ஹைப்போவோலேமியா என்றால் என்ன?
ஹைப்போவோலேமியா என்றால் அதிக இரத்த இழப்பு ஏற்படுவதினாலோ,அல்லது பிளாஸ்மா மற்றும் பிளாஸ்மா நீர் இழப்பு ஆகியவற்றினால் ஏற்படும் இரத்த அளவில் ஏற்படும் குறைவு ஆகும், இது கடுமையான நீர்ச்சத்தின்மையால் அல்லது இரத்த இழப்பு ஏற்படுகையில் ஏற்படுகின்றது. இதன் காரணமாக உள்நாள இரத்தக்குழாய் இழப்பு மற்றும் திசு மேற்பரவல் இழப்பு ஆகியவற்றிற்கு காரணமாகிறது. இதற்கு சிகிச்சை அளிக்காவிட்டால் அபாயகரமானதாகி விடலாம்.
அதன் முக்கிய அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
ஹைப்போவோலேமியாவின் பொதுவான அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருவன:
- பொதுவான பலவீனம்.
- தோல்களின் வெளிரிய தன்மை (வெளிறிய நிறம்).
- குளிர்ந்த,பசைபோன்ற தோல் அல்லது வியர்த்தல், ஈரமான தோல்.
- மிகவேகமான சுவாசம்.
- கவலை அல்லது கலக்கம்.
- குறைந்த இரத்த அழுத்தம் (ஹைபோடென்ஷன்).
- குறைந்த அளவு சிறுநீர் அல்லது சிறுநீர் வராமல் இருத்தல்.
- குழப்பமான நிலைமை.
- சுயநினைவு இல்லாதிருத்தல்.
அதன் முக்கிய காரணங்கள் என்ன?
ஹைப்போவோலேமியா ஏற்பட காரணங்களாவன:
- பின்வரும் காரணங்களினால் உடல் திரவங்கள் இழப்பு ஏற்படுகிறது:
- கடுமையான மற்றும் நிலையான வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி.
- பெரிய எரிகாயம்.
- அதிகமாக வியர்த்தல்.
- டையூரிட்டிக்ஸ் பயன்படுத்துதல்.
- அதிக சிறுநீர் கழித்தல் உடன் காணப்படும் சிறுநீரக நோய்கள்.
- பின்வரும் காரணங்களால் இரத்த இழப்பு ஏற்படுகிறது:
- வெட்டுக்கள் அல்லது பிற காயங்களால் இரத்தப்போக்கு.
- செரிமானப் பாதை போன்ற இடங்களில் உள் இரத்தப்போக்கு.
- அசாதாரணமான இரத்த உறைவு.
- அறுவை சிகிச்சைகள்.
இது எப்படி கண்டறியப்படுகிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படுகிறது?
மருத்துவர் நோயறிதலில் முக்கியமாக கருதுவது நோய்க்கான அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் மற்றும் ஒரு முழுமையான உடல் பரிசோதனை அடிப்படையில் ஆகும். பின்வரும் சோதனைகளின் அடிப்படையில் மேலும் மதிப்பீடு செய்யப்படுகிறது:
- சிறுநீரக செயல்பாடு, முழுமையான ரத்த செல்களின் எண்ணிக்கை (சிபிசி) மற்றும் இருதய தசைகளின் சேதம் ஆகியவற்றை ஆய்வு செய்ய இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும்.
- ஊடுகதிர் நிழல்படம் (எக்ஸ்-ரே).
- ஊடொலி (அல்ட்ராசவுண்ட்).
- கணினி வரைவி (சி டீ) ஸ்கேன்.
- உள்நோக்கியியல் (எண்டோஸ்கோபி).
- இதய எதிரொலி வரைபடம் (எகோகார்டியோகிராம்).
- வலது இதய வடிகுழாய்கள்.
- சிறுநீர் வடிகுழாய்கள்.
ஹைப்போவோலேமியா சிகிச்சையில் அடங்குவன:
- சிகிச்சையின் முதலில் செய்ய வேண்டியது இரத்தம் மாற்றுதல் மற்றும் திரவங்களை மாற்றுவதற்கு அதனை அளவிடுதல் ஆகும், ஹைப்போவோலேமியா ஏற்பட்ட காரணத்தை பொறுத்து பல்வேறு வாய்வழியாக திரவங்கள் அல்லது நரம்புகள் வழியாக (IV - நரம்புகள் வழியாக) இரத்தம் அல்லது திரவங்களை ஏற்றுதல் ஆகியவற்றின் மூலம் சிகிச்சை அளிக்கப்படலாம். மேலும், தாழ்வெப்பநிலையைத் தவிர்க்க, தனிநபரை அவருக்கு ஏதுவாகவும், வெது வெதுப்பாகவும் வைத்திருத்தல் அவசியம்.
- ஒரு வேலை இந்நோய் ஒவ்வாமை காரணத்தினால் ஏற்பட்டிருந்தால், எதிர் ஒவ்வாமை (ஆன்டி அலர்ஜென்ஸ்) மருந்துகள் வழங்கப்பட வேண்டும்.
- கடுமையான சந்தர்ப்பங்களில், இரத்த அழுத்தம் மற்றும் இதயசெயல்பாட்டை அதிகரிக்க (இதயத்தில் இருந்து வெளியேறும் இரத்தத்தின் அளவு), நோர்பைன்ப்ரின், டோபமைன், எபினிஃபரின் அல்லது டோபூடமைன் போன்ற மருந்துகள் வழங்கப்படலாம்.