ஆண்குறி புற்றுநோய் என்றால் என்ன?
ஆண்குறி புற்றுநோய் என்பது ஆண்குறி திசுக்களில் பெருமளவில் கட்டுப்படுத்த முடியாத முறையில் தீங்குவிளைவிக்கும் அணுக்கள் அல்லது புற்றுநோய் அணுக்கள் பெருகும் ஒரு நோயாகும்.இது ஒரு அரிதான புற்றுநோய் வகை, இது 40 வயதிற்கு மேற்பட்ட ஆண்களிடையே காணப்படுகிறது.விருத்தசேதனம் செய்வது புற்றுநோயின் அபாயத்தை குறைக்கிறது மற்றும் இதனால், முஸ்லிம் மற்றும் ஜூயிஷ் மதத்தை சேர்ந்த ஆண்களில் ஆண்குறி புற்றுநோய் பொதுவாக ஏற்படுவதில்லை.ஆண்குறி புற்றுநோய், அதனுடன் சம்பந்தப்பட்ட செல்களை பொறுத்து பல்வேறு வகைகளாக வகைப்படுத்தப்படுகிறது.ஆண்குறியின் தோலை பாதிக்கும் புற்றுநோய் ஆணுறுப்பின் மெலனோமா என்று அழைக்கப்படுகிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
ஆணுருப்பைத் தொடும்போது ஏற்படும் ஒரு அசாதாரண வளர்ச்சி அல்லது கட்டி இருப்பது போன்ற உணர்வு ஆண்குறி புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளில் ஒன்றாகும்.பல வாரங்களாகியும் தீராத இரத்தப்போக்கு அல்லது தொடர்ச்சியான ஃபவுல் டிஸ்சார்ஜ், ஆண்குறியின் நுனிப்பகுதியில் புண்கள், ஆண்குறியின் தண்டில் புண்கள் அல்லது அசாதாரண காயங்கள் அல்லது ஆண்குறியில் அசாதாரணமான வலி ஆகியவை மற்ற அறிகுறிகள் ஆகும்.இந்த அறிகுறிகளால் விவரிக்க முடியாத எடை இழப்பு, மந்தஉணர்வு மற்றும் நோய் தீவிரமடைந்தால் சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஆகியவை ஏற்படும்.
நோய்தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
ஆண்குறி புற்றுநோய் ஏற்படுவதற்கான சரியான காரணம் இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை;இருப்பினும், சில ஆபத்து காரணிகள் உள்ளன. அவை புகைபிடித்தல் மற்றும் ஃபிமோஸிஸ் (ஆண்குறிஉறை இறுக்கம்), இதில் நுனித்தோல் ஆண்குறியின் நுனியுடன் ஒட்டிக்கொள்வதால் மீண்டும் மீண்டும் நோய்த்தொற்றுகள் ஏற்படும் ஆபத்தை ஏற்படுத்துகிறது, மேலும் இதனால் புற்றுநோய் உருவாகும் ஆபத்து அதிகரிக்கிறது.அதிக வயது, ஆண்குறி காயம் மற்றும் பிறப்புறுப்பு மருக்கள் அல்லது கொப்புளங்கள் இருந்ததன் வரலாறு ஆகியவை பிற காரணிகள் ஆகும்.
இது எவ்வாறு கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
ஒரு பொதுவான பயிற்சியாளரால் சிகிச்சை பெற்ற பிறகும் மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் ஏதேனும் இருந்தால், இதைப்பற்றி மேலும் விரிவாக சோதிக்கும் ஒரு தனிப்பட்ட நிபுணர் அல்லது ஒரு சிறுநீரக நிபுணரை நீங்கள் சந்திக்கவேண்டும்.குறிப்பிட்ட இடத்தில திசுப்பரிசோதனை (பயாப்சி) செய்வது முதன்மையான மற்றும் மிக முக்கியமான விசாரணைகளில் ஒன்று.திசுப்பரிசோதனை என்பது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட உறுப்பிலிருந்து ஒரு திசு மாதிரியை சேகரித்து, புற்றுநோய் அணுக்கள் அல்லது பிற நோய்களுக்கான காரணிகள் உள்ளதா என்பதை நுண்ணோக்கின் கீழ் பரிசோதிக்கும் ஒரு முறை.இது முடிந்தவுடன், பி.இ.டி ஸ்கேன் அல்லது சி.டி ஸ்கேன் போன்ற தொடர் பரிசோதனைகள் மூலம் புற்றுநோய் ஊடுருவலின் அளவவும் அதன பரவல் அளவும் அளவிடப்படுகின்றன. இதன் விளைவாக, நிணநீர் முனை தொடர்பு, பரவுதல் மற்றும் சாதாரண திசுக்களில் புற்றுநோய் படையெடுப்பின் அளவீடு ஆகியவற்றின் அடிப்படையில் புற்றுநோயின் நிலை கண்டறியப்படுகிறது.இந்த ஸ்டேஜிங் (புற்றுநோயின் நிலையைக் கண்டறிதல்) புற்றுநோயின் முன்கணிப்பு மற்றும் ஒருவர் இந்த நோயில் இருந்து மீள்வதற்கான வாய்ப்புகளை பற்று ஒரு தெளிவான கருத்தை தெரிவிக்கிறது.
பாதிக்கப்பட்ட பகுதியின் அளவு மற்றும் புற்றுநோய் பரவுதலின் அளவைப் பொறுத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.ஆண்குறி முனையில் கட்டிகள் மற்றும் தோலில் மட்டுமே இந்த நோய் ஏற்பட்டிருந்தால், லேசர் அறுவை சிகிச்சை மூலம் அந்த பகுதி நீக்கம் செய்யப்படுகிறது.ஒரு தோல் மாதிரி அந்த இடத்தில் ஒட்டப்படுகிறது.புற்றுநோயின் மேம்பட்ட கட்டங்களில், சிகிச்சையில் கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை ஆகியவை அடங்கும்.