ஜெயண்ட் செல் ஆர்க்டிடிஸ் என்றால் என்ன?
ஜெயண்ட் செல் ஆர்க்டிடிஸ் (ஜி.சி.ஏ) என்பது மேல் உடல் மற்றும் தலையிலிருக்கும் முக்கியமான தமனிகளை பாதிக்கும் ஒரு அழற்சி நிலை ஆகும். இது மிகவும் பொதுவாக தலைக்கு பக்கவாட்டில் உள்ள தமனிகளை (கன்னப் பொட்டுத் (டெம்போரல்) தமனி) பாதிப்பதால், இது டெம்போரல் அர்டெரிடிஸ் (தற்காலிக தமனி அழற்சி) அல்லது மண்டையோட்டுத் தமனி அழற்சி எனவும் அழைக்கப்படும். இது முக்கியமாக தலைவலி மற்றும் மங்கலான அல்லது இரட்டைப் பார்வை முதலியவையாக வெளிப்படும். பக்கவாதம், குருட்டுத்தன்மை
அல்லது மற்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கான ஆபத்தை தவிர்க்க இந்நோய்க்கு உடனடியாக சிகிச்சையளிப்பது மிக முக்கியமானதாகும்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
ஒரு தனி நபர் ஜெயண்ட் செல் ஆர்க்டிடிஸால் பாதிக்கப்பட்டிருந்தால் கீழ்காணும் அறிகுறிகள் சிலவற்றை அல்லது கிட்டத்தட்ட அனைத்து அறிகுறிகளையும் அனுபவிக்ககூடும்:
- கண்ணிற்குப் பின், நெற்றிக்கும் காதிற்க்கும் இடைப்பட்ட தலைப் பகுதியில் தொடு வலிவுணர்வு மற்றும் தீவிர வலி (இதனோடு இரத்த நாளங்கள் தடித்தல் போன்றவை) மற்றும் உச்சந்தலையில் பிரஷ் பயன்படுத்தி சிக்கெடுக்கும் போது அல்லது சவரம் செய்யும் போது வலி ஏற்படுதல்.
- சோர்வு.
- காது கேட்பதில் பிரச்சனை.
- குறிப்பாக காலை வேளைகளில் இடுப்பு, கால்கள், கைகள் மற்றும் தோள்பட்டையில் தசைகளில் வலி, நொய்வு மற்றும் விறைப்புத் தன்மை ஏற்படுதல்.
- இரவில் வியர்த்தல் அல்லது காய்ச்சல் ஆகிய சளிக் காய்ச்சல்-போன்ற அறிகுறிகள் தோன்றுதல்.
- எடை குறைதல்.
- தலைவலி.
- (மெல்லும்போது தாடையில் அல்லது நாக்கில் வலி உணர்தல்).
- தமனிகள் பெரிதளவில் பாதிப்படையும் போது காலின் பின் பகுதியில் வலி ஏற்படுவதன் காரணமாக நடப்பதில் சிரமம் ஏற்படுதல்.
- திடீரென பகுதியளவு (சில நேரங்களில் முழுமையாகவும்) பார்வை இழப்பு ஏற்படுதல், இது அரிதாக மற்றும் பொதுவாக ஆரம்பகட்த்தில் தோன்றக்கூடும், ஆனால் முறையான சிகிச்சையை மேற்கொள்ளவில்லை எனில் நிரந்தரமாக கூட பார்வை இழப்பு ஏற்படக்கூடும்.
- இரண்டிரண்டாக காட்சிகள் தோன்றுதல்.
- அரிதாக, பக்கவாதம் அல்லது சிறிய அளவிலான பக்கவாதம் தோன்றுதல்.
- மனச்சோர்வு.
உடனடியாக மருத்துவ சிகிச்சை தேவைப்படும் முக்கியமான அறிகுறிகள் பின்வருமாறு:
- பார்வை தொந்தரவு.
- தாடை அல்லது நாக்கில் வலி.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
ஜெயண்ட் செல் ஆர்க்டிடிஸ் (ஜி.சி.ஏ) நோய்க்கான சரியான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும், கீழ்காணும் சில காரணங்களால் ஜெயண்ட் செல் ஆர்க்டிடிஸ் (ஜி.சி.ஏ) நோய் ஏற்படுகிறது என சந்தேகிக்கப்படுகிறது:
- முதுமை.
- மரபணு காரணங்களால்.
- சில வைரஸ் அல்லது பாக்டீரியா நோய்த்தொற்று காரணமாக.
- இதயகுழலிய நோய்க்கான பின்புலம்.
- உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்பட்டு தமனிகளில் வீக்கம் ஏற்படும் தன்னுடல் தாக்குமை.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
அறிகுறிகள் மற்றும் தாக்கங்களின் அடிப்படையில், நோய்க் கண்டறிதலை உறுதி செய்ய கீழ்கண்டவைகளை மருத்துவர் பரிந்துரைக்கலாம்:
- முழுமையான மருத்துவ பின்புலத்தை பற்றி தெரிந்துகொண்டதின் பின்பு முழு உடல் பரிசோதனை.
- பாதிக்கப்பட்ட திசுவின் திசுப் பரிசோதனை (ஒரு சிறிய அளவு மாதிரியை அறுவை சிகிச்சை மூலம் எடுத்தல்).
- சிவப்பணு படியும் அளவு (இ.எஸ்.ஆர்) சரிப்பார்க்க இரத்த பரிசோதனை.
- காந்த அதிர்வு விம்பங்கள் (எம்.ஆர்.ஐ).
- டாப்ளர் அல்ட்ராசவுண்ட்.
- பாஸிட்ரான் எமிஷன் டோமோகிராபி (பி.இ.டி).
ஜெயண்ட் செல் ஆர்க்டிடிஸ்க்கு சிகிச்சை அளிக்கவில்லை எனில் கண் குருடாவது, பக்கவாதம் (கண்ணிற்கும் மூளைக்கும் செல்லும் இரத்தம் குறைந்து போதல்) போன்ற ஆபத்துகள் ஏற்படும், எனவே, இந்த நிலைக்கு உடனடியாக சிகிச்சை செய்ய வேண்டுமென பரிந்துரைக்கப்படுகிறது. ஜெயண்ட் செல் ஆர்க்டிடிஸ்க்கான (ஜி.சி.ஏ) சிகிச்சை முறைகளாவன:
- பிரெட்னிசோன் என்ற இயக்க ஊக்கி மருந்து இதற்கான முக்கியமான சிகிச்சை முறை ஆகும்.
- ஆஸ்பிரின் 100 மில்லிகிராம் மாத்திரைகள் பார்வை தொந்தரவுகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
- கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகியன நீண்ட கால பிரெட்னிசோனின் பக்கவிளைவுகளை குறைக்க பயன்படுகிறது
- ஒருவேளை இரைப்பையில் பாதகமான விளைவு ஏற்படுகிறது என்றால் புரோட்டான் பம்ப் இன்ஹிபிடர் (ஒமெப்ரஸோல்) பரிந்துரைக்கப்படுகிறது.