சுருக்கம்
மனித உடலின் உள் உறுப்புகளில், கல்லீரல் மிகப்பெரிய சுரப்பியாகும். இது செரிமானம், ஊட்டச்சத்து வளர்சிதை மாற்றம் மற்றும் சேமிப்பு, போதயுட்டியின் நச்சுநீக்கம், மது நச்சுநீக்கம் , வளர்சிதை மாற்றத்தின் போது தயாரிக்கப்படும் தீங்கு விளைவிக்கும் ரசாயன பொருட்கள் நீக்கம் மற்றும் சிறப்பு புரதங்கள் மற்றும் உறைதல் காரணிகளின் உற்பத்தி போன்ற பல முக்கிய செயல்பாடுகளை செய்கிறது. கல்லீரலின் கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டில் ஏதும் பிரழ்மை ஏற்பட்டால் கல்லீரல் நோய் ஏற்படும். மது, உடல் பருமன், ஒட்டுண்ணிகள், வைரஸ்கள், பாக்டீரியாக்கள், சில மருந்து அல்லது விஷங்களின் காரணமாக கல்லீரல் நோய் ஏற்படலாம். கல்லீரல் அதன் பல்வேறு செயல்பாடுகளை செய்கையில், கல்லீரல் நோய்க்கான அறிகுறிகள் வெளிபடுகின்றன. ஆனால் கல்லீரல் நோயைக் கண்டறியும் மிகச் சிறந்த அறிகுறி மஞ்சள் காமாலை ஆகும். மஞ்சள் காமாலையில், தோல் மற்றும் கண்களின் மஞ்சள் நிறமாக மாறும், சிறுநீர் கரும் மஞ்சள் நிறமாக மாறும். இரத்த பரிசோதனைகள், அல்ட்ராசோனோகிராபி அல்லது சி.டி ஸ்கேன் மற்றும் கல்லீரல் பையாப்ஸ்ஸி ஆகியவை பொதுவாக நோயறிதல் முறைகள் ஆகும். கல்லீரல் நோய்க்கான சிகிச்சை நோயின் அடிப்படை காரணத்தை சார்ந்தது. கல்லீரல் இழைநார் வளர்ச்சியின் காரணமாக கல்லிரலில் தழும்பு உருவாக்குகிறது. கல்லீரல் அழற்சி, அதன் செயல்பாட்டை தடுத்து எல்லா சிகிச்சையும் பயனற்றதாகிறது.