லிச்சென் பிளானஸ் (செந்தடிப்புத்தோல் அரிப்பு) என்றால் என்ன?
லிச்சென் பிளானஸ் (எல்.பி) என்பது நீண்டகால வீக்கத்திற்கு வழிவகுக்கும் ஒரு தோல் நோய் ஆகும். பளபளப்பான மற்றும் அரிக்கக்கூடிய சிவப்பு-ஊதா புள்ளிகள் அல்லது காயங்களில் தோற்றம் மூலம் இந்த நிலை பண்பிடப்படுகிறது. இந்த நிலை வாய் மற்றும்/அல்லது உதட்டில் வெள்ளை மற்றும் சாம்பல் நிற புள்ளிகளை ஏற்படுத்தி வாயை பாதிக்கிறது.
எல்.பி என்பது மிகவும் அரிதான ஒரு தன்னியக்க நோயாகும், இது பிறப்புறுப்பு மண்டலம், உச்சந்தலை, நகங்கள், கண்கள் மற்றும் உணவுக்குழாயைக்கூட உட்படுத்துகிறது. மெதுவாக, அது பாதிக்கப்பட்ட பகுதியின் தோற்றத்தை பாதிக்கும்.
இது மரங்கள் மற்றும் பாறைகளில் வளரும் புஞ்சைப்பாசிக்கு ஒத்த ஒரு நிலை. இந்த புண்கள் தட்டையான மேற்பூச்சு மற்றும் செதில்களாக தோன்றும். அதனால் இந்த நோய் ஒழுங்காக கண்டறியப்படவில்லை என்றால், அது பூஞ்சை வளர்ச்சியாக மாறி கடந்துவிடும். இந்த நிலையினால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு ஒரு குறிப்பிட்ட தலைப்பு ஒதுக்கப்பட்டிருக்கிறது:
- தோல்சார் (குடேனியஸ்) எல்.பி – தோல்.
- வாய்சாரி (ஓரல்) எல்.பி - வாய் மற்றும் உதடுகள்.
- பிணைல் அல்லது வல்வார் எல்.பி - பிறப்புறுப்பு பகுதி.
- லிச்சென் பிளானோபிளரிஸ் – உச்சந்தலை.
- செவிசார் எல்.பி – காதுகள்.
இது நீண்ட காலத்திற்கு நீடிக்கும் என்பதால் அதன் தீவிர வடிவத்தில், இந்த நிலை 'அரிக்கும் லிச்சென் பிளானஸ்' என்று அழைக்கப்படுகிறது. இதன் விளைவாக, வாய் மற்றும் பிறப்புறுப்பு மண்டலத்தில் புண்கள் உருவாகின்றன மற்றும் இதனால் தினசரி வாழ்க்கை நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன. சிகிச்சை அளிக்கப்படாமல் விட்டால், புற்றுநோய் செல்கள் உருவாகலாம்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
எல்.பி. பின்வரும் முக்கிய அறிகுறிகளைக் கொண்டுள்ளது:
- கைகள், கால்கள் அல்லது உடல் மீது பளபளப்பான, ஊதா-சிவப்பு நிற புள்ளிகள்.
- ஈறுகள், கன்னங்கள் அல்லது நாக்கின் மீது வெள்ளை திட்டுகள் அல்லது வெட்டுக்கள்.
- வாயில் புண்கள்.
- சாப்பிடும் போது வாயில் எரிச்சல் மற்றும் கொடுக்கு கொட்டுதல் போன்ற உணர்வு.
- உச்சந்தலையில் வழுக்கை திட்டுகள்.
- பெண்ணுறுப்பு அல்லது ஆணுறுப்பின் மீது புண் தடங்கள்.
- மெல்லிய அல்லது கரடுமுரடான நகங்கள்.
- ஈறுகளில் தோல் உரிதல்.
- அரிதான நிகழ்வுகளில், கொப்புளங்கள் வெடித்தல்.
பாதிக்கப்பட்ட பகுதியைப் பொறுத்து, அறிகுறிகள் வேறுபடலாம். இவை பின்வருமாறு:
- கீழ் கால்கள் மீது செதில் மற்றும் மாரு போன்ற புண்கள்.
- ஒரு குணமடைந்துவரும் தோல் காயம் மீது புள்ளிகள்.
- தோல் மெலிவு.
- வியர்வை இல்லாமை.
- மிகை நிறமியாக்கம் அல்லது குறை நிறமியாக்கம்.
கொடுக்கப்பட்டுள்ள பிரச்சனைகள் எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த நிலை குணப்படுத்தக்கூடியது மற்றும் இயற்கையில் மற்றவருக்கு பரவாத ஒரு இயல்புடையது.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
எல்.பி.க்கான காரணம் மிகவும் தெளிவாக புரியப்பட்டவில்லை, இருப்பினும், தன்னியக்க எதிர்ப்பாற்றல் இதன் அடிப்படைக் காரணம் ஆகும். தேவையற்ற மருந்துகள், ஒவ்வாமை பொருட்கள், தொற்றுநோய் காரணிகள் அல்லது காயம் ஆகியவற்றின் வெளிப்பாடு காரணமாக நோயெதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்பட்டு, தோல் செல்களைத் தாக்குவதால் லிச்சென் பிளானஸ் ருவாகிறது என்று கருதப்படுகிறது. இதன் விளைவாக தொழில் போட்டு போன்ற புள்ளிகள் தோன்றுகிறது. சில சந்தர்ப்பங்களில், நோயாளியின் மரபணு வரலாற்றின் மூலமாகவும் இந்த நிலை இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
சருமம் மற்றும் சளி சவ்வுகளின் உடல் பரிசோதனை மூலம் ஒரு தகுதி வாய்ந்த மருத்துவ நிபுணரால் இந்த நோயை கண்டறிய முடியும். நோய் மேலாண்மையில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒத்த நிலைமைகளைக் கண்டறிய ஒரு தோல் திசுப்பரிசோதனை செய்யப்படலாம். மேலே உள்ளவற்றுடன் சேர்த்து, ஹெபடைடிஸ் வைரஸ் நோய்க்கான சோதனையும் செய்யப்படலாம்.
அதேபோல், அடிப்படை ஒவ்வாமைக்கான அடையாளங்கள் கண்டறிதல் மற்றும் சிகிச்சைகளும் ஆரம்பிக்கப்படலாம்.
இந்த நிலைக்கான சிகிச்சை விருப்பங்கள் பின்வருமாறு:
- ஆறு மாதம் முதல் ஒன்பது மாத காலத்திற்குள் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியைப் பயன்படுத்தி இந்த நோய் சுயமாகவே குணமடைகிறது.
- அறிகுறிகளைக் கட்டுப்படுத்த குழைமங்கள் (கிரீம்கள்) மற்றும் களிம்புகளை (லோஷன்) மருத்துவர் பரிந்துரைக்கலாம்.
- ஸ்டெராய்டுகள் அல்லது ஒளிக்கதிர் சிகிச்சை ஆகியவை நிலைமை பரவுவதைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படலாம்.
- வாய்சார் எல்.பி நிலையில், வாய்கழுவிகள், வாய் கொப்பளித்தல் மற்றும் களிம்பு (ஜெல்) ஆகியவற்றின் மூலம் வேதனையிலிருந்து நிவாரணம் பெறலாம்.
- அரிக்கும் எல்.பி நிலையில், முறையான உறுப்புசார் கார்டிகோஸ்டிரொய்டு சிகிச்சை மூலம் நிவாரணம் அளிக்கப்படுகிறது.
- கடைசி முயற்சியாக, மைக்கோஃபினோலேட், அசதியோபிரைன் மற்றும் மெத்தோட்ரெக்ஸேட் போன்ற தடுப்பாற்றல் குறைப்பு மருந்துகளுடன் முயற்சி செய்யலாம்.