சேற்றுப்புண் என்றால் என்ன?
சேற்றுப்புண் என்பது கால்களில் ஏற்படும் ஒரு பூஞ்சை தொற்று நோய் ஆகும். கால்விரல்களுக்கு இடையில் உள்ள தோலை இது பொதுவாக பாதிக்கின்றது. இது விளையாட்டு வீரர்களிடத்தில் காணப்படும் பொதுவான நிகழ்வு என்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. இந்த தொற்றுக்கு காரணமாக இருக்கும் பூஞ்சை டினியா (வளையப்படை) ஆகும், எனவே இது டினியா பெடிஸ் என்றும் அழைக்கப்படுகிறது.
இதன் முக்கிய அறிகுறிகள் என்ன?
- சேற்றுப்புண்ணால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் கால்விரல்களுக்கு இடையில் அரிப்பு மற்றும் எரிச்சல் உணர்வைக் கொண்டிருப்பார்.
- தோல் வறண்டு, செதிள்கள் போன்ற தோற்றத்துடன் சிவப்பாக மாறுகிறது.
- அரிதாக, லேசான இரத்தப்போக்குடன் பாதத்தில் கொப்புளங்கள் அல்லது புண்களும் இருக்கலாம்.
- நகங்கள் காய்ந்ததாக மற்றும் உடையக்கூடியதாக தோன்றும்.
- பாதிக்கப்பட்ட பகுதியை மீண்டும் மீண்டும் தொடுவதன் மூலம், இந்த நோய்த் தொற்று கைகள் மற்றும் பிற பகுதிகளுக்கு பரவுகிறது.
இதன் முக்கிய காரணங்கள் யாவை?
- மைக்ரோஸ்போரோம் என்ற பூஞ்சைகளால் ஏற்படக்கூடிய தொற்றுநோயானது சேற்றுப்புண்ணிற்கு காரணமாக அமைகிறது. இது ஒரு தொற்றுநோய் என்பதால், தொடுவதன் மூலம் அல்லது பாதிக்கப்பட்ட காலுறை/சாக்ஸ், தரைவிரிப்புகள் போன்றவற்றால் பரவக்கூடும்.
- அரிதாக, பாக்டீரியா மற்றும் சொரியாசிஸ் (காளாஞ்சகப்படை) இந்த தொற்றுக்கு காரணமாக இருக்கலாம்.
- ஈரமான, அசுத்தமான பாதம் அல்லது பராமரிப்பற்ற நகங்கள், ஒருவரை தொற்றினால் சுலபமாக பாதிப்படையச் செய்கிறது.
- பொது இடங்களில் வெறுங்காலில் நடத்தல் மற்றும் காலுறை/சாக்ஸ் பகிர்வு போன்ற சில ஆபத்தான காரணிகள் சேற்றுப்புண்ணுடன் தொடர்புடையதாக உள்ளன. பகிரப்பட்ட அலுவலக இடங்கள், உடற்பயிற்சி நிலையங்கள் மற்றும் நீச்சல் குளங்கள் ஆகியவை தொற்று பரவுகின்ற சில பகுதிகளாகும்.
- நீரிழிவு நோய் அல்லது நோய்த்தடுப்பாற்றல் குறைந்த நிலைமைகளாலான எய்ட்ஸ் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இத்தகைய தொற்றுநோயால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புள்ளது.
- அதிகப்படியான வியர்வையும் இந்த நோய்க்கான ஒரு பங்களிப்பு காரணி ஆகும்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது?
- கால்களை பரிசோதனை செய்தல், நோயை கண்டறிய மருத்துவருக்கு உதவியாக இருக்கிறது. சில நேரங்களில், காரணம் நிச்சயமற்றதாக இருந்தால், உறுதி செய்வதற்காக பாதங்களில் தோல் திசு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
- இந்த நிலைமைக்கான சிகிச்சை பின்வருமாறு:
- மருந்து கடைகளில் கிடைக்கப்படும் பூஞ்சை எதிர்ப்பு மருந்துகள். இந்த மருந்துகள் நோயின் தீவிரத்தை பொறுத்து, 4 வாரங்கள் வரை பரிந்துரைக்கப்படலாம்.
- இதற்கான காரணம் பாக்டீரியா என்றால், பாக்டீரியா எதிர்ப்பு மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
- பொது இடங்களில், கால்களை சுத்தமாக மற்றும் பாதுகாப்பாக வைத்தல் மிகவும் முக்கியமானது. பூஞ்சை முற்றிலும் அகற்றப்படாவிட்டால் தொற்றுநோய் மீண்டும் ஏற்படலாம்.
சுய பாதுகாப்பு
- ஈரமான அல்லது அழுக்கான காலுறை மற்றும் காலணிகள் அணிவதை தவிர்க்கவும்.
- வீட்டிற்கு வந்த பிறகு, குறிப்பாக பொது இடங்களில் இருந்து வந்த பிறகு உங்கள் கால்களை சுத்தம் செய்யவும்.
- துண்டுகள், துடைக்கும் துணிகள், காலுறைகள் முதலியனவற்றை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
- உங்கள் பாதங்களை பாதுகாக்க நன்கு கால்களை மூடியிருக்கக்கூடிய காலணிகள் (ஷூ) அல்லது செருப்பை அணியுங்கள்.