பறவை காய்ச்சல் என்றால் என்ன?
பறவை காய்ச்சல், மருத்துவ ரீதியாக ஏவியன் இன்புளுயன்சா என குறிப்பிடப்பபடுகிறது. இது மனிதர்களுக்கு அரிதாக ஏற்படக்கூடிய ஒரு தொற்று ஆகும். பெயருக்கேற்றாற்போல், இது பறவைகளில் காணப்படும் ஒரு வைரஸ் தொற்று. இருப்பினும், அது மனிதர்களையும் பாதிக்கக்கூடியது. நோய்த்தொற்றுடைய நபருக்கு பலதரப்பட்ட ஃப்ளு வைரஸ் தாக்கப்பட்டது போல் அறிகுறி காணப்படும் மற்றும் கண்டிப்பாக சிகிச்சை தேவைப்படும். இந்தியாவில், பறவை காய்ச்சலால் நான்கு ஆயிரத்திற்கும் குறைவான நோயாளிகள் ஆண்டுதோறும் பாதிக்கப்படுகின்றனர்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
பறவை காய்ச்சலின் அறிகுறிகள் இன்புளுயன்சா அறிகுறியை போன்றவை. பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:
- தொண்டைப்புண் மற்றும் இருமல்.
- காய்ச்சல்.
- வயிற்றுப்போக்கு.
- தலைவலி.
- சுவாசத்தில் சிரமம்.
எப்போதாவது, குமட்டல் மற்றும் வாந்தி போன்றவற்றை அனுபவிக்கலாம். மாற்றாக, நோயாளிகளுக்கு வேறு எந்த அறிகுறிகளும் இல்லாமல், ஒரு கண் தொற்று மட்டுமே இருக்கலாம்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
பறவை காய்ச்சல் வைரஸில் இரண்டு வகைகள் உள்ளன, மனிதர்களில் ஏற்படும் மிகவும் பொதுவான வகை H5N1. இந்த தொற்று பறவைகள் மூலமாக கீழ்க்கண்ட வழிகளில் ஒன்றின் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது:
கோழிப்பண்ணை மேலாண்மை:
- பறவைகள் மற்றும் பறவை முட்டைகள் விற்கும் திறந்தவெளி சந்தைகளில், திடக்கழிவுகள் கொண்ட மாசுபடிந்த காற்றை சுவாசித்தல்.
- பாதிக்கப்பட்ட பறவைகளை தொடுதல்.
- பாதிக்கப்பட்ட பறவையின் எச்சம் விழுந்த நீரில் குளித்தல்.
பாதிக்கப்பட்ட பறவைகளில் இருந்து வரும் கறி மற்றும் முட்டைகளை முழுமையாக வேகவைக்காமல் உட்கொள்ளுதல் மூலம் இந்த தொற்று பரவலாம். முழுமையாக சமைத்த இறைச்சி அல்லது முட்டைகளை சாப்பிடுவது மனிதர்களுக்கு பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. இந்த தொற்று பொதுவாக ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு பரவுவதில்லை.
இதன் பரிசோதனை முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் யாவை?
பறவை காய்ச்சலுக்கான குறிப்பிட்ட சோதனை அனைத்து இடங்களிலும் பொதுவாக கிடைக்காது என்பதால் தொற்று நோய் கண்டறிதல் பொதுவான ஆய்வக பரிசோதனை மூலம் செய்யப்படுகிறது.
- மூக்கு மற்றும் தொண்டையில் இருந்து எடுத்த திரவ மாதிரிகள் ஆய்வு வைரஸை கண்டறிய உதவுகிறது.
- ஒரு முழுமையான இரத்த எண்ணிக்கை பரிசோதனை உடலில் தொற்று இருப்பதை உறுதிப்படுத்தும்.
- நுரையீரலின் ஆரோக்கியத்தை சரிபார்க்க மார்பக எக்ஸ்ரே செய்யப்படுகிறது.
பறவை காய்ச்சலுக்கான நிலையான சிகிச்சையானது நச்சுயிர் எதிரி (ஆண்டிவைரஸ்) மருந்துகளை உள்ளடக்கியது.
- அறிகுறிகள் தெரிய ஆரம்பித்த முதல் 48 மணி நேரத்திற்குள் மருந்து எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
- மனிதர்களில் காணப்படும் வைரஸ், மிகவும் பொதுவான நச்சுயிர் எதிர்ப்பு மருந்துகளுக்கு எதிர்ப்பை உருவாக்குகிறது, எனவே மாற்று மருந்துகள் பரிந்துரைக்கப்பட வேண்டும்.
- ஒரு தடுப்பு நடவடிக்கையாக, நோயாளியின் குடும்பத்திலுள்ள அனைத்து உறுப்பினர்களும் நோய் தாக்குதலுக்கான ஆய்வை மேற்கொள்ளவேண்டும், மேலும் அவர்கள் தொற்று தாக்கக்கூடிய சூழலிருந்து ஒதுங்கி இருக்கவேண்டும்.
- சில சந்தர்ப்பங்களில், நோயாளியிடமிருந்து நோய்த்தொற்று பரவுவதற்கான வாய்ப்புகளை தவிர்க்க அவர்கள் தனிமைப்படுத்தப்படலாம்.