குழந்தைகளுக்கு ஏற்படும் மனச்சோர்வு - Depression in Children in Tamil

Dr. Pradeep JainMD,MBBS,MD - Pediatrics

December 01, 2018

March 06, 2020

குழந்தைகளுக்கு ஏற்படும் மனச்சோர்வு
குழந்தைகளுக்கு ஏற்படும் மனச்சோர்வு

குழந்தைகளுக்கு ஏற்படும் மனச்சோர்வு என்றால் என்ன?

பெரியவர்களைப் போலவே, குழந்தைகளும் மனச்சோர்வினால் பாதிக்கப்படலாம். குழந்தைகளுக்கு மனச்சோர்வு ஏற்பட்டால் அவர்கள் கவலையாக இருப்பதுபோல் காணப்படுவார்கள் மற்றும் எதிலும் ஆர்வமில்லாமல் இருப்பார்கள், இவைகள் இப்படியே தொடர்ந்து, இதனால் பள்ளிக்கூட வேலைகள், உறவுமுறைகள் மற்றும் நடவடிக்கைகள் அனைத்தும் பாதிக்கப்படும். மன கவலைகள் போல் இல்லாமல், மன அழுத்தம் காலப்போக்கில் வெளிவராது ஆனால் கவனிப்பு தேவை. குழந்தைகளுக்கு ஏற்படும் மனச்சோர்வை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் மற்றும் இதற்கு சிகிச்சையும் அளிக்கப்பட வேண்டும்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

ஒரு குழந்தை மனச்சோர்வினால் பாதிப்பு அடைக்கிறது என்பதை கண்டறிய கீழ்காணும் அறிகுறிகளை கவனமாக கண்காணிக்க வேண்டும்:

  • கோபம் மற்றும் எளிதில் கோபம் கொள்ளுதல்.
  • பசி ஏற்படும் மற்றும் தூங்கும் நேரங்களில் மாற்றம் ஏற்படுதல்.
  • தற்கொலை மனப்போக்கு.
  • ஆற்றல் மற்றும் இயக்கத்தில் குறைபாடு மற்றும் எதிலும் கவனம் செலுத்த முடியாமல் போதல்.
  • விமர்ச்சனம் அல்லது நிராகரிப்பினால் அதிகரித்த உணர்திறன், சத்தமாக அழுதல்.
  • சமூகத்தின் தொடர்புகளில் இருந்து விலகி போவது.
  • நீடித்த கவலைகள், குற்ற உணர்ச்சி அல்லது நான் எதற்கும் பயனற்றவன் என்ற எண்ணம்.
  • சிகிச்சை மூலம் எளிமையடையாத தலைவலி மற்றும் வயிற்றுவலி.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

குழந்தைகளின் மன அழுத்தத்திற்கு பல காரணங்கள் இருக்கலாம். இவற்றில் சில கீழ்கண்டவாறு:

  • மனஅழுத்தத்திற்கான குடும்ப வரலாறு.
  • மது மற்றும் போதை மருந்துகளை தவறாக பயன்படுத்துதல்.
  • குடும்ப சூழல்களில் மோதல் மற்றும் அமைதி இல்லாமல் போதல்.
  • உடலில் ஏதேனும் நோய் ஏற்படுதல்.
  • குடும்பத்தின் நிகழ்வுகளில் ஏற்படும் சீர்குலைவுகள்.

இதனை கண்டறியும் முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் யாவை?

எப்போது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறையேனும் தொடர்ந்து துயரங்கள் ஏற்படுகின்றனவோ அப்போது குழந்தைகளை நாம் கண்காணிக்க வேண்டும், இது மருத்துவ உதவிகளை பெற உதவும். பொதுவாக ஒரு மருத்துவ பயிற்சியாளர் மனநல மருத்துவரை பார்க்க சொல்லும் முன் முதலில் உடலை பரிசோதிப்பார். குழந்தையிடம் மற்றும் குடும்பத்தார்களிடமும், மருத்துவ மற்றும் குடும்ப வரலாறு பற்றியும் நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களை சந்தித்தும் ஏதேனும் உளவியல் சார்ந்த கேள்வித்தாள்கள் மூலமாகவும் மன உளைச்சலுக்கான காரணங்களை மருத்துவர் கண்டறிவார். கவனக் குறைபாட்டுக் கோளாறு / மிகையியக்கம் கோளாறு (ஏ.டி.ஹெச்.டி) மற்றும் எண்ண சுழற்சி நோய் (ஓ.சி.டி) போன்ற வேறு சில கோளாறுகள் உள்ளதா என்பதையும் மருத்துவர் கண்டறிவார்.

மனஅழுத்தத்திற்கு சிகிச்சை அளிப்பதற்கு, எப்பொழுதும் முதலில் தேர்ந்தெடுப்பது உளவியல் ஆலோசனைகளையே, இவைகள் ஆலோசனைகள் மற்றும் மற்ற உத்திகளை உள்ளடக்கியது. குழந்தைகளுக்கு கடுமையான மனச்சோர்வினை கடக்க உதவ மனதளர்ச்சிக்கான மருந்துகளை இரண்டாவது விருப்பமாக தேர்ந்தெடுக்கலாம். தேவைப்பட்டால் மற்ற உடனிருக்கும் நோய்களுக்கும் மருந்துகள் பரிந்துரைக்கலாம்.



மேற்கோள்கள்

  1. Claudia Mehler-Wex et al. Depression in Children and Adolescents. Dtsch Arztebl Int. 2008 Feb; 105(9): 149–155. PMID: 19633781
  2. HealthLink BC [Internet] British Columbia; Depression in Children and Teens
  3. Alsaad AJ, Al Nasser Y. Depression In Children. StatPearls [Internet]. Treasure Island (FL): StatPearls Publishing; 2019 Jan-.
  4. National Collaborating Centre for Mental Health (UK). Depression in Children and Young People: Identification and Management in Primary, Community and Secondary Care.. Leicester (UK): British Psychological Society; 2005. (NICE Clinical Guidelines, No. 28.) 3, Depression.
  5. Paul O Wilkinson. Managing depression in childhood and adolescence. London J Prim Care (Abingdon). 2009; 2(1): 15–20. PMID: 26042160

குழந்தைகளுக்கு ஏற்படும் மனச்சோர்வு டாக்டர்கள்

Dr. Pritesh Mogal Dr. Pritesh Mogal Pediatrics
8 Years of Experience
Dr Shivraj Singh Dr Shivraj Singh Pediatrics
13 Years of Experience
Dr. Abhishek Kothari Dr. Abhishek Kothari Pediatrics
9 Years of Experience
Dr. Varshil Shah Dr. Varshil Shah Pediatrics
7 Years of Experience
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்