தோல்தடிப்பு என்றால் என்ன?
தோல்தடிப்பு என்பது நமது கைகள் மற்றும் பாதங்களை சுற்றியிருக்கும் தோலில் ஏற்படும் சொற சொறப்பான வறண்ட திட்டுகளே ஆகும். இவை மிகவும் எரிச்சலூட்டுவதாகவும் அசவுகரியமாகவும் இருப்பதோடல்லாமல் பார்ப்பதற்கும் நன்றாக இருப்பதில்லை. தோல்தடிப்பு என்பது தீவிரமான பிரச்சனையாக இல்லாமலிருக்கலாம், ஆனால் இதை எளிதில் தவிர்க்கவும் குணப்படுத்தவும் முடியும்.
பெரும்பாலும் தோல்தடிப்பு என்பது தோல் காய்ப்பு (ஆணிக்கால்) என தவறாக கருதப்படுகிறது. அவை இரண்டுமே உராய்விலிருந்து பாதுகாப்பதற்காக உருவாகும் கடினமான அடுக்குகளை கொண்ட தோல்கள் தான் இருப்பினும், தோல்தடிப்பு பொதுவாக தோல் காய்ப்பை விட பெரிதானவை, அவை தோல் காய்ப்பை காட்டிலும் வெவ்வேறு பகுதிகளில் உருவாகும் மற்றும் இதனால் ஏற்படும் வலி மிக அரிதானது.
இதன் முக்கிய அறிகுறிகளும் அடையாளங்களும் எவையெவை?
தோல்தடிப்பு என்பது குறிப்பாக கால்களின் பாதங்களின் கனமான தோலின் பகுதியில் மற்றும் பந்துகளின் கீழ், உள்ளங்கைகள் அல்லது முழங்கால்களில்; உடல் தோற்ற அமைப்பு மற்றும் இயக்கங்களினால் ஏற்படும் பெரும்பாலுமான அழுத்தத்தை தாங்கக்கூடிய இடங்களிலேயே உருவாகின்றது. அவைகளின் வழக்கமான தோற்றம் பின்வருமாறு
- கடினமான மற்றும் வளர்ந்துள்ள கட்டி-போன்ற புடைப்பு.
- ஆழமாக அழுத்தும் போது வலியிருப்பது அல்லது மேற்பரப்பின் கீழே மென்மையாக இருப்பது.
- தோல் மீது உருவாகும் தடிமனான மற்றும் சொற சொறப்பான திட்டுகளே.
- தோலின் தோற்றமானது மெழுகுபோலோ, வறண்டோ மற்றும் செதில்களாகவோ காட்சியளிப்பது.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
தோல்தடிப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணம் உராய்வே ஆகும். இது பின்வரும் காரணிகளாலும் ஏற்படலாம்:
- மிகவும் இறுக்கமான அல்லது தளர்வான காலணி.
- குறிப்பிட்ட சில இசைக்கருவிகளை வாசித்தல்.
- உடற்பயிற்சி உபகரணங்களை கொண்டு உடற்பயிற்சி செய்வது.
- பேட் அல்லது பந்தாட்ட மட்டை பயன்படுத்தும் விளையாட்டில் ஈடுபடுதல்.
- நீண்ட காலத்திற்கு எழுதும் கருவிகளைப் பயன்படுத்துதல்.
- சைக்கிளிலோ அல்லது மோட்டார் பைக்கிலோ அடிக்கடி நெடுந்தூர பயணம் செல்லுதல்.
- ஷூக்கள் அணியும் போது சாக்ஸ் பயன்படுத்தாதல்.
- பெருவிரல் முண்டு, வளைநகங்களுடைய விரல்கள் அல்லது பிற குறைபாடுகள் தோல்தடிப்பு ஏற்படுவதற்கான ஆபத்தை அதிகரிக்கிறது.
- சில நேரங்களில், போதுமான இரத்த ஓட்டமின்மை மற்றும் நீரிழிவு நோய் போன்ற நிலைமைகளினாலும் தோல்தடிப்பு ஏற்படலாம்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
திட்டுகள் உள்ள இடத்தில் மருத்துவர்கள் மேற்கொள்ளும் எளிய பரிசோதனையே தோல்தடிப்பு கண்டறிய போதுமானது. தோல்தடிப்பு ஏற்படுவதற்கு அடிப்படை காரணமானது ஏதேனும் குறைபாடுகள் தான் என சந்தேகபட்டால் எக்ஸ்-கதிர்கள் (எக்ஸ் - ரே) சோதனை பரிந்துரைக்கப்படுகிறது.
பெரும்பாலும், தோல்தடிப்பு தானாகவே மறைந்துவிடும், அல்லது சில எளிய வீட்டு பராமரிப்பை பயன்படுத்துவதன் மூலமும் இதை குணப்படுத்த முடியும். வழக்கமாக மருத்துவர்கள் தோல்தடிப்பிற்காக பரிந்துரைப்பவை பின்வருமாறு:
- வறண்ட, அதிகப்படியான தோலை நீக்குதல் அல்லது சீர்படுத்துதல்.
- ஓட்டுகள் மற்றும் மருந்துகளின் உதவியால் தோல்தடிப்பை நீக்கலாம்.
- சாலிசிலிக் அமிலத்தின் பயன்பாட்டினால் தோல்தடிப்புலிருந்து விடுபடலாம்.
- உராய்வுகளை குறைப்பதற்கும் மேலும் தோல்தடிப்பு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கும் ஷூ இன்செர்ட்களை பயன்படுத்தலாம்.
- அறுவை சிகிச்சையின் மூலம் குணப்படுத்தக்கூடிய குறைபாடு என்றால் அதை மேற்கொள்ளலாம்
- ஊறவைப்பதன் மூலம் தோலை மென்மைப்படுத்துதல், ஈரப்பதமாக்குதல் அல்லது இறந்த சருமத்தை உமிழ் கல் அல்லது உமிழ்வு பலகையை கொண்டு அகற்றுவது.
- எல்லா நேரங்களிலும் சாக்சோடுக்கூடிய நன்கு-பொருத்தமான ஷூக்களை அணிவது.