சுருக்கம்
அமிலதன்ம்மை (அசிடிட்டி) என்பது வயது மற்றும் பாலினம் கருதாமல் உலகளாவிய ரீதியில் பல மக்கள் அனுபவிக்கும் ஒரு பொதுவான நிகழ்வு. மார்பு மற்றும் அருகிலுள்ள பகுதிகளில், ஒரு பிரத்யேகமாக எரிச்சல் உணர்வு மூலம் இதை கண்டறியலாம். சில சமயங்களில் அதனால் லேசான அல்லது மிதமான வலியுடன், வயிற்றில் எரிச்சல் மற்றும் உறுத்தல் ஏற்படுகிறது. ஆராய்ச்சியின்படி அமிலத்தன்மைக்கு முக்கிய காரணிகளில் ஒன்று ஆசிட் ரிஃப்ளக்ஸ் ஆகும். ஆசிட் ரிஃப்ளக்ஸ் என்பது வயிற்று அமிலங்களின் திரும்பி உணவுக்குழாய்க்குள் (ஈசொபாகஸ்) செல்வதாகும்.