியின் விரிவான மருத்துவ பின்புலம்.
- உடல் பரிசோதனை மற்றும் அறிகுறிகள் இருப்பதை கண்டறிவதற்கான சோதனைகள்:
- இமேஜிங் சோதனைகள்.
- இரத்தப் பரிசோதனை.
சிகிச்சையின் நோக்கம் இரத்தம் உறைதலை குறைப்பதும் மீண்டும் வராமல் தடுப்பதும் ஆகும். நுரையீரல் அடைப்பிற்கு பின்வரும் மருத்துவ முறைகள் பயன்படுத்தப்படுகின்றன:
- மருந்து சிகிச்சைமுறை:
- இருக்கும் உறைதலை கரைப்பதற்கும், அது மேலும் பெரிதாகாமல் தடுப்பதற்கும், புதிதாக உறைதல் ஏற்படாமல் இருப்பதற்கும் இரத்தம் உறைவு தடுப்பு மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
- உறைதலை கரைப்பதற்கு த்ராம்போலைடிக் மருந்துகள் பரிந்துரைக்கப் படுகின்றன.
செயல்முறைகள்:
- வீனா கேவா ஃபில்டர் எனப்படும் பெருஞ்சிரை வடிகட்டி: வீனா கேவா எனப்படும் பெருஞ்சிரைக்குள் வடிகட்டி புகுத்துவதன் மூலம் இரத்தம் உறைதல் நுரையீரலை அடைவதை தடுக்கலாம்.
- கேத்தடர் வடிகுழாய் உதவியுடன் அடைப்பை நீக்குவது: இம்முறையில் ஒரு வளையும் குழாய் நுரையீரலுக்குள் நுழைக்கப்பட்டு அடைப்புகள் நீக்கப்படுகின்றன.