பேன் தொல்லை என்றால் என்ன?
தலையிலிருக்கும் பேன் என்பது மனிதர்களின் உயிரணுக்களில் வாழ்வதோடு அவர்களது இரத்தத்தையே உணவாக உட்கொண்டு வளரக்கூடிய சிறியளவு ஒட்டுண்ணிகள் ஆகும்.இவை நிட்கள் எனப்படும் பேன் முட்டைகளிலிருந்து விருத்தியடையக்கூடியவை.
இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?
ஒருவரின் உச்சந்தலை பேன்களினால் பாதிக்கபட்டிருப்பதை கண்டறிதல் அல்லது சுட்டி காட்டுதல் என்பது மிக கடினமான ஒன்று, குறிப்பாக ஆரம்ப கட்டத்தில் நிட்களாக இருக்கும் பேன்களை கண்டறிவது மிகக் கடினம்.பேன் தொல்லைக்கான முக்கிய அறிகுறிகள் பின்வருமாறு:
- கண்டறிதல் - சில நேரங்களில் தலை சீவும்போது உதிரும் முடி இழைகளோடு இணைந்திருக்கும் நிட்களை ஒருவரால் எளிதில் கண்டறியமுடியும், இவை மிக சிறியதாக குருணை-போன்ற வடிவத்தில் முடி இழைகளோடு இணைத்திருக்கக் கூடியவை.
- அரித்தல் - பிற்பகுதியில், பேன்கள் இருப்பு மற்றும் அதன் வளிர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் அவை உணவருந்த உச்சந்தலையில் ஊடுருவுவதினால் அடிக்கடி அரிப்பு ஏற்படும்.
இதன் முக்கிய காரணங்கள் என்ன?
தலையிலிருக்கும் பேன் என்பது(பிடிகுலூஸ் ஹுமானஸ் காபிடிஸ்) சூழ்நிலைகள் மற்றும் வெப்பநிலை சாதகமாக இருக்கும்போது செழித்தோங்கி வளரக்கூடியவை. தலை பேன்கள் பெரும்பாலும் ஒருவரிடமிருந்து மற்றோருவருக்குக் நேரடியாகவோ அல்லது மறைமுக தொடர்பினாலோ மாற்றப்படுகிறது.பேன் தொல்லை என்பது குழந்தைகளிடமே பெரும்பான்மையாக காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றது, அவர்கள் மற்ற குழந்தைகளுடன் பள்ளியில் இருக்கும் போதோ அல்லது விளையாடும் போதோ ஏற்படும் தொடர்பினால் பேன்களின் இடமாற்றம் நிகழக்கூடும்.
பாதிக்கப்பட்டவர்களின் உடைகளை பகிர்ந்துகொள்வதாலும் பேன் தொல்லை ஏற்படலாம்.தொப்பிகள் மற்றும் ஸ்கேர்ப்கள் பகிர்தலை தவிர்ப்பதோடு தனியாக வைத்து உபயோகப்படுத்துதல் வேண்டும்.
இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?
பேன் தொல்லைகளை கண்டறிய எந்த சோதனைகளும் பரிந்துரைக்கப்படுவதில்லை.ஒருவர் மிக எளிதாக பேன் சீப்புகளை பயன்படுத்தியோ அல்லது உச்சந்தலையை ஆராய்வதின் மூலமோ இதனை கண்டறிந்து உறுதி செய்துகொள்ளலாம்.
பேன் தொல்லைக்கான சிகிச்சை முறைகளில் அடங்கும் மருத்துவம் சார்ந்த பொருட்களுள் அடங்குபவை ஷாம்பூக்கள், எண்ணெய் வகைகள் மற்றும் உச்சந்தலையில் நேரடியாக பயன்படுத்திய பிறகு அலசக்கூடிய பொருட்களோ அல்லது பயன்படுத்திய பிறகு சீவுதலின் மூலம் நிவாரணம் பெறக்கூடியோ பொருட்களோ, அதாவது பயன்படுத்தும் பொருட்களை பொறுத்து சகஜமாக பரிந்துரைக்கப்படும் பிற பொருட்கள் ஆகியவையாகும்.மிக பொதுவான மற்றும் பரவலாக சந்தையில் பயன்படுத்தக்கூடிய இவர்மேக்ட்டினை கொண்ட பொருட்கள், பேன்களையும் அவற்றின் முட்டைகளான நிட்களையும் கொல்ல உதவுகின்றது.
பிரத்யேகமா நெருக்கமான பற்களை கொண்ட அமைப்புடன் தயாரிக்கப்படும் சீப்புகளை உபயோகித்து நேராக சீவுதலினால் பேன்கள் மற்றும் நிட்கள் வெளியேற்றப்பட்டு பேன் தொல்லையிலிருந்து நிவாரணம் பெற பெரிய உதவி புரிகின்றன.
பிரத்யேகமா நெருக்கமான பற்களை கொண்ட அமைப்புடன் தயாரிக்கப்படும் சீப்புகளை உபயோகித்து நேராக சீவுதலினால் பேன்கள் மற்றும் நிட்கள் வெளியேற்றப்பட்டு பேன் தொல்லையிலிருந்து நிவாரணம் பெற பெரிய உதவி புரிகின்றன.