சுருக்கம்
சொரியாஸிஸ் என்பது, தோலின் அணுக்களில் தூண்டப்படும் ஒரு அசாதரணமான பெருக்கத்தின் காரணமாக ஏற்படும், ஒரு நாள்பட்ட தோல் பிரச்சினையாகும். இந்த அணுக்கள் விரைவாகப் பெருகி, பாதிக்கப்பட்ட பகுதியில் வீக்கத்தைத் தூண்டுகிறது. சொரியாஸிஸ் வழக்கமாக, தோலில் சிவந்த தடிப்புகளை ஏற்படுத்துகிறது. இந்தத் தடிப்புகள் வேதனையை ஏற்படுத்துகின்றன மற்றும் அவை கொடூரமாக அரிக்கக் கூடிய வெள்ளி போன்ற வெண்மை நிற செதில்களைக்கொண்டிருக்கின்றன. உடலியல்ரீதியான அறிகுறிகள், வளர்வது மற்றும் தேய்வதின் பல்வேறு கட்டங்களைக் காட்டுகிறது, ஆனால், எதிர்பாராத விதமாக, இந்த நோயைக் குணப்படுத்த முடியாது. இருப்பினும், போதுமான சிகிச்சையினால், அறிகுறிகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். வாழ்க்கை முறை மாற்றங்களுடன் (மன அழுத்தத்தைத் தவிர்த்தல், மாயிச்சரைசர்களைப் பயன்படுத்துதல், புகைப்பிடித்தலை மற்றும் மது அருந்துவதைத் தவிர்த்தல் போன்றவை) கூடவே, குறி வைத்த சிகிச்சை ( குறிப்பிட்ட இடப் பயன்பாடுகள், ஒளிக்கதிர் சிகிச்சை மட்டும் வாய்வழி மருந்துகள்), வழக்கமாக, குணமடைந்திருக்கும் காலத்தை நீட்டிக்கச் செய்கின்றன (அறிகுறி இல்லாத கட்டம்).