எண்டோமெட்ரியல் கேன்சர் (கர்ப்பப்பை புற்றுநோய்) என்றால் என்ன?
கர்ப்பப்பை அல்லது கருப்பை உட்சுவர், எண்டோமெட்ரியம் என்று அழைக்கப்படுகிறது. எண்டோமெட்ரியத்தின் செல்கள் எப்போது கட்டுப்படுத்த முடியாத அளவில் பெருக்கமடைகிறதோ, அப்போது எண்டோமெட்ரியல் கேன்சர் (கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்) என்று அழைக்கப்படும் புற்றுநோயை உண்டாக்குகிறது. முதலில் அசாதாரண கருப்பை திசுவளர்ச்சி ஏற்பட்டு, பின்னர் அது புற்றுநோயாக மாறுகிறது.
அதன் முக்கிய அறிகுறிகள் என்ன?
எண்டோமெட்ரியல் கேன்சர்க்கான அறிகுறிகள் ஆரம்பத்தில் கருப்பைக்குள்ளேயே உருவாகின்றன, அதன்பிறகே பரவ ஆரம்பிக்கிறது. அதன் பின்வரும் அறிகுறிகளை பொதுவாக கொண்டுள்ளது
- யோனியில் ஏற்படும் அசாதாரண இரத்தப்போக்கு ஒரு முக்கிய அறிகுறியாகும்.அளவுக்கு அதிகமான இரத்தப் போக்கு அல்லது மாதவிடாயின் இடைப்பட்ட காலத்தில் ஏற்படும் இரத்தப் போக்கும், இதன் அறிகுறிகளாகும்.
- மாதவிடாய் நின்ற பிறகும் கூட பெண்ணுறுப்பில் இரத்தப்போக்கு ஏற்படுதல்.
- இடுப்பு வலி.
- வலிமிகுப்புணர்ச்சி.
- அசாதாரணமான வெள்ளைப் படுதல் (இரத்தக் கரை போன்று, மஞ்சள் நிறத்தில்).
- எடை இழப்பு.
- களைப்பு.
- பசியின்மை.
அதன் முக்கிய காரணங்கள் என்ன?
எண்டோமெட்ரியம், கருப்பை ஹார்மோன்களின் புறத்தூண்டுதல்களுக்கு உட்பட்டதாகும், குறிப்பாக ஈஸ்ட்ரோஜெனுக்கு; இருப்பினும், எண்டோமெட்ரியல் கேன்சர்க்கான சரியான காரணம் தெரியவில்லை. இது மிகவும் ஆபத்தானதாகும். பெண்களை தாக்கக்கூடிய எண்டோமெட்ரியல் கேன்சர்க்கான காரணிகள் பல உள்ளன. அவை:
- குடும்ப வரலாறு (தாய் அல்லது சகோதரிக்கு இருக்கும் எண்டோமெட்ரியல் கேன்சர் அல்லது கருப்பை நார்த்திசுக்கட்டிகள்).
- சீக்கிரமே பூப்படைதல்.
- கருவுறாமை.
- உடல்பருமன்.
- நீண்ட கால ஹார்மோன் மாற்று சிகிச்சை (ஹெச்.ஆர்.டி).
- மார்பக புற்றுநோய் மருந்துகள் (தமொக்சிபென்).
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
மருத்துவ பரிசோதனை மற்றும், ஒரு முழுமையான மருத்துவ அறிக்கையைக் கொண்டு வழக்கமாக எண்டோமெட்ரியல் கேன்சர் கண்டறியப்படுகிறது. கூடுதலாக, புற்றுநோயின் வீரியத்தை பரிசோதிப்பதற்கான சோதனைகள்:
- அடிவயிற்று அல்ட்ராசவுண்ட் - கருப்பையகத்தின் தடிமனை கண்டறிய செய்யப்படுகிறது.
- ட்ரான்ஸ்வெஜைனால் (யோனி வழியாக செய்யப்படும்) அல்ட்ராசவுண்ட் - கருப்பையக மாற்றங்களை இன்னும் துல்லியமாக மதிப்பிடுகிறது.
- ஹிஸ்டெரோஸ்கோபி - ஒரு எண்டோஸ்கோப்பை பயன்படுத்தி எண்டோமெட்ரியத்தை சோதித்து, கருப்பையின் முறையற்ற உள்புறணியின் செயல்பாட்டை அறிய உதவுகிறது.
- எண்டோமெட்ரியல் திசுப் பரிசோதனை - எண்டோமெட்ரியல் கேன்சரை மிக துல்லியமாக கண்டறிய அதன் திசுக்களின் சிறிய மாதிரிகளை சேகரித்து, நுண்ணோக்கிக் கொண்டு ஆய்வு செய்தல்.
- அடிவயிற்றுப்பகுதியின் சி.டி ஸ்கேன் - எண்டோமெட்ரியல் கேன்சரின் நிலையை அறிய உதவும்.
- பாஸிட்ரான் எமிஷன் டோமோகிராபி / சி.டி ஸ்கேன் - எண்டோமெட்ரியல் செல்கள் பரவுவதை மதிப்பிட உதவும்.
இது ஆரம்பத்தில் கண்டறியப்பட்டால், இதற்கு போதுமான சிகிச்சை அளிப்பதன் மூலம் குணப்படுத்த முடியும். எண்டோமெட்ரியல் கேன்சரின் சிகிச்சை முறைகள்:
- அறுவை சிகிச்சை: இது முதல் நிலை சிகிச்சை ஆகும். இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டால், கருப்பை குழாய் மற்றும் கருமுட்டை, கருப்பையுடன் சேர்த்து அகற்றப்படும்.
- கதிர்வீச்சு சிகிச்சை: புரோட்டான் கதிர்கள் வழக்கமாக புற்றுநோய் செல்களை அழிக்க பயன்படுகிறது. சில நேரங்களில்,பெரிய கட்டிகளை சுருக்க, இந்த கதிர் வீச்சு சிகிச்சை செய்யப்படுகிறது.
- ஹார்மோன் சிகிச்சை: வாய்வழி ஹார்மோன் சிகிச்சை அளிப்பதன் மூலம், ப்ரோஜெஸ்டிரோன் அளவை அதிகரித்து அல்லது ஈஸ்ட்ரோஜென் அளவை குறைத்து, கேன்செர் கட்டியின் செல்களை சுருக்குகிறது.
- கீமோதெரபி: வாய்வழி அல்லது நரம்புவழி வேதியியல் உணர்விகள் புற்றுநோய் உயிரணுக்களை கொல்ல பயன்படுகிறது. அறுவை சிகிச்சையை மேற்கொள்வதற்கு ஏதுவாக வேதியியல் உணர்வி மருந்துகளும் புற்றுநோய் கட்டிகளை சுருக்க பயன்படுகிறது.