முதன்மை நோய் எதிர்ப்பு குறைப்பாடு என்றால் என்ன?
முதன்மை நோய் எதிர்ப்பு குறைப்பாடு (பி.ஐ.டி) என்பது நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாகங்களின் செயல்பாடு இல்லாத அல்லது முறையற்ற செயல்பாட்டினைக் கொண்ட மரபுவழி நோய்களின் ஒரு தொகுப்பாகும். நோய் எதிர்ப்பு அமைப்பு, வெள்ளை இரத்த அணுக்களால் செய்யப்படுகிறது. ஆன்டிபாடிகளை உருவாக்குவதன் மூலம் நுண்ணுயிரிகளின் தாக்குதலில் இருந்து நம் உடல் தன்னைத்தானே பாதுகாக்கிறது. பி.ஐ.டி நோயின் பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இந்த ஆன்டிபாடிகள் காணாமல் போகின்றன அல்லது உடலை பாதுகாப்பதில் திறமையாக செயல்படுவதில்லை. சுவாச அமைப்பு, செரிமான பாதை, மூளை, முதுகுத் தண்டு அல்லது உடலின் பிற அமைப்புகள் ஆகியவற்றை பி.ஐ.டி நோய் பாதிக்கலாம். ஏறக்குறைய, 150 க்கும் அதிகமான பி.ஐ.டி வகைகள் உள்ளன, தற்போது அந்தப் பட்டியலில் புதிய வகை ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
பி.ஐ.டி நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் கீழ் கொடுக்கப்பட்டுள்ள தாக்கங்கள் மற்றும் அறிகுறிகளை அனுபவிக்கலாம்:
- குணப்படுத்த கடினமாக இருக்கும் ஒரு மீண்டும் மீண்டும் ஏற்படும் தொற்று.
- விரிவடைந்த மண்ணீரல்.
- தோல் அல்லது உறுப்புகளில் மீண்டும் மீண்டும் சீழ்கட்டி ஏற்படுதல் அல்லது சீழ் வடிதல்.
- எடை இழப்பு.
- மூளையை மூடியிருக்கும் அடுக்கில் அழற்சி அல்லது வீக்கம் (மூளைக்காய்ச்சல்).
- மீண்டும் மீண்டும் ஏற்படும் நிமோனியா.
- வீங்கிய நிணநீர் முனைகள்.
நோய்தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
மரபணு மற்றும் பரம்பரை குறைபாடுகளால் பி.ஐ.டி ஏற்படுகிறது மற்றும் ஒரு தொற்றுநோய் அல்ல. பல மரபணு மாற்றங்கள், பி.ஐ.டி நோயின் கீழ் வரும் பல்வேறு நோய்களை ஏற்படுத்துகின்றன.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
பி.ஐ.டி நோயை அடையாளம் காண மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் நோயறிதல் சோதனைகள் பின்வருமாறு:
- ஆன்டிபாடிகள் மற்றும் வெள்ளை இரத்த அணுக்களின் அளவுகளை கண்டறிய இரத்த பரிசோதனைகள்.
- ஏற்கனவே பி.ஐ.டி நோய் உள்ள ஒரு குழந்தையை பெற்ற பெற்றோர்கள் அடுத்த குழந்தைக்கு முயற்சிக்கும்போது முன்கூட்டியே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இது கர்ப்பப்பை பாதிக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை தீர்மானிப்பதில் உதவுகிறது.
- மரபணுக்களின் குறைபாட்டை அடையாளம் காண மரபணு சோதனைகள்.
நோய்த்தடுப்பு குறைபாடுகளின் வகையைப் பொறுத்து சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. அவை:
- எலும்பு மஜ்ஜை, தைமஸ், அல்லது தண்டணு மாற்று அறுவை சிகிச்சை.
- இம்முனோமோடுலேஷன், நோயெதிர்ப்பு மண்டலத்தை ஊக்குவிப்பதற்காக இண்டர்ஃபெரன் காமா பயன்படுத்தப்படுதல்.
- நோய் தொற்றை தடுக்க மற்றும் சிகிச்சை அளிக்க மற்றும் இந்த நிலையை சமாளிக்க ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள்.
- தற்சார்பு கோளாறுகள் ஏதேனும் இருந்தால் அதன் மேலாண்மை.
- ஆன்டிபாடி மாற்று சிகிச்சை.