கர்ப்பகாலத்தில் ஏற்படும் மனநிலை மாற்றங்கள் என்றால் என்ன?
நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போது உங்கள் வாழ்க்கையிலும், உடலிலும் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.உயிரியல் மாற்றங்களான மசக்கை (உடற்சோர்வு, வாந்தி, மயக்கம்), மலச்சிக்கல், மாங்காய் போன்ற புளிப்பான உணவுப் பொருட்களை உண்பதற்கு ஆசைப்படுதல், அரிப்பு, முதுகுவலி, பூஞ்சைத் தொற்று நோயான யோனி வெண்புண், தலைவலி, கால் பிடிப்புகள், வீக்கம் மற்றும் இது போன்று பல மாற்றங்கள் நிகழும்.இது போன்ற சில மாற்றங்களை கையாள்வது என்பது கடினம்.மேலும் இது உங்களை அசௌகரியமாக உணரச்செய்து, மனநிலை மாற்றப் பிரச்சனைக்கும் வழிவகுக்கும்.கர்ப்ப காலத்தின் போது அனைத்து கர்ப்பிணி பெண்களும் பொதுவாக இந்த மனநிலை மாற்ற பிரச்சனையை எதிர்கொள்வார்கள்.சில நேரங்களில், இந்த மனநிலை மாற்ற பிரச்சனை பதற்றம்/கவலை மற்றும் மனச்சோர்வு ஏற்பட வழிவகுக்கும்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போது எதிர்கொள்ளும் மனநிலை மாற்ற அறிகுறிகள் பின்வருமாறு:
- கர்ப்பமாக இருப்பதால் ஏற்படும் திடீர் உற்சாகம்.
- மன அழுத்தம்.
- உணர்ச்சிவயப்படுதல்.
- குழந்தை பிறப்பு மற்றும் பெற்றோராக இருக்கப்போவது குறித்த கவலை.
- எந்த ஒரு வெளிப்படையான காரணமும் இன்றி சோகமாக இருத்தல்.
சில நேரங்களில், இந்த அறிகுறிகள் மிகவும் மோசமான நிலையை அடைவதால் இதற்கு முறையான சிகிச்சை அவசியம்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
கர்ப்பகாலத்தில் ஏற்படும் மனநிலை மாற்றங்கள் நிகழ வழிவகுக்கும் காரணிகள் பின்வருமாறு:
- ஹார்மோன் மாற்றங்கள்.
- வளர்சிதை மாற்றங்கள்.
- சோர்வு.
- உடல் சார்ந்த அழுத்தம்.
கர்ப்பிணி பெண்களில் ஏற்கனவே ஏற்பட்ட மனஅழுத்தம் மற்றும் கவலை கூட இந்த மனநிலை மாற்றம் ஏற்பட ஒரு காரணியாக இருக்கலாம்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
கர்ப்பகாலத்தில் ஏற்படும் மனநிலை மாற்றங்கள் என்பது சாதரணமாக நிகழும் ஒரு மாற்றமே என்பதால் இதற்கு நோயறிதல் ஏதும் தேவை இல்லை.ஆனால், இந்த மனநிலை மாற்றங்கள் உங்கள் தினசரி வாழ்க்கையில் ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்தினாலோ அல்லது கீழ்காணும் அறிகுறிகள் ஏதேனும் இருந்தாலோ நீங்கள் உங்களது மருத்துவர் அல்லது பெண்மைப் பிணியியல் மருத்துவரை அணுக வேண்டும்:
- தூக்க தொந்தரவுகள்.
- குறுகிய கால மறதி.
- கவலை.
- அதிக எரிச்சலூட்டும் உணர்வு.
- உணவு பழக்க வழக்கங்களில் மாற்றங்கள்.
- நீண்ட நேரம் எந்த ஒரு பணியிலும் கவனம் செலுத்துவதில் சிரமம்.
இந்த அறிகுறிகள் உங்களுக்கு கர்ப்பம் தொடர்பான மன அழுத்த பிரச்சனை இருப்பதைக் குறிக்கலாம்.இந்த பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்க பொதுநல மருத்துவர் குறிப்பிட்ட சில மருந்துகளை உங்களுக்கு வழங்குவார், மேலும் அவர்/அவள் இந்த பிரச்சனைக்கு ஆலோசனை பெற சில உளவியலாளரை உங்களுக்கு பரிந்துரைக்கலாம்.இந்நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மற்ற நிர்வாக உத்திகள் பின்வருமாறு:
- கர்ப்ப கால யோகா அல்லது தியானம்.
- தினசரி உடல் சார்ந்த செயல்பாடு.
- நேர்மறையான சிந்தனை மற்றும் நேர்மறையான சிந்தனை உள்ள சூழலில் தங்கி இருத்தல்.
- நடைப்பயிற்சி.
- நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் படம் பார்த்தல்.
- ஒய்வு எடுக்க நேரம் ஒதுக்கி ஓய்வெடுத்தல்.
- உங்கள் கணவருடன் இரவு உணவு உண்ணுதல்.
- மசாஜ் செய்தல் (உருவுதல்).