சுருக்கம்
புற்றுநோய் என்பது, கட்டிகள் (திசுக்களின் திரள்கள் அல்லது புடைப்புகள்) வடிவத்தில் தோன்றுகின்ற, செல்களின் ஒரு அசாதாரணமான வளர்ச்சியைக் கொண்டு வகைப்படுத்தப்படுகிற நோய் ஆகும். புற்றுநோய் உடலில் உள்ள எந்த ஒரு உறுப்பையும், அல்லது திசுவையும் பாதிக்கக் கூடியது ஆகும். அது, மேலும் தீவிரமாகப் பிரிந்து உடலில் உள்ள பல்வேறு இடங்களுக்குப் பரவுகிறது, அல்லது ஒரே இடத்தில் வளரத் தொடங்குகிறது. இந்த குணத்தின் அடிப்படையில் கட்டிகள் அதிக தீங்கற்றவையாகவோ (பரவாதவை), அல்லது தீங்கு விளைவிக்கக் கூடியவையாகவோ (பரவுகின்றவை) இருக்கின்றன.
பல்வேறு வகை புற்றுநோய்களுக்கான காரணங்கள் வேறுபடுகின்றன. இருப்பினும் சில வழக்கமான வகை புற்றுநோய்களுக்கான காரணங்களாக, மரபணு கோளாறு, மன அழுத்தம், புகைப்பிடித்தல், மது அருந்துதல், நார்ச்சத்து குறைவான ஒரு உணவுமுறை, வேதிப்பொருட்கள் மற்றும் கதிர்வீச்சுக்கு ஆளாகுதல், மற்றும் பல காரணங்கள் உள்ளன. புற்றுநோயைக் கண்டறிதல், ஒரு உடலியல் பரிசோதனை. எக்ஸ்-ரேக்கள், CT ஸ்கேன், MRI மற்றும் PET ஸ்கேன் ஆகியவற்றின் மூலமாக செய்யப்படுகிறது.
புற்றுநோய்க்கான காரணங்கள் மற்றும் அபாய காரணிகளை தவிர்ப்பதன் மூலம், புற்றுநோய்கள் ஏற்படுவதை ஒரு பரந்த அளவில் தடுப்பது சாத்தியமானதாகும். புற்றுநோய்க்கான சிகிச்சை, ஒற்றை முறையாக, அல்லது கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை, மற்றும் அறுவை சிகிச்சை போன்ற பலவித சிகிச்சை முறைகளைக் கொண்டதாக இருக்கிறது. குறிப்பிட்ட வகை புற்றுநோய்கள், அவற்றின் ஆரம்ப கட்டத்தில் கண்டறியப்பட்டு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டால், முழுமையாக குணப்படுத்தக் கூடிய சாத்தியமுள்ளவையாக இருக்கின்றன. இது எப்போதும் சாத்தியமற்றது என்றாலும் கூட, அந்த நபரின் வாழ்க்கையை சௌகரியமானதாக ஆக்குவதற்காக அதன் பரவுதலைக் கட்டுப்படுத்த, மற்றும் சிக்கல்களைக் குறைக்க பல்வேறு வகை சிகிச்சை தேர்வுகள் உள்ளன.