விழி வெண்படல புண் என்றால் என்ன?
விழி வெண்படல புண் என்பது கெராடிடிஸ் என்றும் அழைக்கப்படுகிறது, இது விழி வெண்படலத்தில் ஏற்படும் கடுமையான அழற்சியின் நிலையே ஆகும்.இந்தியாவில் இந்த நோயின் ஒட்டுமொத்த பாதிப்பு இன்னும் கண்டறியப்படாமல் இருக்கிறது.
இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?
அறிகுறிகள் பின்வருமாறு:
- கண்கள் சிவந்திருத்தல்.
- கண்களில் ஏற்படும் வலி மற்றும் வேதனை.
- கண்களில் சீழ் அல்லது திரவ வெளியேற்றம் ஏற்படுதல்.
- கண்களில் எரிச்சல்.
- கண்ணீர் வெளியேற்றம்.
- வெளிச்சத்திற்கு உணர்திறன்.
- மங்களான பார்வை.
- கண் இமைகளின் வீக்கம்.
- விழி வெண்படலத்தில் வெள்ளைப்புள்ளிகள்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
விழி வெண்படல புண் பின்வரும் காரணங்களால் ஏற்படலாம்:
- பாக்டீரியல் நோய்த்தொற்று:
- இது பொதுவாக கான்டாக்ட் லென்ஸை பயன்படுத்துபவர்களிடத்தில் காணப்படும், குறிப்பாக நீண்ட நேரத்திற்கு உபயோகப்படுத்துபவர்களுக்கு இந்நிலை ஏற்படுகிறது.
- வைரல் நோய்த்தொற்று:
- குறிப்பாக, சளிப் புண் ஏற்படுத்தக்கூடிய ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் நுண்கிருமி.
- மன அழுத்தம், குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் சூரிய ஒளி வெளிப்பாடு ஆகியவையினால் தூண்டப்படுதல்.
- பூஞ்சை நோய்த்தொற்று:
- ஸ்டீராய்டல் கண் சொட்டு மருந்துகள் அல்லது கான்டாக்ட் லென்ஸின் தவறான பயன்பாடு ஆகியவை விழி வெண்படலத்தில் பூஞ்சை தொற்றுகளை ஏற்படுத்தும்.
- ஒட்டுண்ணி தொற்று:
- அகஸ்தாமெபா தொற்றுகள் காரணமாக ஏற்படலாம்.
- கண் எரிச்சல் அல்லது காயம்.
ஆபத்து விளைவிக்கக்கூடிய காரணிகள் பின்வருமாறு:
- கான்டாக்ட் லென்ஸ்களின் பயன்பாடு.
- சளி புண்கள் அல்லது சின்னம்மை ஏற்படுதல்.
- ஸ்டீராய்டுகளைக் கொண்ட கண் சொட்டு மருந்துகளின் பயன்பாடு.
- கண்ணிமைகள் தொடர்பான கோளாறுகள்.
- விழிவெண்படலத்தில் ஏற்படும் காயம் அல்லது எரிச்சல்.
இதன் கண்டறியும் முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் யாவை?
மருத்துவம் சார்ந்த வரலாறு, சமீபத்தில் கண்களில் ஏதேனும் காயங்கள் ஏற்பட்டு இருந்தால் அதன் வரலாறு, மற்றும் கான்டாக்ட் லென்ஸ்களின் பயன்பாடு போன்றவைகளின் விசாரணைகளோடு ஆரம்பகட்டத்தில், வழக்கமான கண் பரிசோதனைகளும் செய்யப்படலாம். மேலும் நோய் கண்டறிதலுக்கு பயன்படுத்தக்கூடிய பிற சோதனைகள் பின்வருமாறு:
- பிளவு விளக்கு பரிசோதனை.
- ஃப்ளூரெஸ்சின் கறை: விழிவெண்படலத்தில் எந்த சேதம் ஏற்பட்டாலும் சுட்டிக்காட்டுகிறது.
- ஸ்க்ராப்பிங் கலாச்சாரம்(பாதிக்கப்பட்ட இடத்திலிருந்து மாதிரியை எடுத்து சோதனை செய்வது):இது கண்களில் ஏற்படும் தொற்றை கண்டறிய உதவுகிறது.
- பொதுக்குவிய நுண்ணோக்கி: விழிவெண்படலத்தில் உள்ள ஒவ்வொரு செல்களின் காட்சியையும் வழங்குகிறது.
- உயர்-வரையறு புகைப்படம்.
இதற்கான சிகிச்சை நுண்ணுயிர் எதிர்ப்பிகள், ஆன்டிஃபங்கல், அல்லது ஆன்டிவைரல் கண் சொட்டு மருந்துகள் போன்றவற்றின் பயன்பாட்டை உள்ளடக்குகின்றது.தொற்று மறைந்த பின், உங்களுக்கு ஸ்டீராய்டல் கண் சொட்டு மருந்துகள் கொடுக்கப்படலாம். வலி இருப்பின், வலியை குறைக்க வலி நிவாரணிகள் வழங்கப்படலாம்.
இதற்கான அறுவை சிகிச்சை அணுகுமுறை என்பது பார்வையை மீண்டும் பெற விழி வெண்படல மாற்று சிகிச்சை ஆகும்.
சுய-பாதுகாப்பு குறிப்புகள்:
- மேலும் சேதம் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள விழிகாப்புக் கண்ணாடிகள் அல்லது கண்கண்ணாடிகள் அணிந்து கொள்ளலாம்.
- தூங்கும் முன் கான்டாக்ட் லென்ஸ்களை அகற்றவும்.
- தொற்று ஏற்படுவதைத் தடுக்க குளிர்ந்த நீரில் அடிக்கடி உங்கள் கண்களை கழுவுங்கள்.
நிரந்தர பார்வை சேதம் அல்லது குருட்டுத்தன்மை ஏற்படுவதை தவிர்க்க உங்கள் மருத்துவரை உடனடியாக ஆலோசனை செய்தல் அவசியம்.