வீரியம் மிக்க அதிவெப்பத்துவம் என்றால் என்ன?
உடலின் உயர் வெப்பநிலை அதிவெப்பத்துவம் என அறியப்படுகிறது. வீரியம் மிக்க அதிவெப்பத்துவம் (எம்.ஹெச்) என்பது அறுவை சிகிச்சையில் (குறிப்பாக மயக்க மருந்து வாயுக்கள்) பயன்படுத்தப்படும் சில மருந்துகளுக்கு விரைவான எதிர்விளைவு ஏற்படும் ஒரு குடும்ப மரபுவழி நோயாகும். கடுமையான தசை சுருக்கங்கள் மற்றும் உடலின் வெப்பநிலையில் அதிதீவிர உயர்வு ஆகிய அறிகுறிகள் வீரியம் மிக்க அதிவெப்பத்துவ நிலையில் காணப்படும். அவசர மருத்துவம் தேவைப்படும் நோய்த்தொற்று மற்றும் வெப்ப வாதம் போன்ற பிற நிலைகளில் இருந்து வீரியம் மிக்க அதிவெப்பத்துவம் வேறுபடுகிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
எம்.ஹெச்-ன் பொதுவான தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:
- 105 ° F (40.6 ° C) அல்லது அதற்கும் அதிகமான உடல் வெப்பம் (மேலும் வாசிக்க: காய்ச்சலுக்கான சிகிச்சை).
- தசை இறுக்கம், விறைப்பு மற்றும் வலி (அறியப்படாத காரணத்தால்).
- விரைவான இதய துடிப்பு.
- அமிலத் தேக்கம்.
- இரத்தப்போக்கு.
- இருண்ட பழுப்பு நிறமாக இருக்கும் சிறுநீரின் நிறமாற்றம்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
வீரியம் மிக்க அதிவெப்பத்துவம் ஏற்படுவதற்கான காரணங்கள் பின்வருமாறு:
- பரம்பரை ரீதியாக இந்நிலை ஏற்படுதல் (வீரியம் மிக்க அதிவெப்பத்துவ நோயின் தாக்கம் பெற்றோர் ஒருவருக்கு இருப்பினும் அவர்களின் குழந்தைகளுக்கும் வருவதற்கு வழிவகுக்கும்).
- இந்நிலை ஏற்படுவதற்கு காரணமான பிற மரபுவழி தசை நோய்கள் பின்வருமாறு:
- மல்டிமினிகோர் மயோபதி (தசைநோய்).
- உள்ளக (சென்ட்ரல் கோர்) நோய்.
இந்த இரு நோய்களும் எலும்புத்தசைகளை பாதிக்கின்றன. இது தசை பலவீனத்திற்கு வழிவகுக்கிறது.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
இந்த நிலை பொதுவாக அறுவை சிகிச்சையின் போது, மயக்க மருந்து கொடுக்கப்பட்ட பின்னர் பொதுவாக வெளிப்படுகிறது. மயக்க மருந்து கொடுக்கப்படும் போது வேகமான மற்றும் ஒழுங்கற்ற இதய துடிப்பு, மற்றும் சில நேரங்களில் விவரிக்கப்படாத மரணம் ஆகியவை, வீரியம் மிக்க அதிவெப்பத்துவ நோயால் பாதிக்கப்பட்டருக்கு சம்பவிக்கலாம். எனவே, வீரியம் மிக்க அதிவெப்பத்துவ நோய் அறிய குடும்பத்தினரின் மருத்துவ பின்புலம், மயக்க மருந்து வழங்குவதற்கு முன்பு மருத்துவரால் பரிசீலனை செய்யப்படுகிறது. இந்த நிலைமையை கண்டறியும் சில சோதனைகள் பின்வருமாறு:
- இரத்த பரிசோதனைகள்:
- இரத்தம் உறைதல் சோதனைகள்: ப்ரோத்ரோம்பின் நேரம் (பி.டி) மற்றும் பகுதியளவு த்ரோம்போபிளாஸ்டின் நேரம் (பி.டி.டி).
- கிரியேட்டின் பாஸ்போகைனேஸ் (சி.பி.கே) உள்ளடக்கிய இரத்த வேதியியல் குழு.
- தசை புரதமான மையோகுளோபின் அளவை மதிப்பீடு செய்ய சிறுநீர் சோதனை.
- மரபணு சோதனை.
- தசைத் திசு பரிசோதனை.
வீரியம் மிக்க அதிவெப்பத்துவ நோயின் மேலாண்மை பின்வருவனவற்றை உள்ளடக்குகிறது:
- டேன்ட்ரோலீன் வீரியம் மிக்க அதிவெப்பத்துவ நோயின் சிகிச்சைக்கு தேர்ந்த ஒரு மருந்தாக கருதப்படுகிறது.
- குளிரூட்டும் போர்வை கொண்டு போர்த்தி காய்ச்சல் அல்லது மேலும் தீவிர சிக்கல்கள் ஏற்படும் ஆபத்தை குறைத்தல்.
- வீரியம் மிக்க அதிவெப்பத்துவ தொடர்ச்சியான நிகழ்வின் போது நரம்பு வழியாக திரவங்கள் வழங்கப்படுகிறது. இது சிறுநீரகங்களுக்கு சேதம் ஏற்படுவதை தடுக்க உதவுகிறது, இதன்மூலம் அதன் செயல்பாடு பாதுகாக்கப்படுகிறது.