பெருவிரல் முண்டு என்றால் என்ன?
பெருவிரல் முண்டு என்பது பெருவிரலின் அடியில் ஏற்படும் ஒரு கட்டியாகும். அது பார்ப்பதற்கு பெருவிரல் இரண்டாவது விரலின் பக்கம் அதிகம் சாய்வதால் ஏற்பட்டிருக்கும் ஒரு புடைப்பை போல இருக்கும். பெருவிரல் முண்டால் சிலருக்கு எந்த அசௌகரியமும் இருக்காது, அதே சமயத்தில் வேறு சிலருக்கு அது மிகுந்த வலியை ஏற்படுத்தும். பெருவிரல் முண்டு இருக்கும் எல்லோருக்கும் பொதுவாக சிறுவிரலின் அடியிலும் அதே போன்ற அமைப்பு இருக்கும்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
பெருவிரல் முண்டை சுலபமாக கண்டுபிடிக்கலாம்.நீங்கள் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் பின்வருமாறு:
- பெருவிரலின் இணைப்பில் வீக்கம் மற்றும் சிவத்தல்.
- தொடர்ச்சியான அல்லது விட்டு விட்டு வருகின்ற வலி.
- முதல் இரு கால்விரல்களுக்கு இடைப்பட்ட இடத்தில் தோல் தடிப்பு மற்றும்/அல்லது கால் ஆணிகள்.
- பெருவிரலின் வெளிப்புறத்தில் ஒரு வீக்கம்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
பல்வேறு காரணிகளால் பெருவிரல் முண்டு ஏற்படலாம். அவை:
- காலில் ஏற்படும் காயம்.
- மரபுவழி குறைபாடு.
- பிறப்பில் ஏற்பட்ட மற்ற குறைபாடுகள்.
- மிக இறுக்கமான காலணியையோ அல்லது ஹைஹீல்ஸையோ அணிவது (இது ஒரு விவாதத்துக்குரிய காரணமாகும்).
- முடக்கு வாதம்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
ஒரு மருத்துவருக்கு பெருவிரல் முண்டை கண்டறிய பொதுவாக காலை பரிசோதிப்பது போதுமானதாகும்.எனினும் சில சமயங்களில் மருத்துவர்கள் சேதத்தின் அளவை மதிப்பிடவும் பெருவிரல் முண்டின் சரியான காரணத்தை அறியவும் காலின் எக்ஸ்ரேவை பரிந்துரைப்பார்கள்.
பெருவிரல் முண்டின் சிகிச்சை என்பது பழமைவாதத்திலிருந்து அறுவை சிகிச்சை வரை பரவலாக இருக்கக்கூடியது. நிலையின் தீவிரம் மற்றும் வலியின் வகையை பொறுத்து இதன் அணுகுமுறை அமையும் .சிகிச்சை முறைகள் பின்வருமாறு:
- அதிக வசதியான காலணிகளுக்கு மாறுவது.
- வலியை குறைத்து மேலும் ஆறுதல் அளிப்பதற்காக காலில் ஆதரவளிக்கும் பட்டைகள், நாடா மற்றும் அணைவரிக்கட்டை போன்றவற்றை பயன்படுத்துவது.
- ஷூ உள்வைப்புகளை உபயோகித்து அந்த இடத்தின் அழுத்தத்தை குறைப்பது.
- அந்த இடத்தில ஐஸ்கட்டிகளை வைத்து அதன் சிவப்புதன்மை மற்றும் வலியிலிருந்து விடுவிப்பது.
- இந்த காரணங்களுக்காக அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படலாம்:
- எலும்பின் ஒரு பகுதியை நீக்கிய பிறகு பெருவிரல் இணைப்பை நேராக்குவதற்கும் மறு-ஒழுங்கு செய்வதற்கும்.
- பெருவிரல் இணைப்பை சுற்றியுள்ள வீங்கிய திசுவை நீக்குவதற்கு.
- பாதிக்கப்பட்ட இணைப்பின் எலும்புகளை சேர்ப்பதற்கு.