காய்ச்சல் மிதமானதாக மற்றும் திரும்ப வரக் கூடியதாக இல்லாமல் இருந்தால், அது தானாகவே குறைந்து விடும் என்பதால், எந்த சிகிச்சையும் தேவைப்படுவதில்லை. காய்ச்சல் என்பது, நுண்ணுயிரிகளை எதிர்த்துப் போராட, உடலின் ஒரு பாதுகாப்பு வழிமுறையாகும். உடலின் வெப்பநிலை ஏற்ற இறக்கத்தால், நுண்ணுயிரிகளால் உயிர் வாழ முடியாது. காய்ச்சல் அல்லது அதிலிருந்து எழும் அறிகுறிகளை சமாளிக்க, எடுக்கப்படக் கூடிய சில எளிய படிகள் உள்ளன. அவை:
- உங்கள் உடலைக் குளிர்ச்சியடைய வைக்கவும், நீர் வற்றிப்போதலைத் தடுக்கவும் போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள்.
- காய்ச்சல் குறைகிற வரை, செரிமானமாக எளிதான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
- போதுமான அளவு ஓய்வு எடுங்கள்.
- வெதுவெதுப்பான தண்ணீரில் குளியுங்கள்.
- குளிர்ந்த அழுத்தங்களைக் கொடுங்கள். உடலின் வெப்பநிலையைக் குளிர்ச்சியடைய வைக்க, ஈரமான துணியை நெற்றியின் மீது வையுங்கள்.
- சுத்தமான காற்று பரவுவதற்காக, ஒரு மின்விசிறியை ஓட விடுங்கள்.
பாராசிட்டமால் போன்ற ஓ.டி.சி (மருந்துக்கடையில் வாங்கும்) மருந்துகள், மிதமான காய்ச்சலைக் குறைக்க, திறனுள்ளதாக இருக்கக் கூடும். ஆனால், இரத்தப் பரிசோதனை மூலம் நோய் கண்டறிதலில், ஒரு நோய்த்தொற்று இருப்பது வெளிப்பட்டால், அதன் பின், மருத்துவரின் அறிவுரையின் அடிப்படையில் பொருத்தமான சிகிச்சைத் திட்டம் பின்பற்றப்பட வேண்டும். மருத்துவர், நோய்க்கு சிகிச்சையளிக்க உதவக் கூடிய, சில நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளையும், அதே போன்று காய்ச்சல் எதிப்பு மருந்துகளையும் பரிந்துரைக்கலாம்.
சிசுக்களுக்கு, ஒரு சில நாட்களுக்குக் காய்ச்சல் தொடர்ந்தால் கூட, மருத்துவனையில் சேர்க்க வேண்டிய தேவை ஏற்படலாம்.
வாழ்க்கைமுறை மேலாண்மை
காய்ச்சல் என்பது, ஒரு அந்நியமான பொருளின் காரணமாக, உடல் செயல்படும் முறையில் ஏதேனும் ஒரு சிறிய மாறுதலினால் ஏற்படும் ஒரு பொதுவான அறிகுறியாகும். அதனால், இதை சமாளிக்க உருவாக்கிய, கணிசமான மாற்றங்கள் எதுவும் இல்லை. வழக்கமாக காய்ச்சல், மன அழுத்தம் அல்லது உடலின் அதீத உழைப்பு அல்லது போதுமான ஓய்வின்மையின் காரணமாக ஏற்படுகிறது. அப்படியென்றால், காரணத்தை அழிப்பதற்குப் பொருத்தமான நடவடிக்கைகளை எடுங்கள். போதுமான அளவு ஓய்வு எடுங்கள் மற்றும் தியானம் செய்யுங்கள். இருமல் அல்லது வெப்ப வாதம் போன்ற தங்கி விடும் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய, தூசு மற்றும் அதிகமான சூரிய ஒளி/வெப்பம் போன்ற ஒவ்வாமைகளுக்கு எளிதில் இலக்காகக் கூடியவர் என்றால், அவற்றைத் தவிர்க்க முயற்சிக்கவும். சிறிய நோய்த்தொற்றுக்களைப் பிடித்துக் கொள்ளும் அபாயம் அதிகரிப்பதால், பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்வதைத் தவிருங்கள்.
போதுமான அளவு ஓய்வு எடுப்பது மட்டுமே, கையாள போதும் எனும் அளவுக்கு காய்ச்சல் எளிதானது, என்பது சில நேரங்களில் நிரூபணமாகிறது. உடலின் நீர்ச்சத்தை தக்க வைக்கவும், இரத்தத்தில் எலக்ட்ரோலைட் அளவுகளைப் பராமரிக்கவும், திரவ பானங்கள் எடுத்துக் கொள்வதை அதிகரியுங்கள். எளிதான ஆடைகளை அணியுங்கள், அதாவது, சுத்தமான ஆடைகளை அணியுங்கள் மற்றும் அறையைக் காற்றோட்டமாக வைத்திருங்கள். சுய சுகாதாரத்தைப் பராமரியுங்கள் மற்றும் குழந்தைகளுக்காக இருந்தால், தடுப்பூசி அட்டவணையைத் துல்லியமாகப் பின்பற்றுங்கள்.