மூளையுறை அழற்சி (மெனிங்கிடிஸ்) என்றால் என்ன?
மூளை உரை என்பது மூளை மற்றும் தண்டு வடத்தை மூடி இருக்கும் பாதுகாப்பு பொறுப்பை கொண்ட திசுவினாலான அடுக்குகள் ஆகும். இந்த அடுக்குகளிலும், சுற்றியுள்ள திரவங்களிலும் ஏற்படும் நோய்த்தொற்றின் விளைவால் மண்டையோட்டில் வீக்கம் மற்றும் அழற்சி ஏற்படுகிறது. இந்நிலையை சரியான நேரத்தில் கண்டறியவும் சிகிச்சை அளிக்கவும் தவறிவிட்டால் இது வாழ்க்கைக்கு -அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும்.
அதன் முக்கிய அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் என்ன?
இந்நோயின் ஆரம்பகட்ட அறிகுறிகளானது கழுத்துப் பிடிப்பு, காய்ச்சல் மற்றும் குழப்பத்துடன் கூடிய குமட்டல், வாந்தி மற்றும் தலைவலி ஆகியவகைகளும் அடங்கும்.
- பிற அறிகுறிகளானது வெளிச்சத்திற்கான உணர்திறன், எரிச்சல்தன்மை மற்றும் குறைந்த பசியின்மை.
- இது மேலும் முன்னேற்றமடைந்து உணர்வுநிலைகளில் மாற்றம், பலவீனமான மூளை செயல்பாடுகள் மற்றும் வலிப்புகள் என விளைவிக்கக்கூடும்.
- பாக்டீரியல் மூளைக்காய்ச்சல் என்பது தீவிரமானதாக இருப்பதோடு தொற்றுநோய் வகை மூளைக்காய்ச்சல் ஆகும். தோல் தடித்தல் என்பது ஒரு வகை தாமதமான பாக்டீரியல் மூளைக்காய்ச்சலின் அடையாளமாகும். மூளை பாதிப்பு, காது கேட்பது மற்றும் பார்வை இழப்பு ஆகியவை மூளைக்காய்ச்சல் தொடர்பான நீண்ட- கால அறிகுறிகளாகும்.
- வைரல் மூளைக்காய்ச்சல் அரிதாக வாழ்க்கை -அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய தொற்றுநோயாகும், ஆனால் தலைவலி மற்றும் நினைவக பிரச்சினைகள் போன்ற நீண்டகால அறிகுறிகளுக்கான தாக்கத்தை இது ஏற்படுத்தக்கூடியது.
- பூஞ்சை மூளைக்காய்ச்சல் என்பது அரிதானது, மேலும் இது புற்றுநோய் அல்லது எய்ட்ஸ் போன்ற மிகக் குறைவான இம்மியூனிட்டி உள்ளவர்களிடத்திலேயே காணப்படுகிறது.
அதன் முக்கிய காரணங்கள் என்ன?
மூளையுறை அழற்சி என்பது தொற்றக்கூடியதாகவோ அல்லது தொற்றாததாகவோ இருக்கலாம்.
தொற்றக்கூடிய மூளையுறை அழற்சி நுண்ணுயிர்களால் ஏற்படுவதாகும், அவை இரத்த ஓட்டத்தில் பரவுவதன் மூலம் மூளை அல்லது தண்டுவடத்தை அடையும். இந்த நுண்ணுயிர்கள் மூளை உரை மற்றும் அதை சுற்றியிருக்கும் திரவத்தை தொற்றுவதனால் அழற்சி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்துகின்றது. மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய சில நுண்ணுயிரிகள் பின்வருமாறு:
- பாக்டீரியா - ஸ்ட்ரெப்டோகாகஸ் நிமோனியே, நெசீரியா மெனிசிடிடிடிஸ் / மெனிங்கிடிடிஸ்.
- வைரஸ் - இன்புளுவன்சா வைரஸ், தட்டம்மை வைரஸ், எச்.ஐ.வி மற்றும் எக்கோவைரஸ்.
- பூஞ்சைகள் - கேண்டிடா அல்பிகன்ஸ், க்ரிப்டோகாக்கஸ் நியோஃபார்மான்ஸ் மற்றும் ஹிஸ்டோபிளாஸ்மா.
தொற்று ஏற்படாத காரணங்கள் பின்வருமாறு:
இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?
இந்நிலையை ஆரம்பகட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சையளிப்பதனால் மூளையில் ஏற்படும் பாதிப்பு மற்றும் இறப்பினை தவிர்க்க முடியும்.
பின்வரும் பரிசோதனைகள் மூளைக்காய்ச்சலை கண்டறிவதற்கு அத்தியாவசியமாக கருதப்படுகின்றன:
- முதுகுத் தண்டுவட துளையிடுதல் – மூளை தண்டுவட திரவமானது நுண்ணுயிரியல் கலாச்சாரம், சி.பி.சி, புரதம் மற்றும் குளுக்கோஸ் அளவுகள் மற்றும் சி-எதிர்வினை புரதம் (தொற்று மார்க்கர்) ஆகியவைகளுக்கு அனுப்பப்படுவதன் மூலம் இந்நிலையை கண்டறிந்து உறுதிப்படுத்த உதவுகிறது.
- உயர்ந்த இரத்த வெள்ளை அணு எண்ணிக்கைகள்.
- தலையின் சி.டி.ஸ்கேன் அறிக்கைகள்.
- மெனிங்கிடிஸ் தடிபிற்கான பாசிட்டிவ் கண்ணாடி சோதனை.
சிகிச்சை முறைகள் பின்வரும் நடவடிக்கைகளை உட்கொண்டது:
- பாக்டீரியல் மூளைக்காய்ச்சல் என்பது நரம்பு வழியே ஆண்டிபயாடிக்குகளை செலுத்துவதன் மூலம் உடலிலிருக்கும் தொற்றை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியாக்களை அகற்ற பயன்படுகிறது.
- பூஞ்சை மூளைக்காய்ச்சல் என்பது பூஞ்சை எதிர்ப்பு ஏஜெண்டுகளை கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றது.
- வைரல் மூளைக்காய்ச்சல் என்பது தானாகவே குணமடையக்கூடியது, ஆனால் இது நரம்பு வழியே வைரல் தடுப்பு மருந்துகளைக் கொடுப்பதன் மூலமும் சிகிச்சை அளிக்கப்படலாம்.
- மெனிங்கோகாகல் தடுப்பூசி மற்றும் ஹீமோபிலஸ் இன்ஃப்ளூயன்ஸா வகை பி தடுப்பூசி போன்ற தடுப்பூசிகள் சில வகையான மூளைகாய்ச்சலுக்கு எதிராக பாதுகாப்பிற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
- நல்ல தனிப்பட்ட சுகாதாரத்தினை பராமரிப்பதன் மூலம் மற்றும் இந்த நோய் நிகழ்வுகள் உள்ள இடங்களுக்கு பயணம் செய்வதற்கு முன்னர் தடுப்பூசி போட்டுக்கொள்தலும் மூளைக்காய்ச்சலை தடுக்க உதவுகின்றது.