சுருக்கம்
தசை வலி என்பது உடல் உழைப்பினால் அல்லது அதிகப்படியான உடல் உறுப்புக்களின் பயன்பாட்டின் விளைவினால் அல்லது தசை குழுவினால் அடிக்கடி ஏற்படக்கூடிய மிக பொதுவான வலியாகும். இது கடுமையான அல்லது இயற்கையிலே நாள்பட்ட வலியாகவும் இருக்கலாம். தசை வலியின் அறிகுறிகள் அதன் முதல் நிலையில் தசையில் வலியினை உண்டாக்கும் காரணத்தை பொறுத்தது. தசை வலியின் மிக பொதுவான காரணங்கள் சோர்வு, மன அழுத்தம், தவறான உடல் நிலை பயன்பாடுகள், காயங்கள் மற்றும் நேய் தொற்று உள்ளிட்டவை ஆகும். தசை வலியானது பொதுவாக ஒரு சில நாட்களுக்குள் தானகவே குணமடைய கூடும். எனினும், நீண்டகால தசை வலியானது ஒரு அடிப்படை உடல் நல கோளாறின் அடையாளமாக இருக்கலாம். இரத்த பரிசோதனைகள், இமேஜிங் சோதனைகள், மற்றும் முழு உடல் பரிசோதனை ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்த தசை வலி நோயை கண்டறியலாம். சுளுக்கு மற்றும் தசைப்பிடிப்பு போன்ற தசை வலிக்கு, சூடான நீரில் ஒத்தடம் கொடுப்பது மற்றும் ஓய்வு எடுத்துக் கொள்வது போன்ற வீட்டு வைத்தியத்தின் மூலம் சிகிச்சை அளிக்கலாம். பிசியோ தெரபி, வலி நிவாரண மருந்துகள், மற்றும் அறுவை சிகிச்சை போன்ற பிற சிகிச்சைக்களும் இதில் அடங்கும்.