சுருக்கம்
ஒற்றைத் தலைவலி (மைகிரேன்) என்பது நரம்பியல் சம்பந்தமான தொடர் கடுமையான தலைவலியாகும். குறிப்பாக தலையில் ஒரு பக்கத்தில் மட்டும் கடுகடுப்பான வலிகள் ஏற்படும். ஒற்றைத் தலைவலிக்கான அறிகுறிகளைக் கொண்ட ஒரு நபர் இருண்ட மற்றும் அமைதியான இடத்தில் முழுமையாக ஓய்வெடுக்க வேண்டும். சிலருக்கு, ஒற்றை தலைவலி வருவதற்கான காரணங்கள் ஓளி சுடர் மூலம் அல்லது இருண்ட பகுதிகளை பார்க்கும்போது மற்றும் குமட்டல் வாந்தியுடன் சேர்ந்த கைக்கால் கடுகடுப்புகளாகும். ஒற்றை தலைவலியை முழுமையாக குணப்படுத்த மருந்துகள் கிடைக்கவில்லை என்றாலும் குறிப்பிட்ட மருந்துகள், வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் ஒற்றைத் தலைவலி மற்றும் அதன் தீவிரத்தை குறைக்கலாம்.