மாறு கண்கள் என்றால் என்ன?
மாறு கண்கள் என்பது, மருத்துவ ரீதியாக ஸ்ட்ராபிஸ்மஸ் என்று அழைக்கப்படும், இது கண்களின் ஒழுங்கற்ற அமைப்பு நிலையை குறிக்கின்றது. அதாவது ஒருவரால் இரு கண்களாலும் ஒரே திசையில் காண முடியாத நிலையாகும். ஒரு கண் உள்நோக்கியோ (எஸோட்ரோபியா), வெளிநோக்கியோ (எக்ஸோட்ரோபியா), மேல்நோக்கியோ (ஹைபெர்ட்ரோபியா), அல்லது கீழ்நோக்கியோ (ஹைபோட்ரோபியா) இருப்பது போன்று தோன்றுதல். பொதுவாக மாறு கண்கள் அலையும் கண்கள் என்று மற்றோரு பெயர்கொண்டும் அழைக்கப்படுகின்றது.
.இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?
மாறு கண்ணுக்கான அறிகுறிகள் பின்வருமாறு:
- ஒரு திசையில் பார்க்க முயற்சிக்கும்போது கண்களின் ஒழுங்கற்ற நிலை தோன்றுதல்.
- கண்களின் ஒழுங்கற்ற நிலையை ஈடுசெய்ய தலையின் அசாதாரண தோற்றம்.
- நீண்ட தூரத்தையோ அல்லது சூரிய ஒளியையோக் காணும் போது ஒரு கண் மூடியநிலையில் ஸ்க்விண்ட் பார்வை பார்த்தல்.
- கண்களை தேய்த்தல்.
ஒருவருக்கு எப்போதுமே அறிகுறிகள் இருப்பதில்லை. அவ்வப்போது பின்வரும் அறிகுறிகள் தோன்றலாம்:
- இரட்டை அல்லது பிளவு பார்வை (மேலும் வாசிக்க: இரட்டை பார்வைக்கான காரணங்கள்).
- களைப்பு.
- நிலையற்ற படங்கள் அல்லது எளிதில் கண்களை உற்றுபார்த்தல்.
- ஒரு கண் ஒழுங்கான அமைப்பிலிருந்து வெளியே நகர்வதை போன்ற உணர்வு.
- மிகுதியான தூரப்பார்வை.
இதன் முக்கிய காரணங்கள் யாவை?
பெரியவர்களில் மாறுகண் ஏற்படக்கூடியது என்றாலும், மாறு கண்கள் குழந்தைகளிலும் கைக்குழந்தைகளிலுமே மிகவும் பொதுவாக ஏற்படுகின்றன:
பொதுவான காரணங்கள் பின்வருமாறு:
- குழந்தை பருவத்தில் மோசமாக உருவான கண்களின் ஒருங்கிணைப்பு.
- மிகுதியான தூரப்பார்வை (ஹைபெரோபியா).
- கண் தசைகள், நரம்புகள் அல்லது மூளையின் ஏற்படும் சிக்கல்கள் கண் இயக்கத்தை பாதித்தல்.
- மன அதிர்ச்சி, பக்கவாதம், அல்லது மற்ற பொதவான ஆரோக்கிய பிரச்சினைகள்.
ஆபத்து காரணிகள் பின்வருமாறு:
- மாறுகண்களினை கொண்ட குடும்ப வரலாறு.
- டவுன்ஸ் சிண்ட்ரோம் அல்லது பெருமூளை வாதம்.
- அதிகப்படியான சரிசெய்யப்படாத தூரப்பார்வை.
இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?
மாறுகண் நோயறிதல் மற்றும் அதற்கான சிகிச்சைக்கு முழுமையான கண் பரிசோதனை தேவைப்படுகிறது. அறிகுறிகளின் வரலாற்றைப் பற்றி மருத்துவர் குடும்ப உறுப்பினர்களிடம் கேட்கலாம். பார்வை மற்றும் கண் ஒருங்கிணைப்பை மதிப்பிடுவதற்கு மருத்துவர் சில சோதனைகளை மேற்கொள்ளலாம். அவற்றுள் அடங்கும் சில சோதனைகள் கீழ்வருமாறு:
- பார்வை கூர்மை: இந்த சோதனை உங்கள் பார்வை எவ்வளவு பாதித்திருக்கிறது என்பதை மதிப்பிடுகிறது. இந்த சோதனையில் தூரத்திலிருந்து எழுத்துக்களை மாறுபட்ட அளவுகளில் படிக்கவேண்டும், இது உங்கள் காட்சி திறனின் ஒரு பகுதி முடிவுகளை எடுக்க உதவுகிறது.
- ஒளிவிலகல் பிழை: பிழையை கண்டுபிடித்து அதை ஈடுசெய்வதற்கு தேவையான லென்ஸ் சக்தியை தேர்வுசெய்ய மருத்துவர் ஒளிவிலகல் பிழைகளை கண்டறியும்.
- கண் ஆரோக்கியம்: மருத்துவர் உங்கள் கண்களின் ஆரோக்கியத்தை பரிசோதிக்க ஒரு பிளவு லென்ஸ் நுண்ணோக்கியை பயன்படுத்தலாம்.
மாறுகண்களின் சிகிச்சைகள் பின்வருமாறு:
- கண்கண்ணாடிகள் அல்லது காண்டாக்ட் லென்ஸ்கள்.
- பார்வை சிகிச்சை.
- கண் அறுவை சிகிச்சை.