ஆசனவாய் புற்றுநோய் - Anal Cancer in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

November 21, 2018

March 06, 2020

ஆசனவாய் புற்றுநோய்
ஆசனவாய் புற்றுநோய்

ஆசன வாய் புற்றுநோய் என்றால் என்ன?

ஆசன வாய் புற்றுநோய் என்பது இரைப்பை குடல் அமைப்பின் ஒரு அரிய வகை புற்றுநோய் ஆகும். இது இரைப்பை குடல் புற்றுநோய்களில் ஒரு சிறிய சதவீதத்தில் (1.5%) ஏற்படுகிறது, ஆனால், அதன் நிகழ்வில் நிலையான வளர்ச்சி ஏற்பட்டு இருப்பதற்கான சான்றுகள் உள்ளன. ஆசன வாய் புற்றுநோய் என்பது ஆசனவாய் அல்லது (குத) குடல் கால்வாய், மலக்குடலின் இறுதி பகுதியில் ஏற்படும் புற்றுநோய் ஆகும்.

ஆசன வாய் புற்றுநோயின் முக்கிய அறிகுறிகள் யாவை?

  • பொதுவான அறிகுறிகள்:
    • ஆசன வாயிலில் வலி மற்றும் இரத்த போக்கு.
    • பவுத்திர மூலம் (குடல் கால்வாய் மற்றும் இடுப்புச் சருமத்திற்கு இடையில் உள்ள அசாதாரணமான குறுகிய குடைவு-வடிவ இணைப்பு) அல்லது வெண்படல் (தடித்த மற்றும் அபாயகரமான வெள்ளை படலங்கள்) இருத்தல்.
    • உடல் பரிசோதனையின் போது எளிதில் கண்டுபிடிக்கப்படக்கூடிய நிணநீர்க்கணு வீக்கம்.
    • ஆசன வாயின் விளிம்பில் ஏற்படும் புற்று நோயானது, வெளிப்புறம் வளைந்த, தடித்த (ஒரு உறுதியான அடித்தளத்துடன்) உயர்த்தப்பட்ட விளிம்புகளை ஏற்படுத்தக்கூடிய அல்சர் (புண்) உடன் வெளிப்படுகிறது.
  • அசாதாரண அறிகுறிகள்:
    • ஆசன வாய் பகுதியில், கட்டி தோன்றுவது.
    • நமைத்தல் மற்றும் அரிப்புடன் கூடிய உதிர போக்கு.
    • மலப்போக்கை கட்டுப்படுத்தி, ஆசனவாய் கட்டுப்பாடிழப்பிற்கு வழிவகுக்கக்கூடிய தசை வலயத்தின் செயலிழப்பு (சுருக்குத்தசை) ஏற்படுதல்.
    • கல்லீரல் விரிவடைதல்.
    • முதன்மை ஆசனவாய் புற்றுநோய் தொலைதூரம் பரவுதல்.

ஆசனவாய் புற்றுநோயின் முக்கிய காரணங்கள் யாவை?

  • மிகவும் பொதுவான காரணம் 
    பாலியல் ரீதியாக பரவும் நோய்களில் ஒன்றான, மனித பாப்பிலோமாவைரஸ் தொற்று (ஹெச்.பி.வி), ஆசனவாய் புற்றுநோயுடன் அதிக தொடர்புடையதாக உள்ளது.
  • ஆபத்தான காரணிகள் பின்வருமாறு:
    • குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி
      • எயிட்ஸ்.
      • குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி அல்லது  நாட்பட்ட குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி.
    • வயது மற்றும் பாலினம்
      வயது முதிர்ந்தவர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் இது மிகவும் பொதுவானது.
    • மருத்துவ நிலைகள்
    • வாழ்க்கை முறை
      • புகை பிடித்தல்.
      • பலருடன் உடலுறவு கொள்ளுதல்.
      • ஓரினச்சேர்க்கை, குறிப்பாக ஆண்கள் மத்தியில்.

ஆசனவாய் புற்றுநோய் எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது?

  • நோய் கண்டறிதல்
    மருத்துவ விளக்கம் மற்றும் அறிகுறிகளின் அடிப்படையில் மட்டுமே ஆசனவாய் புற்றுநோய் கண்டறியப்பட முடியாது. புற்றுநோயை மதிப்பீடு செய்வதற்காக, மயக்க மருந்தின் கீழ் உடல் பரிசோதனை செய்வதுடன், ஆசனவாய் புற்றுநோயை கண்டறிவதற்கான பின்வரும் சோதனைகளையும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்:
    • எண்டோ-அனல் அல்ட்ராசவுண்ட் இமேஜிங்.
    • காந்த அதிர்வு விம்பங்கள் (எம்.ஆர்.ஐ).
    • சிடி ஸ்கேன் / பாஸிட்ரான் எமிஷன் டோமோகிராபி (பி.இ.டி) ஸ்கேன்.
  •  சிகிச்சை
    • ஆசனவாய் புற்றுநோய்க்கான முதன்மையான சிகிச்சை, பெரும்பாலான சந்தர்ப்பங்களில், கீமோதெரபி (வேதிச்சிகிச்சை) உடன் கூடிய அல்லது கீமோதெரபி இல்லாத கதிரியக்க சிகிச்சை (ரேடியோதெரபி) ஆகும். வயதான மற்றும் பலவீனமான நோயாளிகளுக்கு, கீமோதெரபி மற்றும் ஆண்டிபயாடிக் நுண்ணுயிர்க்கொல்லி நோய்த்தடுப்பு மாற்றியமைப்பது என்பது அவசியமானது.
    • ரேடியோதெரபியின் (கதிரியக்க சிகிச்சை) குறைபாடு என்பது ரேடியோநெக்ரோசிஸில் (கதிர்வீச்சு காரணமாக திசு சேதமடைதல் அல்லது இறத்தல்) உள்ளது, இதன் காரணமாகவே அறுவை சிகிச்சை பாதுகாப்பான சிகிச்சை முறையாக மாறுகின்றது. வலிய தாக்குதலுடைய அல்லது உயர்ந்த புனர் நிகழ்வு விகிதத்தை கொண்ட புற்றுநோய்க்கு, கீழ் வயிறு கரைவுடப் பகுதியை அப்புறப்படுத்துதல் (ஆசனவாயின் நீக்கம், பெருங்குடல் மற்றும் மலக்குடலின் ஒரு பகுதி) மற்றும் சிறு கட்டிகளுக்கு அதனை மட்டும் அப்புறப்படுத்துதல் என்பதே தரமான சிகிச்சையாக விளங்குகின்றது.
    • கவட்டை நிணநீர்க்கணுவின் மேலாண்மை கதிர்வீச்சு சிகிச்சையை உள்ளடக்கியது. கதிர்வீச்சு சிகிச்சையில்  பின்வாங்குதல் அல்லது தோல்வி ஏற்படும் போது, நிணநீர்க்கணுவின் அறுவை (உறுப்பு நீக்க) சிகிச்சை தேவைப்படுகிறது.
    • மீண்டும் மீண்டும் தோன்றக்கூடிய ஆசனவாய் புற்றுநோய்களுக்கு, கோலோஸ்டமி (பெருங்குடல் அகற்றுதல்) உடன் இணைந்து கீழ் வயிறு கரைவுடப் பகுதியை அப்புறப்படுத்துதலும் தேவைப்படுகின்றது.
    • உட்புற-செயல்பாட்டு கதிரியக்க சிகிச்சை மற்றும் ப்ரெச்சியெரபி (கதிரியக்க உள்வைப்புகளை செருகுவது) ஆசனவாய் புற்றுநோய் சிகிச்சைக்கு பிந்தைய, மறுநிகழ்வு வாய்ப்புகளை குறைக்கின்றன.
    • Other trஒளிக்கதிர் (போட்டோடைனமிக்) (குறிப்பிட்ட அலைநீளத்தை உடைய ஒளியை பயன்படுத்தி) சிகிச்சை மற்றும் நோய் எதிர்ப்பு (இம்முனோ சிகிச்சை) ஆகியவை இச்சிகிச்சைக்கான மற்ற தேர்வுகளாக இருக்கும்.



மேற்கோள்கள்

  1. Dr. Sajad Ahmad Salat, Dr. Azzam Al Kadi. Anal cancer – a review. Int J Health Sci (Qassim). 2012 Jun; 6(2): 206–230. PMID: 23580899
  2. Americas: OMICS International. Anal Cancer . [internet]
  3. Robin K.S Phillips,Sue Clark. Colorectal Surgery. Elsevier Health Sciences, 2013;346 pages
  4. Mayo Foundation for Medical Education and Research. Anal cancer.[internet]
  5. Cancer Reserch UK. [internet];Risks and causes of anal cancer