எலும்பு வலி என்றால் என்ன?
எலும்பு வலி என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எலும்புகளில் ஏற்படும் ஒரு வலி, பாதிக்கப்பட்ட இடத்தை தொடும்போது வரும் வலி அல்லது அசௌகரியம் ஆகும். எலும்பு வலி பொதுவாக கை மற்றும் கால்களின் நீண்ட எலும்புகளை பாதிக்கிறது. இது பெரும்பாலும் அலட்சியப்படுத்தப்பட்டாலும், எலும்பு வலி ஒரு நபரின் சாதாரண செயல்பாடு மற்றும் தினசரி வாழ்க்கையை கடுமையாக பாதிக்கலாம்.
நோயுடன் தொடர்புடைய முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
கீழ்கண்ட நிலைகளுடன் தொடர்புடைய எலும்பு வலிக்கான பண்புகள்:
புற்றுநோய் தொடர்புடைய எலும்பு வலி:
- பாதிக்கப்பட்ட இடத்தை தொடும்போது ஆரம்பகட்டத்தில் வரும் வலி.
- ஓய்வில் இருக்கும்போது கூட இடைப்பட்ட மற்றும் தொடர் வலி.
எலும்புத்துளைநோயுடன் (ஆஸ்டியோபோரோசிஸ்) தொடர்புடைய எலும்பு வலி:
- கடுமையான முதுகுவலி.
- தோற்றத்தில் ஏற்படும் மாற்றம்.
- உயரம் இழப்பு.
- நடக்கும் திறனில் குறைபாடு.
- நீடித்த இயலாமை.
கீல்வாதம் தொடர்புடைய எலும்பு வலி:
- மூட்டு நெகிழ்வுத்தன்மையில் குறைபாடு.
- மூட்டு வீக்கம்.
- விறைப்பு மற்றும் உருக்குலைவு.
- குறைந்த இயக்கம் மற்றும் செயல்பாடு.
பேஜட் நோய் தொடர்புடைய எலும்பு வலி:
- முதுகெலும்பு, இடுப்பெலும்பு மற்றும் கால்கள் போன்ற எடை தாங்கும் எலும்புகளில் வலி.
- எலும்பில் நுண்ணிய முறிவுகள்.
பிற காரணிகள் காரணமாக ஏற்படும் எலும்பு வலிக்கு கூடுதல் அறிகுறிகள் இருக்கலாம்.
எலும்பு வலிக்கான முக்கிய காரணங்கள் என்ன?
எலும்பு வலிக்கு மிகவும் பொதுவான ஆனால் குறைந்த வெளிப்படையான காரணம் எலும்பு புற்றுநோய் (முதன்மை புற்றுநோய்).
பிற காரணங்கள் பின்வருமாறு:
- எலும்புத்துளைநோய்.
- கீல்வாதம்.
- பேஜட் நோய்.
- ஒரு உறுப்பில் இருந்து மற்ற இடங்களுக்கு புற்றுநோய் பரவும் நிலை (மெட்டாஸ்டாடிக்).
- பாதிக்கப்பட்ட இரத்த ஓட்டம் (உயிரணு இரத்தசோகை போன்றது).
- எலும்பு முறிவு (ஆஸ்டியோமெலிடிஸ்).
- தொற்றுநோய்.
- காயம் அல்லது அதிர்ச்சி, விபத்துக்கு பின்னர் வரும் எலும்புமுறிவு.
- இரத்தப்புற்றுநோய்.
- அளவுக்கு அதிகமான காயம்.
- தளர்நடைப் பருவ எலும்பு முறிவு (குழந்தைகளில் ஏற்படக்கூடிய முறிவு).
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
ஒரு முழுமையான மருத்துவ வரலாறு மற்றும் உடல் பரிசோதனை ஆகியவை உள்ளிருக்கும் நிலையை பகுப்பாய்வு செய்ய தேவையானதாகும்.
பின்வரும் சோதனைகள் பரிந்துரைக்கபடலாம்:
- இரத்த சோதனைகள் (முழுமையான இரத்த எண்ணிக்கை மற்றும் வேறுபட்ட இரத்த எண்ணிக்கை சோதனைகள் போன்றவை).
- எலும்பு எக்ஸ்- கதிர்கள்.
- சி.டி அல்லது எம்.ஆர்.ஐ ஸ்கேன்.
- ஹார்மோன் நிலை ஆய்வுகள்.
- பிட்யூட்டரி மற்றும் அட்ரினல் சுரப்பி செயல்பாடு சோதனைகள்.
- சிறுநீர் பகுப்பாய்வு.
எழும்பு வலிக்கான சிகிச்சை அதற்கான அறிகுறி மற்றும் அடிப்படை நோய் இரண்டிலும் கவனம் செலுத்துகிறது. இவை பின்வருமாறு:
- மருந்துகள்: நுண்ணுயிர் எதிர்ப்பிகள், அழற்சி எதிர்ப்பு மருந்துகள், ஹார்மோனல் தெரபி, நீண்டகால ஓய்வுக்குப் பின்னர் மலச்சிக்கலுக்கு வலி நிவாரணி மற்றும் மலமிளக்கிகள்.
- கீல்வாதத்திற்கான கூடுதல் சிகிச்சை நடவடிக்கைகள் பின்வருமாறு:
- மேற்பூச்சு வலி நிவாரணிகள்.
- உடற்பயிற்சி மற்றும் உடல் சிகிச்சை.
- மூட்டு சேர்க்கை அல்லது மூட்டு மாற்று அறுவை சிகிச்சை.
- எலும்புத்துளைநோய் மற்றும் கீல்வாதம் ஆகியவற்றிற்கான சிகிச்சை:
- நீட்சி, வலுவூட்டல், தோற்றம் மற்றும் இயக்கதிற்க்கான பல்வேறு பயிற்சிகள்.
- புனர்வாழ்வு.
- பேஜட் நோய்க்கான கூடுதல் சிகிச்சைகள்:
- எலும்பு மீள்வடிப்பு வீதத்தை குறைக்க மருந்துகள்.
- எலும்பு மறுசீரமைப்பு அல்லது மூட்டு மாற்று சிகிச்சை ஆகியவற்றிற்கு சில சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.
- எலும்பு வலிமையை பராமரிக்க மற்றும் எடை தாங்கும் மூட்டுகள் வலியின்றி இயங்கிட உடற்பயிற்சிகள் செய்வது அவசியம்.
- எலும்பு புற்றுநோய்க்கான சிகிச்சை:
- அறுவை சிகிச்சை.
- கீமோதெரபி.
- கதிர்வீச்சு சிகிச்சை.
- நோய்தடுப்பாற்றல் சிகிச்சை.