எரிச்சலூட்டும் தன்மை (இரிடேபிளிட்டி) என்றால் என்ன?
எரிச்சலூட்டும் தன்மை என்பது ஒரு நியாயமற்ற எதிர்வினை ஆகும். இது கட்டுப்படுத்தப்படாத கோபத்தால் பண்பிடப்படுகிறது. மனநிலை வெளிப்படையான வெளிப்பாடாக இல்லாமல் இருந்தாலும், இது பொதுவாக படுவிரைவான வாய்மொழி அல்லது நடத்தை ரீதியான சண்டைகளினால் விளைகிறது. இது நீண்ட காலமாக இருக்கலாம், பொதுவானதாகவோ அல்லது குறுகிய கால இடைவெளி விட்டு மீண்டும் மீண்டும் நிகழலாம். இது சாதாரண எரிச்சலின் வெளிப்பாடாகவோ அல்லது சில அடிப்படைக் கோளாறு காரணமாகவோ ஏற்படக் கூடும்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
இதன் பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:
- முன்கோபம்.
- அதிகபடியான விரக்தி.
நாள்பட்ட மற்றும் அதிகப்படியான எரிச்சலூட்டும் தன்மையின் அறிகுறிகள் பின்வருமாறு:
- தனக்கு சம்பந்தம் இல்லாதவர் மீது வெளிப்படுத்தப்படும் தீவிர எதிர்வினைகள்
- மனச்சோர்வு, மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஆகியவற்றால் தூண்டப்பட்ட நியாயமற்ற விளைவுகள்.
- நாள்பட்ட எரிச்சலூட்டும் தன்மையின் விளைவாக மன அழுத்தம் ஏற்படுகிறது.
- பணியிடத்தில் நோயாளி, உறவினர்கள் மற்றும் கூட்டாளிகளுக்கு துன்பம் விளைவித்தல்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
எரிச்சலூட்டும் தன்மை எப்போதுமே ஏதேனும் அடிப்படை நிபந்தனையின் விளைவாக இருக்கும் என்று சொல்ல முடியாது. இது வழக்கமான நச்சரிச்சல், மீண்டும் மீண்டும் கோபமூட்டுதல் அல்லது நாள்பட்ட மன அழுத்தத்தால் ஏற்படக்கூடும்.
இதற்கான பொதுவான காரணங்கள் பின்வருமாறு:
- சினைப்பை நோய்க்குறி, மாதவிடாய் நிறுத்தம், அதிதைராய்டியம், பல்வலி, சளிக்காய்ச்சல் மற்றும் காது நோயத்தொற்று போன்ற நோய்கள்.
- மனச்சோர்வு, மன அழுத்தம், பதட்டம், இருமுனையப் பிறழ்வு, பிளவுபட்ட மனநோய், அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடு, மதியிறுக்கம் போன்ற மன ரீதியான கோளாறுகள். இது பொதுவாக 13-19 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பருவத்தினர் இடையே காணப்படுகிறது.
- இணக்கமற்ற நடத்தையின் தொடர்பாக குழந்தைகள் இந்த அறிகுறிகளைக் காட்டக்கூடும்.
- மாதவிலக்குக்கிற்கு முன், பேறுகாலம், இறுதி மாதவிடாயை ஒட்டிய காலகட்டத்தில் இது பெண்களிடத்தில் முக்கியமாக கவனிக்கப்படுகிறது.
- வேலையில் ஆழ்ந்துள்ள வாழ்க்கை முறையுடன் எரிச்சலூட்டும் தன்மை தொடர்புடையதாக உள்ளது.
- நாள்பட்ட மன அழுத்தம்.
- மோசமான மன அழுத்தம்-நிர்வகிப்பு திறன்.
- மது அருந்துதல்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
நோயாளியின் மருத்துவ பின்புலம் மற்றும் மதிப்பீட்டின் அடிப்படையில் நோய் கண்டறிதல் அமைகிறது. அறிகுறிகளின் வரலாற்றைப் பற்றி குடும்பத்தினரிடத்தில் கேட்கப்படும், இது நோயறிதலுக்கு அவசியமானதாகும்.
அடிப்படை நிலையை நிர்ணயிக்க உங்கள் மருத்துவர் ஆய்வுகள் மேற்கொள்ளக்கூடும்.
இதற்கான சிகிச்சை அடிப்படை சுகாதார நிலை மற்றும் இதன் தூண்டுதல் காரணிகளை மதிப்பிடுதல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றை உள்ளடக்குகிறது.
தியானம் மற்றும் மனம் ஆழ்தல் போன்ற மன அழுத்த நிர்வகிப்பு நுட்பங்கள் மற்றும் நடத்தை மாற்ற சிகிச்சை ஆகியவை பரிந்துரைக்கப்படுகின்றன.
உங்கள் மருத்துவர் மன அழுத்தம் நீக்கிகள் மற்றும் மன நிலை நிலையாக்கி முகவர்கள் போன்ற மருந்துகளை பரிந்துரைக்கக்கூடும்.
மன அழுத்தத்தை போக்குவதற்கான நுட்பங்கள் எரிச்சலூட்டும் தன்மையை போக்க உதவுகின்றன. அவை பின்வருமாறு:
- நடைபயிற்சி மற்றும் நீச்சல் போன்ற உடற்பயிற்சிகளில் ஈடுபடுதல்.
- புத்தகங்கள் படித்தல், பாடல் கேட்டல்.
- மூச்சு பயிற்சிகள்.