சுருக்கம்
உடலில், இரத்தக் கொழுப்பு அல்லது லிப்பிட் வடிவத்தில் கல்லீரலால் கொழுப்பு உருவாக்கப்படுகிறது. உடலின் கொழுப்பு தேவையில் ஒரு பகுதி, உணவு ஆதாரங்களான முட்டையின் மஞ்சள் கரு, பால் பொருட்கள் மற்றும் இறைச்சி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. தகுந்த அளவுகளில் கொழுப்பு, நமது உடலுக்குள் நடைபெறும் பல்வேறு உயிரியல் செயல்பாடுகளுக்கு அவசியமானதாக இருக்கிறது. இது, ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்டோரான், டெஸ்ட்ரோஜென், கார்ட்டிசோல் மற்றும் அல்டோஸ்டெரோன் போன்ற ஹார்மோன் உற்பத்திக்கு அவசியமானதாகும். இதற்கும் மேலாக, கொழுப்புகளை முறையாக செரிமானம் செய்வதற்கு அவசியமான பித்த உப்புக்களில் கொழுப்பு தோன்றுகிறது. கூடவே இது, உடலில் ஏ, டி, இ மற்றும் கே வைட்டமின்களை உட்கிரகிப்பதையும் செயல்படுத்துகிறது. கூடுதலாக இது, செல் சவ்வின் முக்கியமான பாகமாகும், மேலும் செல்களின் கட்டமைப்பைப் பராமரிக்கவும் உதவுகிறது. சூரிய ஒளியில் இருக்கும் பொழுது, கொழுப்பின் உதவியோடு உடலில் வைட்டமின் டி தயாரிக்கப்படுகிறது. புரதங்களின் சேர்க்கையோடு கொழுப்பு (கொழுப்புப்புரதம்) இரத்தத்தில் பயணிக்கிறது. நல்ல கொழுப்பு (உயர்-அடர்த்தி கொழுப்புப்புரதம் - எச்.டி.எல்.) இதயத்தைப் பாதுகாக்கும் விளைவைக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், அதிகமான கெட்ட கொழுப்பு (குறைந்த-அடர்த்தி கொழுப்புப்புரதம் - எல்.டி.எல். மற்றும் மிகக்குறைந்த-அடர்த்தி கொழுப்புப்புரதம் - வி.எல்.டி.எல்) இதய நோய்களுக்கான அபாயத்தை அதிகரிக்கின்றது.
உடலில் உள்ள அதிகமான கெட்ட கொழுப்பு, நெஞ்சு வலி அல்லது இதய வலி, மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் நீரிழிவுக்கு காரணமாகிறது. கொழுப்பு மிகுந்த உணவுப் பழக்கம், உடல் பருமன் மற்றும் உடல் உழைப்பு இல்லாத ஒரு வாழ்க்கைமுறை ஆகியவை உடலில் கொழுப்பு அளவுகள் அதிகரிக்க காரணங்களாகும். இரத்தத்தில் உள்ள அதிக கொழுப்பு, இரத்தக்குழாய்களில் படிவுகளை உருவாவதற்கு ஒரு முக்கிய காரணமாகும், அதன் விளைவாக பலவித இருதய நாள (இதய) நோய்கள் உருவாகின்றன. உயர் இரத்த அழுத்தம், புகைப்பிடித்தல் மற்றும் உடல் பருமன் ஆகியவை இதய நோய்களுக்கான ஆபத்தை அதிகரிக்கின்றன. சில நபர்களுக்கு, மரபணுக்கள் சார்ந்த காரணங்கள், உயர் கொழுப்பு அளவுகளுக்குக் காரணியாகின்றன. பொருத்தமான எடையைப் பராமரிப்பது, வறுக்கப்பட்ட மற்றும் கொழுப்பு மிகுந்த உணவுகளை எடுத்துக் கொள்வதைக் கட்டுப்படுத்துவது மற்றும் புகைப்பிடித்தலைக் கைவிடுவது போன்ற வாழ்க்கைமுறை மாற்றங்கள், அதிக கொழுப்பைக் கையாள்வதற்கான முக்கிய அம்சங்களாகும். கூடுதலாக, அதிக கொழுப்பு அளவுகளைக் குறைக்க, ஸ்டேட்டின்கள் எனப்படும் மருந்துகள் மற்ற மருந்துகளோடு கூட்டுச் சேர்க்கையாக பொதுவாகப் பரிந்துரைக்கப்படுகிறது.