சிறுநீர்ப்பை நீரூட்டம் என்றால் என்ன?
சிறுநீர்ப்பை நீரூட்டம் என்பது சுத்தநீர் அல்லது சாதாரண உப்புநீரை வைத்து சிறுநீர்ப்பையைக் கழுவும் ஓரு செயல்முறை ஆகும். இது இரத்த உறைவு உருவாகாமல் தடுத்து சிறுநீர் ஓட்டத்தை சரி செய்கிறது, குறிப்பாக சிறுநீர்ப்பையில் அறுவைசிகிச்சை மேற்கொண்ட பின்னர் இது நன்றாக உதவுகிறது. சிறுநீர் நீக்கக் குழாயில் அடைப்பு (இரத்த உறைவு, தொற்று, அழற்சி பொருட்கள் போன்றவை) ஏற்படுவதை தடுக்க சிறுநீர்ப்பை நீரூட்டம் உதவுகிறது.
இது எதற்காக செய்யப்படுகிறது?
சிறுநீர்ப்பையில் கடுமையான இரத்தப்போக்கு ஏற்படுகையில் மருத்துவர்கள் சிறுநீர்ப்பை நீரூட்டத்தை பரிந்துரைக்கின்றனர். இது முக்கியமாக சிறுநீர் ஓட்டத்தை தடுக்கும் இரத்த உறைவு ஏற்படாமல் இருக்க ஒரு தடுப்பு நடவடிக்கையாக செய்யப்படுகிறது. உட்செலுத்தப்பட்ட சிறுநீர் நீக்கக் குழாய் இருந்தும் சிறுநீர் ஓட்டத்தில் நாட்பட்ட மற்றும் குறுகிய கால தடைகள் உள்ள நோயாளிகளிடையே பல்வேறு அறிகுறிகள் காணப்படும்.
- வடிகுழாய் வழியாக சிறுநீர் வெளியேறாமல் இருப்பது.
- சிறுநீர்ப்பை நிறைந்ததால் அடிவயிறு வலி மற்றும் வடிகுழாயைச் சுற்றி திடீர் மற்றும் கடுமையான வலி.
- வடிகுழாயை சுற்றி சிறுநீர் கசிவு.
- நீடித்த வடிகுழாய் அடைப்பினால் அதிக வியர்வை, விரைவான இதயத் துடிப்பு அல்லது குறைந்த இரத்த அழுத்தம்.
யாருக்கு இந்த சிகிச்சை தேவை?
சிறுநீப்பை நீரூட்டத்தின் பிரதான நோக்கம் சிறுநீரகத்தின் உள்ளே இரத்த உறைவு ஏற்படுவதை தடுப்பது மற்றும் சிறுநீரின் ஓட்டத்தை சரிசெய்யக்கூடிய உட்செலுத்தப்பட்ட வடிகுழாயில் ஏற்படும் தடைக்கு சிகிச்சையளிப்பது ஆகும். சிறுநீர் ஓட்டத்தில் கடுமையான அல்லது நாள்பட்ட அடைப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் பின்வருமாறு:
- இரத்தப்போக்கு ஏற்படுத்தும் கடுமையான சிறுநீர்ப்பாதை தொற்று அல்லது சிறுநீர்ப்பை தொற்று.
- விரிவடைந்த புரோஸ்டேட் சுரப்பி.
- குறுகிய சிறுநீர்க்குழாய் அல்லது சிறுநீர்க்குழாய்ச்சார் குறுக்கம்.
- சிறுநீரக கல்.
- சிறுநீர்ப்பையில் வடிகுழாய் உட்செலுத்தும்போது ஏற்படும் அதிர்ச்சி அல்லது காயம். இதனால் இரத்தப்போக்கு ஏற்பட்டு இரத்த உறைவு ஏற்படலாம்.
- கோமா நோயாளிகள் மற்றும் சிறுநீர்ப்பையில் அதிகநாட்களாக வடிகுழாய் பயன்படுத்துபவர்கள்.
- ட்ரான்ஸ்-யுரெதிரால் ரீசெக்சன் ஆப் ப்ரோஸ்டேட் (டி.யு.ஆர்.பி) மற்றும் ஹோல்மியம் லேசர் ஈநுகிலியேஷன் ஆப் ப்ரோஸ்டேட் (ஹெச்.ஓ.எல்.ஈ.பி) போன்ற ப்ரோஸ்டேட் சுரப்பி சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள்.
- சிறுநீர்ப்ப்பை கட்டியின் ட்ரான்ஸ்-யுரெதிரால் ரீசெக்சன் (டி.யு.ஆர்.பி.டி) போன்ற சிறுநீர்ப்பை அறுவைசிகிச்சை மற்றும் ப்ரோஸ்டேட், சிறுநீர்ப்பை சம்பந்தப்பட்ட பிற சிகிச்சைகளை மேற்கொண்டவர்கள்.
- சிறுநீர்ப்பை புற்றுநோய்க்கான கதிர்வீச்சு சிகிச்சை.
இந்த சிகிச்சை எப்படி நடத்தப்படுகிறது?
சிறுநீர்ப்பை நீரூட்டம் அல்லது கழுவுதல் பொதுவாக சுத்தநீர் அல்லது சாதாரண உப்புநீர் பயன்படுத்தி செய்யப்படுகிறது. சில நேரங்களில் சிறப்பு வேதிமங்கள் அல்லது ஆண்டிபயாடிக் மருந்துகள் நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த செயல்முறை பொதுவாக 3 வழி வடிகுழாயின் உதவியுடன் மேற்கொள்ளப்படுகிறது, இது திரவத்தின் ஓட்டம் மற்றும் நீரூட்டத்திற்கு பயன்படுத்தப்படுகிறது, அதேபோல் ஒரே நேரத்தில் திரவம் நீர்ப்பைக்கு உள்ளே மற்றும் வெளியே செல்கிறது.
வயர்லெஸ் உணர்கருவிகளுடன் கூடிய சிறுநீர்ப்பை நீரூட்டம் சிகிச்சைக்கு சமீபத்திய வயர்லெஸ் தானியங்கி சாதனங்கள், சிறுநீர்ப்பை நீரூட்டம் அடிக்கடி தேவைப்படும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக மற்றும் பாதுகாப்பானதாக நிரூபிக்கப்பட்டுள்ளது, உதாரணமாக, விரிவடைந்த புரோஸ்டேட் சுரப்பி உள்ள நோயாளிகளுக்கு பயனளிக்கிறது.