மரபுவழித் தோல் அழற்சி என்றால் என்ன?
அடோபிக் டெர்மடைடிஸ் (மரபுவழித் தோல் அழற்சி) , எக்ஸிமா ( சிரங்கு ) என்றும் அழைக்கப்படுகிறது, இது அரிப்பு மற்றும் செதில் போன்ற தோல் தன்மை கொண்ட பொதுவான தோல் நிலை ஆகும். இது பொதுவாக பெரியவர்களை விட குழந்தைகளை அதிக அளவில் பாதிக்கிறது, மேலும் மீண்டும் வரக்கூடிய வாய்ப்பும் உண்டு. பிறந்த 6 மாதத்திலிருந்தே இந்த அழற்சி நோய் ஒருவரை தாக்கக்கூடும்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
- அரிப்புத் தோலழற்சியின் மருத்துவத் தோற்றம் நபருக்கு நபர் மாறுபடும், ஆனால் இது பொதுவாக வறண்ட தோல் மற்றும் அதிக அரிப்புடன் தோல் சிவப்பாக மாறுதல் போன்ற குணாதிசயங்களை கொண்டது .
- சொரிவதினால், தோல் எரிச்சல் மற்றும் இரத்த கசிவு ஏற்படுகிறது.
- இவை சீல் நிறைந்த வெடிப்புகளாகவே பெரும்பாலும் காணப்படுகின்றன, இது ஒரு நோய் தொற்றின் அறிகுறியாகும். ஒருவேளை தொற்று ஏற்பட்டிருந்தால், அது உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவ கூடும்.
- இருண்ட/நிறமிழந்த மற்றும் சுருங்கிய தோல், சீழ் நிறைந்த வெடிப்புகள், ஆகியவை மற்ற அறிகுறிகளாகும். கண்கள் மற்றும் உதடுகளை சுற்றி உள்ள பகுதிகள் இருண்டு காணப்படுகின்றன.
- இரவில் அரிப்புத் தன்மை அதிகமாக இருக்குமென்பதால் இது தூக்கச் சுழற்சியை பாதிக்கலாம்.
- அரிப்புத் தோலழற்சி என்பது ஆஸ்துமா, தூசியால் வரும் சளிக்காய்ச்சல் அல்லது பிற ஒவ்வாமைகளுடன் சேர்ந்து வரும் ஒரு நாட்பட்ட நிலையாகும்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
- இதற்கு குறிப்பிட்ட ஒரு காரணம் மட்டும் இல்லை என்றாலும், அரிப்புத் தோலழற்சியை தூண்டக்கூடிய பல ஆபத்தான காரணிகள் உள்ளன.
- இதற்கு மரபணு இணைப்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். ஒரே குடும்பத்தின் பல உறுப்பினர்கள் இந்த நோயால் பாதிக்ககூடும்.
- அதிகப்படியான மாசுபாடு உள்ள சூழலில் வாழ்வது, அல்லது மிகவும் வறண்ட மற்றும் குளிர்ந்த இடங்களில் வசிப்பது போன்றவை ஒருவரை இந்த நோய் தாக்க ஏதுவான நிலைகளாகும்.
- உணவு ஒவ்வாமை, மகரந்தம், கம்பளி ஆடைகள், தூசி, தோல் பொருட்கள் மற்றும் புகையிலை புகை ஆகியவை அரிப்புத் தோலழற்சியை தூண்டக்கூடிய பிற காரணிகள் ஆகும்.
இதன் பரிசோதனை முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் யாவை?
- எக்ஸிமா வை கண்டறிய தோலியல் மருத்துவர் மருத்துவ ரீதியாக உங்கள் தோலினை பரிசோதனை செய்வார்.சிவந்த, வறண்ட மற்றும் நமைச்சல் உடைய தோல் இந்த நிலைக்கு பொதுவான அறிகுறியாகும்.
- இது மருத்துவ பரிசோதனையில் தெளிவாக தெரியக்கூடிய மேற்பூச்சு நிலை என்பதால், இதற்கு இரத்த பரிசோதனை அல்லது இமேஜிங் தேவை இல்லை.
- உங்களுக்கு அல்லது உங்கள் குழந்தைக்கு தொடர்ச்சியான காய்ச்சல் அல்லது மற்ற குறிப்பிடத்தக்க அறிகுறிகள் இருப்பின் , உங்கள் மருத்துவர் ஒரு அடிப்படையான இரத்த பரிசோனைக்கு பரிந்துரைப்பார்.
- பிரச்சனையை முழுமையாக தீர்க்க முடியாது என்றாலும், ஹிஸ்டமின் எதிர்ப்பிகள் (ஒவ்வாமை எதிர்ப்பு மருந்துகள்) , நுண்ணுயிர்க்கொல்லிகள் மற்றும் ஸ்டீராய்டு களிம்புகள் போன்றவை நிவாரணம் பெற பயன்படுத்தப்படுகிறது.
- நோயின் தூண்டுகோள்களை அடையாளம் கண்டு, அதனை தவிர்த்தல், கடுமையான சோப்புகள் அல்லது தோல் பொருட்கள் மீது கவனம் கொள்ளுதல், எப்பொழுதும் நல்ல சுகாதாரத்தை பராமரிப்பது போன்றவை இந்த நிலை மீண்டும் மீண்டும் ஏற்படாமல் இருப்பதை தடுக்கக்கூடிய பிற வழிகள் ஆகும்.
- குளியலுக்குப் பின் உங்கள் குழந்தையின் சருமத்தை நன்றாக துடைக்க வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முறையாவது தோலினை ஈரப்படுத்த வேண்டும்.