எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை என்றால் என்ன?
எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்கு வேறு பெயர் தண்டு உயிரணு (ஸ்டெம் செல்) மாற்று சிகிச்சை, இந்த செயல்முறையில் செயல்படாத எலும்பு மஜ்ஜை மற்றும் தண்டு அணுக்கள் உள்ளவர்களுக்கு ஆரோக்கியமான தண்டு அணுக்கள் மாற்றப்படுகிறது. எலும்பு மஜ்ஜை என்பது ஓர் பஞ்சு போன்ற திசு, இது அனைத்து எலும்புகளிலும் இருக்கும் மற்றும் தண்டு அணுக்கள் என்பது இதில் ஓர் பகுதி, இவை சிவப்பு இரத்த அணுக்கள், வெள்ளை இரத்த அணுக்கள் மற்றும் இரத்த தட்டுக்களின் தயாரிப்பிற்கு மிக முக்கியமானதாகும்.
2014 -ல் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், உலகில் ஒரு எலும்பு மஜ்ஜை மாற்று செயல்முறையின் செலவானது இந்தியாவில் தான் மிகவும் குறைவு என்றும் அதை வெற்றியுடன் உலக தரத்திற்கு இணையாக செய்கின்றது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
இதன் அறிகுறிகள் ஒருவருக்கு ஒருவர் வேறுபடும் மற்றும் இது மற்ற அடிப்படை காரணங்களைச் சார்ந்து உள்ளது. பிஎம்டி செயல்முறை செய்வதற்கு முன்பு தனிப்பட்ட நபர்களில் காணப்படும் சாதாரண அறிகுறிகள் பின்வருமாறு:
- பலவீனம்.
- மன அழுத்தம்.
- வலி.
- குமட்டல்.
- பதட்டம்.
- தூக்க குறைபாடு.
- பசி குறைபாடு.
- மூச்சு விடுதலில் சிரமம்.
- கைகளில் உணர்ச்சியின்மை.
- தோல் மற்றும் நகங்களில் மாற்றம்.
- வீக்கம் அல்லது வாய்ப்புண்கள்.
- எளிதாக காயமடைதல்.
- அடிக்கடி வரும் நோய்த்தொற்று.
- இரத்த சோகை.
இது யாருக்கு தேவை?
பின்வரும் நோய்கள் மற்றும் கோளாறுகள் உள்ள நபர்களுக்கு இந்த பிஎம்டி செயல்முறை தேவைப்படலாம்.
- புற்றுநோய்கள், லுகேமியா, லிம்போமா, மற்றும் மைலோமா போன்றவை.
- குறைப்பிறப்பு இரத்த சோகை (அப்ளாஸ்டிக் அனீமியா).
- குருதியழிவுச் சோகை.
- அரிவாள் உயிரணு இரத்தச்சோகை (சிக்கில் செல் நோய்).
- திட கட்டிகள்.
- உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை (அதன் செயல்பாடு உங்கள் உடலைப் பாதுகாப்பது) பாதிக்கக்கூடிய மற்ற நோய்களின் நிலைகள்.
இது எப்படி செயல்படுத்தப்படுகிறது?
பிஎம்டி செயல்பாட்டிற்கு முன்பு உங்கள் மருத்துவர் பல்வேறு இரத்த பரிசோதனைகளை மேற்கொண்டு உங்கள் இரத்த அணுக்களின் எண்ணிக்கையை நிர்ணயிப்பார். அதனுடன் இதய பரிசோதனை, நுரையீரல் பரிசோதனை மற்றும் பயாப்ஸி (இதில் திசுக்கள் எலும்புகளிலிருந்து எடுக்கப்பட்டு ஏதாவது கோளாறு உள்ளதா என்று ஆராயப்படுகிறது) ஆகியவை பிஎம்டி செயல்முறை தேவையா என்பதை நிர்ணயிக்கின்றது.
மயக்க மருந்து கொடுக்கப்பட்டு அந்த பஞ்சு போன்ற திசு பொருத்தமான கொடையாளியிடம் (டோனர்) இருந்து ஒரு ஊசியின் மூலம் பெறப்படுகிறது. பிரசவத்தின் பொழுது தொப்புள் கொடியில் இருந்து எடுக்கப்படும் ஸ்டெம் செல் கூட அந்த குழந்தையின் எதிர்கால அறுவைசிகிச்சைக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். ஒரு ஆரோக்கியமான கொடையாளி மருத்துவமனையை விட்டு ஒரே நாளில் வெளியேறலாம் மற்றும் ஒரே வாரத்தில் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம்.
பிஎம்டி - செயல்முறைக்கு முன்பு நீங்கள் வேதியல் உணர்விகள் மற்றும் கதிர்வீச்சின் மூலம் உங்கள் எலும்பு மஜ்ஜையில் உள்ள ஆரோக்கியமில்லாத தண்டு அணுக்களை அழிக்க சிகிச்சை அளிக்கப் படுவீர்கள். இது கொடையாளியிடமிருந்து பெறப்படும் தண்டு அணுக்களை உங்கள் உடம்பு நிராகரிக்காமல் ஏற்றுக் கொள்ளச் செய்யும்.
பிஎம்டி - என்பது அறுவை சிகிச்சை அல்ல இது இரத்த மாற்றத்தை போன்றது. தண்டு அணுக்கள் உங்களின் நரம்பில் ஏற்றப்படும், அந்த அணுக்கள் சுழற்சியின் மூலமாக எலும்பை சென்றடைந்து இரத்த அணுக்களை உண்டாக்க தொடங்கும். இரத்த அணுக்களை உண்டாக்க தூண்டும் வளர்ச்சி காரணிகளையும் சேர்த்து நரம்புகளில் செலுத்துவார்கள். இரத்த சோதனையின் ஒழுங்கான கண்காணிப்பின் மூலம் பிஎம்டி செயல்முறை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதா என்று முடிவு செய்யப்படும்.