தசைநார் வலி (ஃபைப்ரோமியால்ஜியா) என்றால் என்ன?
தசைநார் வலி என்பது உடம்பில் இருக்கும் அத்தனை தசையும் பாதிக்கப்படும். ஒரு வலிமிக்க நிலை ஆகும். பொதுவாக இந்த நிலையினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, இந்த நிலை இல்லாத நபரைவிட வலி உணர்திறன் அதிகமாக இருக்கும். இந்தியாவில் 0.5 %-2 % மக்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். இது பெண்களில் பொதுவானது; ஆண்கள் விட கிட்டத்தட்ட 3-7 மடங்கு அதிகமாக உள்ளது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
அடிக்கடி ஏற்படும் அறிகுறிகள் பின்வருமாறு:
- உடல் முழுவதும், குறிப்பாக சில புள்ளிகளில் இருக்கும் வலி, மென்மை தன்மை மற்றும் தசை இறுக்கம்.
- மந்தமான உணர்வு.
- நன்றாக தூங்க இயலாமை.
- தீவிர தலைவலி.
- கடுமையான மாதவிடாய் வலி.
- உணர்ச்சியின்மை அல்லது மூட்டுகளில் ஊசியால் குத்துவதுபோலவோ, தேள்கடிப்பது போலவோ வலி
- நினைவக சிக்கல்கள்.
- மனச்சோர்வு நிகழ்வுகள் (மேலும் வாசிக்க: மனச்சோர்வு அறிகுறிகள்).
இந்த நிலையில், ஆண்களை விட பெண்களில் தாக்கம் அதிகம் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் காலை நேரங்களில் சோர்வு, முழு உடம்பு வலி, குடல் எரிச்சல் போன்றவற்றை அனுபவிப்பார்கள்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
இதன் சரியான காரணம் இன்னும் தெரியவில்லை,என்றாலும் மரபியலிற்கு இது சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மரபு ரீதியாக நோயைப் பெற்றவர்கள் மற்றவர்களை விட மிக விரைவாக வலியை உணருவார்கள். இந்த நிலையைத் தூண்டுகின்ற காரணிகள் பின்வருமாறு:
- ஹோர்மோன் மாற்றங்கள்.
- மன அழுத்த நிலைகள்.
- காலநிலை மாற்றங்கள்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
இதை கண்டறிவதற்கு அந்த நபரின் விரிவான வரலாறு கண்டறியப்படும் அதாவது,இந்த நிலையின் தீவிரத்தை, மென்மையான புள்ளிகள், தூண்டுதல்களை மற்றும் வேறு சிலவற்றை இது உள்ளடக்குகிறது. பொதுவாக அறிகுறிகள் ஒரு தெளிவான வரைபடத்தை தரும். உடல் வலி மற்றும் மயக்கம் ஏற்படக்கூடிய பிற நிபந்தனைகளைத் தவிர்ப்பதற்குத் தவிர, ஆய்வக சோதனைகள் பொதுவாக நோயாளிகளுக்கு தேவைப்படாது.இந்த நிலைமையை நோயாளி புரிந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகலாம். இயல்நிலை வரைவு, குறிப்பாக எக்ஸ்ரே மற்ற நோய்கள் இல்லை என்று உறுதி செய்ய எடுக்கப்படலாம்.
சிகிச்சை வழக்கமாக மருந்துகள் மற்றும் மருந்து இல்லாத முறைகளை உள்ளடக்குகிறது:
- வலி நிவாரண மருந்துகள்.
- தசை வலிமை பெற தினசரி உடற்பயிற்சி செய்தல்.
- தூக்க முன்னேற்ற நுட்பங்கள்.
- யோகா மற்றும் தியான பயிற்சியின் மூலம் மன அழுத்த மேலாண்மை.
- அறிவாற்றல் நடத்தை சிகிச்சை மூலம் மன அழுத்தம் அல்லது பதட்டம் நிர்வகிக்கப்படும்.
சுய-பாதுகாப்பு குறிப்புக்கள்:
- சரியான உடற்பயிற்சியும், உடல் சார்ந்த செயல்பாட்டில் ஈடுபடுவதும் இந்த அறிகுறிகளை கட்டுப்படுத்த உதவும்.
- சுய-பாதுகாப்பு பயிற்சிகள் தினம்தோறும் அனுபவிக்கும் கஷ்டங்களை கடக்க உதவும்.
இது வாழ்நாள் முழுவதும் இருக்கும் கடுமையான நிலை என்பதால், அறிகுறி நிவாரணி நுட்பம், வாழ்க்கை தரத்தை உயர்த்த பொதுவாக நன்மை அளிக்கும். இந்த நிலையை பற்றி வரும் எந்த ஒரு கேள்விக்கும் மருத்துவரின் ஆலோசனை மற்றும் முறையான தொடர்கண்காணிப்பு நம்பிக்கையை மீட்பதற்கு மற்றும் ஃபைப்ரோமியால்ஜியாவை மேம்படுத்தவும் உதவும்.