பிளேக் (கொள்ளை நோய்) என்றால் என்ன?
பிளேக் நோயானது மனிதர்கள் மற்றும் பிற பாலூட்டிகலில் அதிக அளவில் தொற்றினை ஏற்படுத்தக்கூடிய ஒரு பாக்டீரியா தொற்றுநோயாகும். ஒரு கால கட்டத்தில் மத்திய கிழக்கு ஐரோப்ப கண்டத்தில் மில்லியன் கணக்கான மக்கள் இறப்பதற்கு இந்த நோய் ஒரு காரணம் ஆகும். இதனால் இந்நோய் கருப்பு இறப்பு (பிளாக் டெத்) என்று அழைக்கப்பட்டது. தற்போது, அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் இந்த பிளேக் நோயானது மனிதர்களில் தொடர்ந்து தொற்றினை ஏற்படுத்தி வருகிறது, ஆனால் ஆப்ரிக்கா மற்றும் ஆசியாவின் தொலைதூரப் பகுதிகளிலும் இந்நோயின் பாதிப்பு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
பிளேக் நோயானது மூன்று வகைப்படும் மற்றும் நோயின் வகையைப் பொறுத்து அதன் அறிகுறிகள் மாறுபடலாம். அவை பின்வருமாறு.
- பபோனிக் வகை பிளேக் நோயானது, கடுமையான அழற்சி அல்லது மண்ணீரல் மற்றும் டான்சில்ஸ் பகுதிகளில் வீக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தி, காய்ச்சல், உடம்பு வலி, வெடிக்கும் குமிழ்வடிவ புண்கள் மற்றும் நிணநீர் முனைகளில் மென்மை ஆகிய அறிகுறிகளை ஏற்படுத்தும். இந்த வகையான பிளேக் நோயானது நிணநீர் முனைகளிலிருந்து உடலின் மற்ற பாகங்களுக்கு இந்நோயை பரப்பலாம்.
- செப்டிசீமிக் வகை பிளேக் நோயானது, தீவிர பலவீனம், காய்ச்சல், குளிர்ச்சி, தீவிர அடிவயிற்று வலி, மற்றும் முனைப்புள்ளிகளில் கருமை போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கிறது. இந்த வகையான பிளேக் நோயானது பெரும்பாலும் சிகிச்சை அளிக்கப்படாத பபோனிக் பிளேக் நோயின் காரணமாக ஏற்படுகிறது.
- மார்பு வலி, சுவாசிப்பதில் சிரமம், தொடர்ந்து இருமல் மற்றும் நிமோனியா போன்றவை நிமோனிக் வகை பிளேக் நோயின் அறிகுறிகளாகும்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
இந்த தொற்றானது யெர்சினியா பெஸ்ட்டிஸ் எனப்படும் ஒரு பாக்டீரிய நுண்ணியிரியினால் ஏற்படுகிறது, இது பெரும்பாலும் கொறித்துண்ணிகள் மற்றும் தெள்ளு பூச்சிகளில் காணப்படுகிறது. இந்த பிளேக் நோயினால் பாதிக்கப்பட்ட எலிகள் அல்லது பறவைகள், மனிதர்கள் மற்றும் பாலூட்டிகளை கடிப்பதன் மூலம் இந்த பாக்டீரிய தொற்று ஏற்படலாம். நேரடி தொடர்பு காரணமாகவும் இந்த பரவக்கூடிய நோய் மற்றவர்களுக்கு பரவலாம்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
இரத்த பரிசோதனை மற்றும் நோய்த்தாக்கப்பட்ட திசு மாதிரிகள் சோதனை போன்று பல நோயறிதல் சோதனைகள் இந்த பிளேக் நோய் இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக செய்யப்படலாம். பிளேக் நோய் ஓர் குறிப்பிடத்தக்க நோயாதலால், இந்நோய் இருப்பது உறுதி செய்யப்பட்ட உடன் மேலும் அது பரவாமல் தடுக்க உள்ளூர் மருத்துவ அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
பிளேக் நோயானது தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு நோயாகும், எனவே அதற்கு உடனடி சிகிச்சை முறை தேவைப்படுகிறது. தற்போது மருத்துவ ஆய்வுகளின் முன்னேற்றத்தினால், ஆண்டிபயாடிக் மருந்துகளின் உதவியுடன் பிளேக் நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. பிளேக் நோயினை ஆரம்பத்திலேயே கண்டறிதல் மற்றும் காலம் தவறாத சிகிச்சை முறை, இந்நோயிலிருந்து குணமடைவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.
இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களை கவனித்து கொள்ளும் நபரும் மருத்துவ கவனிப்பின் கீழ் வைக்கப்பட வேண்டும். மேலும் அவர்கள் இந்த பிளேக் நோய் தொற்றுவதிலிருந்து தங்களை பாதுகாத்துகொள்ள நோயாளியுடன் நேரடியாக தொடர்பு கொள்வதை தவிர்க்க வேண்டும். இந்நாள் வரை இந்நோய்க்கென்று தடுப்பூசி எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.