குழந்தைகளுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்சனை என்றால் என்ன?
பெரியவர்களை விட குழந்தைகளுக்கு தைராய்டு பிரச்சனை அரிதாகவே ஏற்படுகிறது, இருந்தாலும் ஒரேயடியாக இது பொதுவானது இல்லை என்று சொல்லிவிட முடியாது. இதன் அறிகுறிகளும் தாக்கங்களும் பெரும்பாலும் பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஒரே மாதிரிதான் இருக்குமென்றாலும், சில வெளிப்படையான வித்தியாசங்களும் காணப்படுகின்றன. தைராய்டிசம் (தைராய்டு நோய்) என்பது ஒன்று மிக குறைவான செயல்பாடுள்ள ஒரு தைராய்டு சுரப்பியால் (ஹைப்போதைராய்டிசம்) ஏற்படுகிறது அல்லது மிகையான செயல்பாடுள்ள ஒரு தைராய்டு சுரப்பியால் (ஹைப்பர்தைராய்டிசம்) ஏற்படுகிறது. இதன் அறிகுறிகளும் சிகிச்சையும் எந்த விதமான தைராய்டு பிரச்சனை உணரப்பட்டுள்ளது என்பதை பொறுத்து மாறுபடும்.
இதன் முக்கிய தாக்கங்களும் அறிகுறிகளும் என்னென்ன?
குழந்தைகளும் பெரியவர்களும் தைராய்டு பிரச்சனைகளால் அவதிப்படும்போது இரண்டு முக்கிய நிலைகள் கவனிக்கப்படுகின்றன. அவை இரண்டுக்குமான தாக்கங்களும் அறிகுறிகளும் மிகவும் வேறுபட்டதாகும்:
- ஹாஷிமோட்டோ'ஸ் தைராய்டிட்டிஸ்: இந்த நிலையில் கழுத்தில் ஏற்படும் ஒரு வீக்கம், அதாவது முன்கழுத்துக்கழலை என்று அழைக்கப்படும் நிலையுடன் சேர்ந்து வளர்ச்சி விகிதம் குறைவது தெளிவாக காணப்படுகிறது. தோலின் வறட்சி மற்றும் அரிப்பு, வீக்கம் மற்றும் உடல் எடை அதிகரித்தல், குளிர்ச்சியினால் உணர்திறன், வலிமை குறைவு, எதிலும் கவனம் செலுத்துவதில் இயலாமை மற்றும் மலச்சிக்கல் ஆகியவை பரவலாக சொல்லப்படும் சில அடையாளங்கள் ஆகும்.
- கிரேவ்'ஸ் நோய்: அதிகப்படியான ஆற்றல் மற்றும் மிகைச் செயல்பாடு (ஹைப்பர்ஆக்ட்டிவிட்டி) எனப்படும் மிக அதிகமான இயக்கம், கவனச்சிதறல், பதட்டம், துரிதமான வளர்ச்சி, நடத்தையிலும் உறக்கத்திலும் தொந்தரவுகள், நாடித்துடிப்பு அதிகரித்தல், உடல் எடை இழப்பு, தசைகளின் பலவீனம் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவை இந்த நிலையின் குணாதிசய அறிகுறிகளாகும்.
இதன் முக்கிய காரணங்கள் என்ன?
தைராய்டிசம் ஏற்படுவதின் இரண்டு காரணங்களும், ஒன்று குறைவான செயல்பாடுள்ள தைராய்டு சுரப்பியாகவோ அல்லது மிகையான செயல்பாடுள்ள தைராய்டு சுரப்பியாகவோ இருப்பதால் தைராய்டிசத்தின் பாதிப்பால் ஏற்படும் நிலைகளும் அதிலிருந்தே உற்பத்தியாகின்றன.
- ஹாஷிமோட்டோ'ஸ் தைராய்டிட்டிஸ் என்பது உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு தைராய்டு சுரப்பியை தாக்குவதன் மூலம் தைராய்டு ஹார்மோனின் தயாரிப்பை தடுப்பதனால் ஏற்படுகிறது. இது உடலை பாதிப்பதற்கு நீண்ட நாட்கள் ஆகுமென்பதால், இதன் அறிகுறிகள் மிக வெளிப்படையாக தெரியும் வரை இந்த நிலை நீண்ட காலத்திற்கு கண்டறியப்படாமலே போய்விடுகிறது.
- கிரேவ்'ஸ் நோய் என்பது ஒரு தற்சார்பு ஏமக்கோளாறு ஆகும், இந்த நிலையினால் தயாரிக்கப்படும் பிறபொருளெதிரிகள் தைராய்டு சுரப்பியை மிகவும் தூண்டுவதன் விளைவாக மிக அதிகமான தைராய்டு ஹார்மோன் உற்பத்தியாகிறது.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
தைராய்டு பிரச்சனையோடு தொடர்புடைய எந்த விஷயமானாலும், அதை கண்டறிவதற்கான முதல் படி என்பது தைராய்டு ஹார்மோன்கள் மற்றும் தைரோய்டை தூண்டும் ஹார்மோனின் அளவுகளை அறிவதற்காக எடுக்கப்படும் ஒரு ரத்த மாதிரியே ஆகும். ஒரு உடல் பரிசோதனையோடு சேர்த்து நோய்ப்பாதிப்பு ஆய்வு செய்வதன் மூலம் அறிகுறிகளின் இருப்பை உறுதிப்படுத்த உதவுகிறது மற்றும் நிலையின் இருப்பையும் சரிபார்க்கிறது.
ஒவ்வொரு நிலைக்கும் சிகிச்சை வேறுபடுகிறது.
- ஹாஷிமோட்டோ'ஸ் தைராய்டிட்டிஸ்: வாழ்க்கை முழுவதும் ஹார்மோன் மாற்றுதல் சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. ஹார்மோன் அளவுகளை பராமரிப்பதற்காக தைராய்டின் செயல்பாட்டு அளவைப் பொறுத்து மருந்தளவில் மாறுபாடு ஏற்படுகிறது.
- கிரேவ்'ஸ் நோய்: தைராய்டு எதிர்ப்பு மருந்துகள் உடனடியாக தொடங்கப்பட்டு இந்த நிலை சீராகும் காலம் வரைக்கும் பரிந்துரைக்கப்படுகிறது. மிக தீவிரமான சமயங்களில் அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதுதான் இறுதியான வழியாக அமைகிறது. சிகிச்சையளிக்கப்படும் காலம் முழுவதும் தைராய்டு அளவுகளும் அறிகுறிகளும் முறையாக கண்காணிக்கப்படுகிறது.