டயக்னாஸ்டிக் ஏஜென்ட் - Diagnostic agent in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

January 03, 2019

March 06, 2020

டயக்னாஸ்டிக் ஏஜென்ட்
டயக்னாஸ்டிக் ஏஜென்ட்

டயக்னாஸ்டிக் ஏஜென்ட் அல்லது பரிசோதனை முகவர்கள் என்றால் என்ன?

உடலின் செயல்பாடுகளை சோதித்து, நோய்களைக் கண்டறிவதற்கு பயன்படுத்தப்படும் பொருட்களே டயக்னாஸ்டிக் ஏஜென்ட் அல்லது பரிசோதனை முகவர்கள் ஆகும். கரிம அல்லது கனிம இரசாயன கலவைகள், உயிர்வேதியியல் சார்ந்த பொருட்கள், சாயங்கள் மற்றும் கறைகள், மற்றும் கிளர்மின் சுவடுகள் போன்றவை இவற்றுள் அடங்கும். இவை உடலின் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்களை கண்டறிய உதவுகின்றன. இந்த முகவரின் நோக்கத்தின் அடிப்படையில், இவை பல்வேறு குழுக்களாக வகைப்படுத்தப்படுகின்றன. ஒரு நோயை கண்டறிவதற்காக ஒரு வேறுபட்ட/தனிப்பட்ட கண்டறிதல் முறையின் பயன்பாட்டை உறுதிப்படுத்த டயக்னாஸ்டிக் ஏஜென்ட் அல்லது பரிசோதனை முகவர்கள் உதவுகின்றன.

டயக்னாஸ்டிக் ஏஜென்ட் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன?

டயக்னாஸ்டிக் ஏஜென்ட் பங்குகள் பின்வருமாறு:

  • கரிம மற்றும் கனிம சேர்மங்கள்:
  • திசு வளர்ப்பு தரவகை.
  • நுண்ணுயிரியல் சார்ந்த முகவர்.
  • திசுவியல் சோதனைகள்.
  • கொழுப்பு அளவுகளை அளவிடுதல்.
  • சாயங்கள் மற்றும் கறைகள்.
  • சைட்டோகெமிக்கல் சாயமேற்றல்.
  • பாலூட்டிகளின் திசுக்களை நிறமிடுதல்.
  • எதிர்வினைப்பொருள்/ரீஏஜெண்ட் சாயங்கள்.
  • சிறுநீர் பகுப்பாய்வு.
  • நிறிமிடு முகவர்கள்.
  • மலேரியா மற்றும் இரத்த ஒட்டுண்ணிகள்.
  • திசுவியல் சாயமேற்றல் முகவர்.
  • ஊடக வளர்கலவை.
  • பாக்டீரியாவை தனிமைப்படுத்துதல் மற்றும் அடையாளப்படுத்துதல்.
  • நுண்ணுயிரற்ற சோதனை.
  • பாக்டீரியாவை தேர்ந்தெடுத்து தனிமைப்படுத்துதல் மற்றும் பெருக்கம் செய்தல்.
  • பாக்டீரியாவின் மாறுபட்ட தனிமைப்படுத்துதல்.
  • கதிரியக்க டிரேசர்.
  • இரத்த குமிழி இமேஜிங்.
  • கட்டியை நாடிச்செல்லும் முகவர்.
  • எலும்பு கனிம பகுப்பாய்வி.
  • கொழுப்பு உறிஞ்சுதல் உறுதி செய்தல்.

இவை எந்த நோய்களை கண்டறிய உதவுகின்றன?

பின்வரும் நோய்களை கண்டறிவதில் டயக்னாஸ்டிக் ஏஜென்ட் அல்லது பரிசோதனை முகவர்கள் பயன்படுத்தப்படுகிறது:

இவை ஏன் பயன்படுத்தப்படுகின்றன?

இரத்தம், மலம், உமிழ் நீர், சிறுநீர் மற்றும் உடலில் உள்ள பிற திரவம் அல்லது திசு மாதிரிகள் ஆகியவற்றில் டயக்னாஸ்டிக் ஏஜென்ட் அல்லது பரிசோதனை முகவர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த முகவர்கள் பல்வேறு நிலைமைகளை கண்டறிய பயன்படுத்தப்படுகின்றன. டயக்னாஸ்டிக் ஏஜென்ட் அல்லது பரிசோதனை முகவர்கள் எதிர் விளைவுகளுக்கு உட்பட்டு, குறிப்பிட்ட அளவு மற்றும் தரம் சார்ந்த முடிவுகளை வழங்குகின்றனர், இது ஒரு நோய் இருப்பதை சுட்டிக்காட்டுகிறது. இந்த முடிவுகள் நோயாளியின் உடல்நலத்தை மதிப்பிடுவதற்கும், நோய் இருப்பதை அடையாளம் காண்பதற்கும், நோய் பரவுவதை உறுதி செய்யவும் மற்றும் தற்போதைய மருந்தூட்டத்தின் செயல்திறனை மதிப்பிட உதவுகிறது. இதனால், நோயாளிகள் முறையான மருத்துவ காரணங்களை அறிவதற்கும், சிகிச்சையின் போக்கை திட்டமிடுவதற்கும் உதவுகின்றன.



மேற்கோள்கள்

  1. Oriental Journal of Chemistry. Diagnostic Agents-Types and Applications: A Discussion. Bhopal, India. [internet].
  2. SRM Institute of Science and Technology. Diagnostic Agents. India. [internet].
  3. Oriental Journal of Chemistry. Diagnostic Agents-Types and Applications: A Discussion. Bhopal, India. [internet].
  4. Rasayan journal of chemistry. Diagnostic Agents - Types and application: A discussion. Jaipur, India. [internet].
  5. U.S food and drug administration. In Vitro Diagnostics. US. [internet].

டயக்னாஸ்டிக் ஏஜென்ட் க்கான மருந்துகள்

Medicines listed below are available for டயக்னாஸ்டிக் ஏஜென்ட். Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.