பிந்தா நோய் என்றால் என்ன?
பிந்தா நோய், அசூல், டைனா, மற்றும் லோட்டா என்று வேறு பல பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இது தோலை பாதிக்கும் அரிதாக ஏற்படக்கூடிய ஒரு தொற்றுநோய் ஆகும். இந்த நோயை பற்றிய அறிக்கை முதலில் 16ம் நுற்றாண்டில் மெக்ஸிகோவில் வெளியிடப்பட்டது. பிந்தா நோயின் தாக்கம் காணப்படும் பகுதிகளைப் பற்றி தற்பொதைய காலகட்டத்தில் பொதுமான ஆய்வு அறிக்கை எதுவும் இல்லை. அதற்கு நோய் மிகவும் அரிதாக உள்ளதே காரணமாகும்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் என்ன?
பிந்தா நோய் ஓரு தனி நபரை மூன்று நிலைகளில் பாதிக்கிறது:
- ஆரம்ப கால கட்டத்தில் ஓரு தனி நபருக்கு சிகப்பு புள்ளிகள் மற்றும் கைகள், கால்கள் மற்றும் உடம்பின் பிற பகுதிகளில் புண்கள் உறுவாகிறது. இந்த புள்ளி மற்றும் பருக்கள் அரிப்பு மற்றும் அளவில் பெரிதாக வளரும் தன்மைக்கொண்டது.
- இரண்டாவது நிலையில், இரண்டாம் அடுக்கு தோல் போல் தோற்றமளிக்கும் இரட்டை தோல் வெடிப்புகள் ஏற்படுகிறது, அது பின்டிட்ஸ் என அழைக்கப்படுகிறது. இவைகள் ஆரம்பத்தில் எந்த இடத்தில் புண் ஏற்ப்பட்டதோ அதே இடத்தில் இவை வறண்டு மற்றும் செதில்களாக காணப்படும்.
- ஆரம்ப நிலையிலிருந்து 2-5 வருடங்களுக்கு பிறகு இந்த நோயின் கடைசி நிலை ஏற்படும். இந்த நிலையில், வெள்ளை மற்றும் நிறமற்ற புண்கள் தோன்றும். பாதிக்கப்பட்டவர்களுக்கு திட்டுகள் மற்றும் சுருக்கங்களுடன் கூடிய தடித்த மற்றும் வறண்ட சருமம் உருவாகலாம்.
நோய்தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
ட்ரிபோனிமா கரடியம் என்னும் பாக்டீரியாவால் இந்த நோய் ஏற்படுகிறது மற்றும், இந்த உயிரினங்கள் நேரடி தொடர்பு காரணமாக பரவுகிறது. மேம்பட்ட பொதுவாக மேம்படுத்தப்பட்ட தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் தூய்மையாக்கம் காரணமாக, இந்த உயிரினத்தின் இருப்பு மற்றும் பரவுதல் கிட்டத்தட்ட தெரியவில்லை. இருப்பினும், சில ஆப்பிரிக்க நாடுகளைப் போன்ற சில வளரும் நாடுகளில் ஆண்டு முழுவதும் இந்த நிலை தொடர்கிறது.
இது எப்படி கண்டறியப்படுகிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படுகிறது?
அதன் ஆரம்ப கட்டத்தில் இந்த நோய் மற்ற தோல் நோய்களுடன் குழப்பப்படுவதால் பிந்தா நோயின் கண்டறிதல் நீண்ட நேரம் எடுக்கலாம். இந்த நோய் அதிகமாக் காணப்படக்கூடிய பகுதியில் இருந்து ஒருவருக்கு பரவியுள்ளதா என்பதைக் கண்டறிய அவரின் பயண வரலாறு போன்ற முழுமையான விவரங்களை மருத்துவர் பொதுவாக கேட்டறிவார். பிற நோயறிதல் சோதனைகள் பின்வருமாறு:
- இரத்தப் பரிசோதனைகள்.
- திசு மாதிரிகளை சோதித்தல்.
பிந்தா நோய்க்கு பொதுவாக நுண்ணுயிர் எதிர்ப்பிகளால் சிகிச்சையளிக்கப்படுகிறது, அவை பாக்டீரியாவை அகற்றுவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மற்றும் இதனால் அவை அறிகுறிகளைத் தீர்க்கின்றன. கடைசி நிலைகளில் கண்டறியப்பட்ட பிந்தா நோய்க்கு சிகிச்சை அளிக்க நீண்ட காலம் தேவைப்படலாம். இந்த நோய் அமெரிக்காவில் பரவலாக இல்லை, ஆனால் வெப்பமண்டல பகுதிகளில் ஏற்படலாம், எனவே இந்த வெப்பமண்டல பகுதிகளில் இருந்து வருபவர்கள் மற்றும் அங்கு செல்பவர்கள் இந்த அறிகுறிகளை அனுபவித்தால், அவர்கள் தேவையான பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டும்.