அனாபிளாஸ்டிக் அஸ்ட்ரோசிட்டமா என்றால் என்ன?
அனாபிளாஸ்டிக் அஸ்ட்ரோசிட்டமா (அனபிளாஸ்டிக் நரம்பு நார்த்திசுக் கட்டி) என்பது மூளை புற்றுநோயின் மிக அசாதாரணமான ஒரு வகையாகும். மூளையில் அஸ்ட்ரோசிட்டஸ் என்று அழைக்கப்படும் குறிப்பிடத்தக்க நட்சத்திர வடிவ செல்கள் உள்ளன. அஸ்ட்ரோசிட்டஸ் மற்ற மூளை செல்களுடன் இணைந்து மூளை மற்றும் தண்டுவடம் சுற்றியுள்ள நரம்பு செல்களை சுற்றி காப்பாற்றுகிறது. இந்த செல்கள், "க்ளியா செல்" என்று அழைக்கப்படுகிறது, இவை ஒன்றிணைந்து க்ளியா திசுக்களை உண்டாகின்றன; இவ்வகை செல்களில் ஏற்படும் புற்றுநோயின் பெயர் கிளியோமா ஆகும். அஸ்ட்ரோசிட்டஸ் இல் ஏற்படும் கட்டியின் பெயர் அஸ்ட்ரோசிட்டமா. அனாபிளாஸ்டிக் அஸ்ட்ரோசிட்டமா என்பது மூன்றாம் நிலை கட்டியாகும், மேலும் அது நான்காம் நிலையை அடையும்போது குளோபிளாஸ்டோமா மல்டிஃபார்ம் என்றழைக்கப்படுகிறது. குளோபிளாஸ்டோமா என்பது மெதுவாக வளரும்போது வீரியம் குறைந்தும், வேகமாக வளர்ச்சி அடையும்போது வீரியம் அதிகரித்தும் காணப்படுகிறது. துரதிஷ்டவசமாக, அனாபிளாஸ்டிக் அஸ்ட்ரோசிட்டமா குணப்படுத்த முடியாத நோயாகும், இருப்பினும் அதன் வளர்ச்சியை கட்டுப்படுத்த இயலும்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
மூளை தனிப்பட்ட செயல்பாடுகளை கட்டுப்படுத்தக்கூடிய குறிப்பிட்ட அர்ப்பணிப்பு பகுதிகளை கொண்டுள்ளது; எனவே, இந்த நோய்க்கான அறிகுறிகள், கட்டியின் அளவு மற்றும் இருப்பிடத்தை பொறுத்தது. பொதுவாக, பின்வரும் அறிகுறிகள் காணப்படுகின்றன: தலைவலி, வாந்தி, மயக்கம், குண மாற்றம், மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள், கைகளிலும் கால்களிலும் பலவீனம், வலிப்பு, ஒருங்கிணைப்பு சிக்கல்கள் மற்றும் பார்வை பிரச்சினைகள்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
இத்தகைய கட்டிகள் ஏற்படுவதற்கான சரியான காரணங்கள் இன்னும் அறியப்படவில்லை. கட்டிகள் வளர்வதற்கு காரணமாக இருக்கக்கூடிய செல்களில் ஏற்படும் மாற்றங்களின் காரணிகளை பற்றி ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர்.
பின்வருவன ஒரு முக்கிய பங்கு வகிக்கும் காரணிகள் ஆக இருக்கக்கூடும்:
- மரபணு பிறழ்ச்சி.
- நச்சுகள், இரசாயனங்கள் மற்றும் தீங்குவிளைவிக்கும் கதிர்வீச்சு ஆகியவற்றின் வெளிப்பாடு போன்ற சுற்றுச்சூழல் காரணிகள்.
- நோய் எதிர்ப்பு திறனில் ஏற்படும் மாற்றங்கள்.
- உணவுமுறை.
- மன அழுத்தம்.
அஸ்ட்ரோசிட்டமா சில மரபணு கோளாறுகளில் அதிக தாக்கங்களுடன் உண்டாகிறது, குறிப்பாக, நியூரோஃப்ரோமஸ் வகை I,டர்பெரோஸ் ஸ்களீரோசிஸ், லி-ஃப்ரெமனி சிண்ட்ரோம் மற்றும் டர்கோட் சிண்ட்ரோம் போன்றவை.
இதனை கண்டறியும் முறை மற்றும் சிகிச்சை முறைகள் யாவை?
இந்த நிலையை கண்டறிதல் என்பது கடினமானது. இது தனிப்பட்ட, திட்டமிட்ட மருத்துவ பரிசோதனையின் விரிவான மருத்துவ வரலாறு மற்றும் பல்வேறு வகையான இமேஜிங் நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. விரிவாக மூளை கட்டமைப்புகளை ஆய்வு செய்ய மற்றும் அளவு, இடம், மற்றும் நீட்டிப்பு அடிப்படையில் கட்டியை மதிப்பீடு செய்து, மிகவும் பயனுள்ள சிகிச்சை அளிக்க உதவும் வகையில், மேற்கூறிய அனைத்தையும் செய்வது அவசியமானது.
குணப்படுத்த முடியாததாக இருப்பினும், அனாபிளாஸ்டிக் அஸ்ட்ரோசிட்டமா கட்டி மேலும் வளர்வதை தடுக்க இயலும். மூன்று அடிப்படை சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன, அவை உறுப்பு நீக்க அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை, மற்றும் கீமோதெரபி ஆகிய இந்த சிகிச்சைகள் தனித்தனியாகவோ, ஒன்றிணைந்தோ நோயாளியின் உடல்நிலைக்கு ஏற்றாற்போல் அளிக்கப்படுகிறது.
மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார வல்லுநர்கள் அடங்கிய ஒரு குழு, பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு நபருக்கு எவ்வாறு சிகிச்சையளிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கின்றனர். அவை பின்வருமாறு:
- இடம், அளவு, நீட்டிப்பு, கட்டியின் பரவல் மற்றும் வீரியத்தின் அளவ.
- நபரின் வயது மற்றும் ஆரோக்கிய நிலை.
- மருத்துவ வரலாறு, மற்றும் பிற முரண்பாடுகள்.
கட்டிகளை அறுவை சிகிச்சை செய்து அகற்றுவது ஆரம்பகட்ட சிகிச்சையாக மேற்கொள்ளப்படுகிறது, அதனை தொடர்ந்து கதிர்வீச்சு மற்றும் கீமோதெரபி ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன. அறுவைசிகிச்சை சாத்தியமில்லாத சமயங்களில், நேரடியாக கதிர்வீச்சு சிகிச்சை ஆரம்பிக்கப்படுகிறது.
டெமோஸோலமைடு (டெமோடார்) என்பது உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் (எஃப்.டி.ஏ) அங்கீகரிக்கப்பட்ட ஒரே ஒரு கீமோதெரபிடிக் ஏஜென்ட் ஆகும். இந்த சிகிச்சை முறை குழந்தைகளுக்கு ஏற்றதல்ல, பெரியவர்களுக்கு மட்டுமே பொருந்தகூடியது.