நீரிழிவு கீட்டோஅசிடோசிஸ் என்றால் என்ன?
நீரிழிவு கீட்டோஅசிடோசிஸ் (டிகேஏ) என்பது நீரிழுவு நோயின் ஒரு சிக்கலான நிலை, இது இரத்தத்திலிருக்கும் கீட்டோன்களின் அளவுகள் அசாதாரணமாக உயர்வதின் விளைவினால் அது அமிலமாக மாறும் நிலையாகும். இதற்கு முறையான சிகிச்சையளிக்காமல் விட்டுவிட்டால் இது கோமா அல்லது மரணத்திற்கு கூட வழிவகுக்கக்கூடும். இது முதல் வகை நீரிழுவு நோய்வாய் பட்டவர்களுக்கு மிக பொதுவாக நிகழும் ஒன்று ஆனால் இரண்டாம் வகை நீரிழுவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டிகேஏ தாக்கம் ஏற்படுவது மிக அரிது. இந்தியாவின் டிகேஏயின் நிகழ்வுக்கான தகவல்கள் வரையறைக்கு உட்பட்டதாகவே இருக்கிறது
இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?
டிகேஏவை எச்சரிக்க கூடிய அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:
- மிகுதியான தாகம்.
- அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டுமென தோன்றும் உணர்வு(மேலும் படிக்க: அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான காரணங்கள்).
- இரத்தத்தில் அதிக சர்க்கரை அளவுகள்.
- சிறுநீரில் அதிக அளவிலான கீட்டோன்.
நீரிழிவு கீட்டோஅசிடோசிஸினால் தோன்றக்கூடிய மற்ற அறிகுறிகள் பின்வருமாறு:
- நிலையான உடல் சோர்வு.
- உலர்ந்த சருமம்.
- குமட்டல் மற்றும் வாந்தி.
- சுவாசிக்கும் போது ஏற்படும் பழ வாசனை
- விழிப்புணர்வின்மை அல்லது கவனம் செலுத்துவதற்கு சிரமப்படுதல்.
இதன் முக்கியமான காரணங்கள் என்ன?
நீரிழிவு நோயினால் ஏற்படும் இன்சுலின் குறைபாடு உடம்பிலுள்ள கொழுப்பு சத்தை சக்திக்கான மூலாதாரமாக பயன்படுத்த தூண்டுகிறது. இவ்வாறு கொழுப்பு சத்துக்கள் உடைந்துபோவதினால், இது கீட்டோன்களின் உற்பத்தி அதிகமாகிறது. இவ்வாறு உற்பத்தியாகும் மிகுதியான கீட்டோன்கள் சிறுநீர் மூலமாக வெளியேறுகிறது.
டிகேஏவை தூண்டக்கூடிய முக்கியமான காரணிகள்:
- தொற்றுநோய் :ஒரு நோயின் இருப்பு சில ஹார்மோன்களின் அளவுகளை அதிகரிக்க வழிவகுக்கிறது, இது இன்சுலின் செயல்பாட்டை ஒன்றுமில்லாமல் செய்துவிடும்.
- இன்சுலின் திட்ட முறை: முறையில்லாத அல்லது தவறவிட்ட இன்சுலின் டோஸ்கள் டிகேஏ விளைவிக்கும் காரணிகளாகும்.
- போதிய உணவு உட்கொள்ளாதது.
மற்ற காரணிகள் பின்வருமாறு:
- உணர்வசப்படுதல் அல்லது உடல் அதிர்ச்சி.
- மாரடைப்பு.
- மது அல்லது போதைப்பொருட்களின் தவறான பயன்பாடு, பொதுவாக கோகோயின் பயன்பாடுகள்.
- மருந்து உபயோகித்தல்.
இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?
மருத்துவ வரலாறு, உடலியல் பரிசோதனை மற்றும் ஆய்வக சோதனைகள் போன்றவைகள் இந்நிலையை கண்டறிய மருத்துவருக்கு உதவக்கூடிய சோதனைகளாகும். HbA1c மற்றும் பிற இரத்த சர்க்கரை அளவீடுகள் சோதனைகளும் மேற்கொள்ளப்படுகிறது. நோயளி நீரிழிவு நோயினால் தாக்கப்பட்டிருப்பது தெரிந்திருந்தால், முதலில் கீட்டோன்களின் அளவு சோதனை செய்யப்படும். இது இரத்தம் அல்லது சிறுநீர் சோதனை செய்வதன் மூலம் கண்டறியப்படுகிறது. மற்ற சோதனை முறைகள் பின்வருமாறு:
- தமனி இரத்த வாயு அளவீடுகள்.
- சிறுநீர் பகுப்பாய்வு.
- ஓஸ்மோலலிட்டி இரத்த பரிசோதனை.
- உயிர்வேதியியல் சோதனைகள் (சோடியம், பொட்டாசியம், கால்சியம், போன்றவைகளுக்கான சோதனைகள்).
டிகேஏ சிகிச்சையின் முக்கியமான இலக்கு, இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை கட்டுப்படுத்துதலே. ஆரம்பகட்டத்தில் வாய்வழி இரத்த சர்க்கரை குறைப்பு முகவர்கள் மூலம் இரத்த சர்க்கரை அளவினை குறைக்க முற்படலாம், அல்லது உங்கள் சர்க்கரை அளவு மிகவும் அதிகமாக இருந்தால், இன்சுலின் பரிந்துரைக்கப்படலாம். நோயாளியின் சர்க்கரை அளவிற்கேற்றபடியே சிகிச்சைகள் முடிவு செய்யப்படுகின்றது. இந்த சிகிச்சையில் திரவம் மற்றும் எலெக்ட்ரோலைட் மாற்றியமைத்தலும் அடங்கும்.
சுய-பராமரிப்பு குறிப்புகள்:
- உங்கள் இரத்த சர்க்கரை அளவுகளை கவனமாக கண்காணித்தல் அவசியம்.
- நீரிழிவு நோய்க்கான எதிர்ப்பு நீரிழிவு மருந்துகளை எடுத்துக்கொள்ளும்பொழுது, நீங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதினால் மயக்கம் வருவது போல் உணரலாம். எனவே, எப்போதும் இனிப்பு மிட்டாய் அல்லது கேண்டியை உங்களுடன் வைத்துக்கொள்தல் அவசியம்.
- மருத்துவர் பரிந்துரைப்பதின் படி மாத்திரைகள் எடுத்துக்கொள்ளவும்.
- நீங்கள் உடல் சரியில்லை என உணர்ந்தால் ஒவ்வொரு 4லிருந்து -6 மணி நேரத்திற்கும் கீட்டோன் பரிசோதனை செய்துப்பார்க்கவும்.
- உங்கள் சிறுநீர் பரிசோதனையில் கீட்டோன்கள் இருப்பது உறுதியானால் உடற்பயிற்சி செய்வதை தவிர்க்கவும்.
- நீங்கள் அசௌகரியமாக உணர்ந்தால் அல்லது ஏதேனும் எச்சரிக்கை அறிகுறிகள் ஏற்பட்டால் ஏதாவது இருந்தால், உடனடியாக உங்கள் மருத்துவரை அழைப்பது அவசியம்.
வாழ்க்கை முறை மாற்றங்கள்:
- உங்கள் உணவுபழக்கத்தில் சர்க்கரை நிறைந்த உணவுகளின் கட்டுப்பாடு.
- அதிக நார் சத்து மற்றும் குறைந்த கொழுப்பு சத்து இருக்கும் உணவை தேர்வு செய்யுங்கள்.
- இரத்தத்தில் கீட்டோன் மறைந்தபிறகும், சர்க்கரையளவு குறைந்த பிறகும் உடற்பயிற்சி செய்தல் சாலச்சிறந்தது.